Thursday, September 24, 2009

ஓர் இனிய துவக்கம் ...


அன்பிற்கினிய வலைஉலக நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான முதற் வணக்கம்.

நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் என்னுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற என் கனவு இன்று நிஜமாகியது என்றால் அதற்கு முழு முதற் காரணம் உங்களை போன்ற சக பதிவர்களும், சுதந்திரமான சுய கட்டுப்பாட்டுடன் வளைய வரும் இந்த வலை உலகமும் தான் என்றால் அது மிகை அல்ல.

எப்படி ஒரு டாக்டர் சுயமாக ப்ராக்டிஸ் செய்வதற்கு முன் ஒரு ஹவுஸ் சர்ஜனாக தொழில் கற்றுக்கொள்கிராரோ, எப்படி ஒரு தமிழ் சினிமா டைரக்டர் பல ஆங்கில படங்களை பார்த்து தமிழில் ஒரு ஆக்க்ஷன் படம் பண்ண ஆரம்பிக்கிறாரோ (ஆரம்பிச்சிட்டான்டா), எப்படி ....வேணாம் இத்தோட உதாரணம் சொல்றத நிறுத்திக்கிறேன்... அதுபோல்தான் நானும் கடந்த 4-5 வருடங்களாக பல பிளாக்குகளை மேய்ந்து இன்று முதல் நாமும் சொந்த படம் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

என் படங்கள் நிச்சயமாக ஒரு கமர்ஷியலான, கருத்துள்ள, ஜனரஞ்சனமானதாக (அப்பா இப்பவே கண்ண கட்டுதே ) இருக்கும் என்பதில் எனக்கு ஐயம்மில்லை. படத்தை அவ் அப்போது   பார்த்து நல்லா இருக்கு, இல்லைன்னு சொன்னீங்கனா அதுக்கு தகுந்த மாதிரி எண்ணை மாத்திக்கிறேன். 

Last but not the least -  என்னை எழுத தூண்டிய இட்லிவடை, பாமரன், டுபுக்கு, வால்பையன், bostonsriram, அவீங்க மற்றும் அனைத்து வலைஉலக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


வாழ்த்துங்கள் வளர்கிறேன்... வசவுங்கள் திருத்திக்கொள்கிறேன்...

- ஆதிமனிதன்


share on:facebook


Economy class = மாட்டு வண்டி



அமெரிக்காவுல உள்ளவனெல்லாம் பணக்காரனும் இல்ல... ஆப்ரிகாவுல இருக்கிறவெனல்லாம் ஏழையும் இல்லை...

இது நிறைய பேருக்கு தெரிவது இல்லை. இல்லைனா நம்ம மத்திய இணை அமைச்சர் சசி தாரூரின் "மாட்டு வண்டி" பேச்சிக்கு இவ்வளவு விமர்சனகள் வந்திருக்காதுனு என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

நானெலாம் ஒரு காலத்தில் மாட்டுவண்டியில் போனவன்தாங்க. ஏதோ அப்படி இப்படின்னு படிச்துனால பின்னால டிரைன்ல போற அளவுக்கு முன்னேறி, பல நாள் உக்காந்துகிட்டே (துண்டு போட்டு புடிச்சு இடத்துலதான்) மெட்ராஸ் மும்பைனு போன அனுபவமும் இருக்குங்க.

இப்படி வானத்துல மட்டுமே ப்லைடையும் ஹெலிகாப்டரையும் அண்ணாந்து பார்த்துகிட்டு இருந்தவனுக்கும் அடிச்துங்க ஒரு யோகம். அதாங்க IT கம்பனியில வேலை.

அதுக்கப்புறம் நிறைய தடவ நானும் பிளைடுல பறந்துருக்கங்க (economy class-ல தான்). எத்தனவாட்டி எத பண்ணாலும் அந்த மொத அனுபவம் இருக்கே .. அப்பப்பா.. (நீங்க எதையாவுது நினைச்சுகிட்டா நான் பொறுப்பில்லைங்கோ...)

