எத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousewife.com பற்றி கேள்விப் பட்டேன். இந்தியா பற்றி ஒரு வெளி நாட்டவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது.
அமெரிக்கா பற்றி நான் எழுதும் பதிவுகள் எத்தனை பேருக்கு பிடிக்கிறது அல்லது படிக்க சுவாரசியமாக இருக்கிறது என எனக்கு தெரியாது. ஆனால், ஆஸ்திரேலியா விலிருந்து சமூக சேவை செய்ய கொல்கட்டா சென்று அங்கு ஒரு நைட் கிளப்பில் DJ வாக இருந்த இந்தியரை திருமணம் செய்து கொண்டபின் மும்பையிலேயே குடும்பமாக செட்டில் ஆகி விட்ட "ஷறேல்' தன்னுடைய whiteindianhousewife.com மூலம் இந்தியாவை பற்றி அவர் எழுதும் பதிவுகளும் (ஆங்கிலத்தில் தான்), அவர் எழுதிய புத்தகங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவரின் பதிவுகளில் ஒன்று இரண்டு சாம்பிளுக்காக (தமிழாக்க சுருக்கம் கீழே) ...
5 Things About India that Attract Me
என்னுடைய தற்போதைய வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு இந்தியா சென்றதை பார்த்து சிலர் நான் பைத்தியம் என்று கூட நினைப்பார்கள். ஆனால், என் கணவரை காதலிக்க தொடங்கும் முன்னே நான் இந்தியாவை காதலிக்க தொடங்கி விட்டேன் என்று கூறும் அவர், தான் முதன் முறை 2000 ஆம் ஆண்டு இந்தியா சென்ற போது இந்தியாவின் பரந்த, ஆழமான முழு வாழ்க்கை முறையை பார்த்து மனதை பறி கொடுத்து விட்டதாக எழுதி இருக்கிறார்.
இந்தியாவை அவருக்கு பிடித்ததற்கான ஐந்து காரணங்கள் கீழே...
1. India is Untamed - எங்கு பார்த்தாலும் எப்போதும் ஏதாவது ஒன்று புதுசாக இருந்து கொண்டே இருக்கும். அதனால் வாழ்க்கை போரடிக்காது. மிகவும் சுவாரசியமாக போய்க் கொண்டே இருக்கும்.
2. Incense - இந்திய ஊது பத்திகள் மற்றும் நறு மணங்கள் தன்னை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்த்திருப்பதாகவும், காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் அதை ஏற்றி வைத்து நறு மணத்தை அனுபவிப்பது இன்னமும் அவருக்கு புது குதூகலத்தை குடுப்பதாக கூறுகிறார்.
3. Mystery - இந்தியா பழமையான நாடு. அங்கு கண்டு பிடிக்கவும் தெரிந்து கொள்ளவும் நிறைய உள்ளது. அதன் வரலாறு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவை எல்லாம் இந்தியா அவ்வப்போது சிறிது சிறிதாக தான் வெளி படுத்தும். அதனால் இந்தியா பற்றி நான் இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை இந்தியாவில் இருக்க தூன்றுகிறது.
4. Spirituality - நான் ஒரு மதவாதி இல்லை. ஆனால், ஒரு நம்பிக்கைவாதி. என்னுடைய பெற்றோர் எனக்கு எந்த மதத்தையும் சொல்லி தரவில்லை. ஆனால், இந்தியா வந்த பிறகு இந்தியர்களின் கடவுள் மீதான நெருக்கத்தை கண்டு வியந்தேன். கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதற்கு இந்தியா தான் சிறந்த எடுத்துக் காட்டு. அதிலும் ஹிந்து மதத்தில் கடவுளை காண பல வழிகள் உள்ளது. அது மனதுக்கும் உடம்பிற்கும் ஏற்றதான ஒரு மதம் என்று கூறுகிறார். இந்தியா தான் தனக்கு வாழ்க்கை என்றால் என்ன? மரணம் என்றால் என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ள உதவியதாக குறிப்பிடுகிறார்.
5. Clothes - நான் இந்திய உடைகளை மிகவும் விரும்புவேன். அதன் வண்ணங்கள், வடிவமைப்பு, ஆபரணங்கள் மற்றும் உடை அலங்காரங்கள் எனக்குள் ஒரு பெரிய மாற்றத்திற்கு உருவாக்கியது என்கிறார்.
Should I Move To India? என்ற பதிவில் இந்தியா செல்லலாமா என்ற அவருடைய வாசகர்களின் கேள்விகளுக்கு அவருடைய அனுபவத்தின் பேரில் பதில் அளித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா செல்வதற்கும் அங்கேயே சென்று வாழ்வதற்கும் நிறைய வித்தாயசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மைதானே.
இந்தியா ஏன் செல்ல வேண்டும் என அவர் சொல்லும் காரணங்கள்...
# ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க...
# புதிய அனுபவங்களை அனுபவிக்க...
# ஏனென்றால் உங்களுக்கு இந்தியாவின் கலாச்சாரம் பிடித்து இருக்கிறது...
இந்தியா ஏன் செல்ல வேண்டாம் என அவர் சொல்லும் காரணங்கள்...
# உங்களுடைய தற்போதைய பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக ....
# உங்களுடைய தற்போதைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக...
இன்னும் நிறைய இருக்கிறது அவருடைய வலை தளத்தில்...பிடித்தால் படித்துப் பாருங்கள்.