அப்படிதாங்க என் மொதல் பிளைட் அனுபவம். அம்மா, அப்பா, மாமான்னு ஒரு பெரிய கூட்டமே நம்மள வழி அனுப்ப வந்திருந்தாங்க. நானும் ஏதோ சாதிக்கவே பிறந்தவன் மாதிரி எல்லாருக்கும் TATA, BYE, BYE சொல்லிட்டு உள்ள போனேங்க. எல்லா சோதனைகளையும் முடித்து சற்று காத்திருப்புக்குப்பின் ஒரு வழியா பிளைட்ல வலது கால எடுத்து வச்சப்போ என்னைய நானே எண்ணி பெருமைபட்டுக்கொண்டேன். ஆகா நம்மளும் ஏரோப்பிலேன் ஏறிட்டம்லனு.




எல்லாம் நல்லாதாங்க இருந்துச்சு ப்ளைட் உள்ளார போற வரைக்கும்.


அம்மணிகள் சொன்ன வணக்கத்துக்கு எல்லாம் பதில் வணக்கம் சொல்லிவிட்டு உள்ள பார்த்தா! அட அட இதுவல்லவோ ஏரோப்ளேன், இப்படி சோபா மாதிரி சீட்டுல உக்காந்து போன அமெரிக்க என்ன அன்டார்டிகாவுகே போகலாம்முனு என்னோட சீட்ட தேடினா அந்த வரிசை வரவேயில்ல. திடீர்னு ஸ்க்ரீன் ஒன்னு நம்ம மறச்சது.

திரு.. திருன்னு... முழிச்சிக்கிட்டு நின்னத பார்த்து Excuse me ... அப்படின்னு ஒரு airhostess கூப்பிட்டு May I help you அப்படின்னுச்சு. அப்பாடான்னு என்னுடைய டிக்கெட்டை காண்பித்து எங்க இருக்குனு கேட்டேன். திரையை விலகிவிட்டு உள்ளே போகும்படி கூறினார். என்னடாது train-ல மாதிரி உள்ளே கூபே ஏதும் இருக்குதோன்னு ஆசையா உள்ளே நுழைஞ்சா... என்னமோ கவுண்டர் கட்டி வுட்ட மாதிரி வரிசையா சீட்டுங்க தெரிஞ்சது. அட நம்ம பல்லவன்ல கூட ரெண்டு வரிசைக்கு நடுவுல நல்ல இடைவெளி இருக்கும்க. ஆனா இங்க என்னடானா ஒரு ஆளு கொஞ்சம் கணமா இருந்தா நேரா நடக்க முடியாதுங்க. அவ்வளவு சின்ன பாதை.

சரின்னு ஒருவழியா என்னோட சீட்ட கண்டுபுடிச்சு உக்கார போனா அது மூணு சீட்டுக்கு நடுவுலையா இருக்கணும். சன்னல் பக்கம் உட்கார்ந்து இருந்தவரு எப்படி உள்ள போயிருப்பாருனு (அவ்வளவு குண்டு) நினைச்சுகிட்டு இருக்கும் போதே முதல் சீட்ல இருந்த பொண்ணு (ஹிஹி...பொண்ணு) எழுந்து எனக்கு வழி விட்டது. தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஒரு வழியா என்னை சரிபடித்திக்கிட்டு உக்கார்ந்தேன்.

அப்பாடி... இந்த ticketing, immigiration, customs எல்லாம் முடித்து வருவதற்குள் தாவு தீர்ந்துடிச்சு. இந்த எகனாமி கிளாஸ் அவ்ளோ கேவலமா என்ன? நாமல்லாம் கால்கடுக்க கியூல நின்னா இந்த first class மக்கள் மட்டும் ஜம்முனு நிக்காம போய்டே இருக்கானுக...

கொஞ்சம் தண்ணி குடிக்கணும் போல இருந்தது. எதிர்பட்ட airhostess-கிட்ட கொஞ்சம் தண்ணி கேட்டேன். சிறிது (10 நிமிஷம்...) கழித்து தம்மாதுண்டு கப்ல கொண்டு வந்து கொடுத்துச்சு. அது தொண்டைய கூட நனைக்கல. மடக்கு மடகுன்னு ரெண்டு வாய்ல குடிச்சுட்டு One more cup please-னு திரும்பவும் கேட்டா அது என்னமோ என்னைய வித்யாசமா பாத்துச்சு (பாரின்ல ஒரு கப் ட்ரிங்க்ஸ்ச ஒரு மணி நேரம் குடிபானுகனு என் நண்பன் சொன்னது இப்பதான் ஞாபகத்துக்கு வந்துச்சு).

ஒரு வழியா flight கிளம்புவதாக அறிவிப்பு வர ஊர்ல உள்ள எல்லா சாமியையும் வேண்டிக்குட்டு கண்ணை மூடினேன். அப்பா! என்ன ஒரு வேகம். அது கிளம்பின வேகத்துல எனக்கு அடிவயிறு கலங்கிடுச்சு. மேலேர்ந்து பார்த்தால் அட நம்ம சென்னை கூட ரொம்ப அழகா தெரியுதுங்க! அதுவும் நம்ம கடற்கரை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. Flight இப்போ மேக மூட்டத்தினூடே செல்வதை என்னால் காண முடிந்தது.

அப்போதானா எனக்கு ...ச்சா வர வேண்டும். பக்கத்தில் உள்ள பெண்ணிடம் excuse me சொல்லிவிட்டு எழ எத்தனித்தேன். எங்கிருந்தோ வந்த பணிப்பெண் மேலே உள்ள பெல்ட் sign-ஐ கண்பித்து என்னை எழ கூடாது என சைகையாலேயே கூற எனக்கு எப்படி சொல்வதென்றே தெயரியவில்லை. என்னடாது நமக்கு வந்த சோதனை காலம்... ஓடுற டிரைன்லையே ..னுக்கு அடிச்ச நம்மை இப்ப இப்படி கொடுமை படுத்துராங்களேனு நொந்துகிட்டே மீண்டும் உக்கார்ந்தேன்.

ஒரு வழியா சிறிது நேரம் கழித்து பெல்ட் sign அணைய எழுந்திருச்சி அவசரமா toilet நோக்கி போனா அங்கன எனக்கு முன்ன ஒரு அஞ்சு பேர் லைன்ல நிக்குரானுங்க.


ஆத்திரத்த அடக்கினாலும் ..... அடக்க முடியுங்களா? ஒரு வழியா காத்திருந்து உள்ள போயி வெளியே வரத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு எனக்கு. இனி ஊர் போய் சேரும்வரை பாத்ரூம் பக்கமே வரக்கூடாது ஒரு முடிவோட என் சீட்டுக்கு சென்று அமர்ந்தேன்.

சிறுது நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது. யப்பா சாமி ... அந்த துக்குநோண்டு எடத்துல முன்னாடி சாப்பாடு பிளேட்ட வச்சிக்குட்டு ஒன்னு ஒண்ணா எடுத்து எப்படித்தான் சாபிடறதோ... இதுல cheese-எ வெண்ணைன்னு எடுத்து சாதத்தில் கலந்ததும், bun-ஐ சாம்பாரில் நனைத்து சாப்பிட்டதும் தனி கதை. எப்படியோ ஒன்பது மணி நேர பயணம் முடிஞ்சு மீண்டும் ஏர்போர்ட் போய் சேர்ந்தபோது எனக்கு இந்த கேள்விகள் தான் எழுந்தது.

1. சசி தாரூர் economy class-அ cattle class-னு சொன்னது சரிதானோ?***
2. Economy கிளாஸ்-இல் வசதியா பயணம் செய்ய வாய்ப்பே இல்லையா?
3. First class இட வசதியை கொஞ்சம் குறைத்து economy class-இல் கொஞ்சம் கூடுதல் இட வசதியை ஏற்படுத்த கூடாதா?
4. இந்த பதிவ பார்த்தா சசி தாரூர் எனக்கு நன்றி சொல்வாரா?

***நான் வண்டிய தாங்க சொல்றேன் பயணிகள அல்ல.

என்னை பொறுத்தவரை நீண்ட தூர விமான பயணம் அதிலும் economy கிளாஸ்-இல் பயணம் செய்வது ரொம்ப கொடுமை. அதை மாட்டு வண்டியோடு ஒப்பிடுவது கூடவே கூடாது. மாட்டு வண்டி பயணம் என்பது ஒரு த்ரிலான சுகமான அனுபவம். அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.

ரொம்ப படுத்திட்டேனோ? மொதோ பதிவு. நல்லா இருந்தா வாழ்த்துங்கள் வளர்கிறேன். குற்றம் குறை இருந்தால் எடுத்து சொல்லுங்கள் திருத்திக்கிறேன்.  நன்றி. 

- ஆதிமனிதன்

share on:facebook