பி. கு. படத்தில் இருப்பது 'ஷறேல்' அல்ல.
அமெரிக்கா பற்றி எனக்கு பிடித்த சில பதிவுகள்.
அனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்
கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.

share on:facebook
8 comments:
ஒரு மூன்றாம் மனிதரின் பார்வையில் நம்மைப்பற்றி அறிந்துகொள்வது எவ்வளவு சுவாராசியமோ அவ்வளவு சுவாராசியம் நம் தேசத்தைப்பற்றி பிற நாட்டவர்கள் சொல்வதை கேட்கும்போதும் ஏற்படுகிறது..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
நம் நாட்டை பற்றி வெளிநாட்டினரின் பார்வையில் படிப்பது நன்றாகத்தான் இருக்கு
தமிழ்மணத்தில் இன்றைய சூடான இடுகையில் முதல் ஐந்தாவது இடத்தில் :
இந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்
தமிழ்ப்பதிவுகளையே எத்தனை முறை படிப்பது என்ற மன அசதி, ஆதங்கத்தினால் உந்தப்பட்டு, மற்ற மொழிகளில்
வெளியாகும் வலைப்பதிவுகளைப் படிப்பது, குறிப்பாக அமெரிக்க, மற்றும் ஐரோப்பா பகுதி வாழ் மக்கள் எழுதும் வலைகளைப் படிப்பதும் எனது பொழுது போக்கும் ஆகும்.
இதனால் பல உண்மைகள் புலப்படுகின்றன.
1. பொதுவாக, இந்த வலைகளில் ஒரு செயற்கை இல்லை. எதையும் ஒளிக்காது மனம் புரிந்தவாறு சொல்லும் நேர்மை. .
2. ஒரு சராசரி குடிமகன் தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதை வெளிச்சத்திலே செய்கிறான். குடும்ப உறவுகளிலும், சமூக உறவுகளிலும் , ஒரு இரட்டை நிலை பொதுவாக இல்லை.
3. அன்றைய தினசரி வாழ்வில் லஞ்சம் பெரிதும் இல்லை. ( நாயகன் சினிமாவில் வசனம் வருகிறதாமே ... அதை
விஜய் டிவியில் வரும் சூர்யா ப்ரோக்ராம் பார்த்துத் தான் தெரிந்தேன். நான் எந்த ஒரு சினிமாவையும் முழுமையாக தியேட்டரில் பார்த்து ஒரு 40வருடங்களுக்கு மேல் ஆகிறது ) கடமையிலிருந்து பிறள்வதற்குத் தான் அங்கே லஞ்சம்
யத்தனிக்கப்படுகிறது. நம்மைப்போன்ற ஆசிய நாடுகளில் நிலைமை வேறு. கடமையைச் செய்வதற்கே லஞ்சம் வாங்கப்படுகிறது. இதனால் மக்களது அன்றாட வாழ்வு எளிதாக இருக்கிறது.
4. வலைப்பதிவுகளில் கூட்டம் சேர்ப்பதற்காக சமூகத்தில் பிளவுகளை அதிகரிக்கச் செய்யும் இயல்புடைய விஷயங்களைப்பற்றி இவர்கள் எழுதுவதில்லை. குறைந்த பட்சம், அந்த மாதிரியான வலைப்பதிவுகள் என் கண்ணில் படவில்லை.
5. கருத்துக்கள் மாறுபடுவதை இயற்கை எனவே நினைக்கிறார்கள். தமது நிலைப்பாடிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் தமது முன்னேற்றத்துக்கு ஒரு வழியாகவும் நினைக்கிறார்கள்.
முடிக்கும் முன் ஒரு கருத்து.
மற்ற நாடுகளில் குடியேறி அங்குள்ள இனத்தாரைத் திருமணம் செய்துகொண்ட பலரை எனக்குத் தெரியும்.
அவர்களும் நீங்கள் குறிப்பிட்ட பதிவாளர் மன நிலையை ஒத்தவாறு எழுதுவார்களா எனத் தெரியவில்லை.
சுப்பு ரத்தினம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர்: ஆம். நீங்கள் சொல்வது உண்மை.
நன்றி ஹாஜா: ஆம், சுவாரசியமாக இருந்ததால் தான் நானும் பகிர்ந்தேன்.
நன்றி சூரி: விரிவான கருத்துக்கும் "சறேல்" போல் அதை ஐந்தில் அடக்கியதற்கு.
Having read this I believed it was very informative. I appreciate you
taking the time and energy to put this information together.
I once again find myself personally spending way too much time both reading and posting
comments. But so what, it was still worth it!
Review my webpage :: old holborn yellow
Thanks for finally talking about > "இந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்" < Liked it!
Also visit my weblog - drum tobacco
இந்தப் பதிவில் அந்த அம்மையார் இந்தியாவை புதிய வேடிக்கைப் பொருளாகப் பார்ப்பதாகவே தெரிகின்றது.அய்போப்பியநாடு ஒன்றைக்கண்டபிந்தான் சொல்கிறேன்.அங்கே மக்கள் வாழ்கிறார்கள். இங்கே மத்மூடநம்பிக்கைகள் மக்கலை ஆள்கின்றன.
Post a Comment