Tuesday, September 10, 2013

வெள்ளைக்கார புள்ளைத்தாச்சி


நடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆளாவர். உதாரணமாக லைட் போட வேண்டும் என்றால் சுவிட்சை மேலே அமுக்கினால் தான் அங்கு 'ஆன்'. (பெரும்பாலான) பூட்டுக்கள் கிளாக் வைஸ் திருப்பினால் அது லாக் ஆகும். நம்மூரில் அது ஓபன் ஆகும். இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். என்னடா தலைப்பிற்கும் சப்ஜட்டுக்கும் சம்மந்தம் இல்லை என பாக்குறீங்களா? மேலே படியுங்கள்.

மேற்சொன்ன பல விஷயங்கள் நான் அங்கு போவதற்கு முன்பே எனக்கு தெரியும். காரணம் அங்கு சென்று வந்த நண்பர்கள் கூறி கேட்டது. பலருக்கும் கூட தெரிந்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் என்னை மிகவும் கவர்ந்தது இரண்டு விஷயங்கள். 1. குழந்தை வளர்ப்பு. 2. மாசமாக இருக்கும் பெண்கள்.

முதலில் குழந்தை வளர்ப்பை பார்ப்போம். கை குழந்தைகளை அவர்கள் கையாளும் முறை சற்றே வித்தியாசமானது. நம்மூரில் குழந்தை பிறந்து ஒரு 3-5 மாதங்கள் நம்மிடம் கொடுக்க கூட மாட்டார்கள். கேட்டால், உர விழுந்துடும், கழுத்து நிக்கல பார்த்து புடி அப்படி இப்படின்னு, ஆனால் அங்கு பிறந்து ஒன்றிரண்டு நாள் குழந்தைகளை நெஞ்சில் தொட்டி மாதிரி (முண்டா பனியன் மாதிரி) ஒரு பையை மாட்டிக்கொண்டு அதற்குள் குழந்தையை உட்கார்ந்த வாக்கில் வைத்துக்கொண்டு வேக வேகமாக நடப்பார்கள். அந்த குழந்தையின் கழுத்து பெரும்பாலும் கீழே தொங்கியபடி தான் இருக்கும்.

அதே போல் கைகுழந்தையை கூட குழந்தையின் ஒரு கையை பிடித்து தூக்கி பார்த்திருக்கிறேன். அப்போதும் குழந்தையின் கழுத்து கீழே தொங்கியபடி தான் இருக்கும். ஏன் அந்த ஊர் குழந்தைகளுக்கு மட்டும் கழுத்தில் உரம் விழ வில்லை?

அதே போல் நான் கவனித்த இன்னோர் விஷயம் குழந்தைகளுக்கு ஊசி போடுவது. கைகுழந்தைகளை கூட அங்கு உட்கார வைக்கிறார்கள். உட்கார வைத்து ஏதோ மாட்டுக்கு குத்துவது போல் ஊசி குத்துகிறார்கள் சாரி போடுகிறார்கள். 


இரண்டாவது, மாசமாக இருக்கும் பெண்கள். மூன்று மாதங்கள் என்று தெரிந்தாலே இங்கு அப்படி நடமா, இப்படி உட்காரும்மா என்று மாசமாக இருக்கும் பெண்களுக்கு பயங்கர அட்வைஸ் செய்து கேட்டிருக்கிறேன். ஆனால் அங்கு ஒருவர் மாசமாக இருப்பது அவரின் வயிற்றை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும். மற்றபடி மற்றவர்களை விட அவர்கள் மிகவும் வேகமாக நடப்பதும், எப்போதும் போல் வண்டி ஓட்டுவதும் அவர்களின் செயல்களை பார்த்தால் நமக்கு பயமாக இருக்கும்.

அதே போல் பிரசவத்திற்கு முதல் நாள் அல்லது அந்த நிமிஷம் வரை வேலைக்கு செல்வார்கள் (ஆனால் எந்த நிமிடமும் அவசர உதவி 911 அவர்களுக்கு கிடைக்கும் என்பது வேறு). இதற்க்கு வேறு ஒரு காரணமும் உண்டு. நம்மூர் போல் மருத்துவமனையில் போய் தேவை இன்றி நாமும் படுத்துக்கொள்ள முடியாது. மருத்துவமனைகளும் அதற்க்கு  அனுமதிக்காது. பெரும்பாலும் மருத்துவ காப்பீடு மூலமே அங்கு சிகிற்சைகள் மேற்கொள்ள படுவதுதான் அதற்க்கு காரணம். இல்லை என்றால் பிறகு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பதில் சொல்ல நேரிடும்.

பிரசவத்தின் போது கணவர் உடன் இருப்பதும், குழந்தை பிறந்தவுடன் அதை புகைப்படம் எடுத்து வெளியிடுவதும் அங்கு வழக்கம். இன்னொரு விசித்திரமான நடைமுறை/சட்டம் அங்கு உண்டு. பிரசவத்திற்கு பிறகு மனைவி குழந்தையை வீட்டுக்கு அழைத்து செல்லும் முன் உங்கள் காரில் குழந்தையை வைத்து எடுத்து செல்வதற்கான பேபி சீட் பொருத்தப்பட்டுள்ளதா அது குழந்தையின் எடையை தாங்குமா என பரிசோதித்த பின்னே அவர்களை டிஸ்சார்ஜ் செய்வார்கள்.

'ஆ'மெரிக்க கதைகள் தொடரும்....


share on:facebook

Thursday, September 5, 2013

பதிவர் விழா Teaser photos- No offense please

பதிவர் விழாவில் எதார்த்தமாக கிளிக்கிய சில புகைப்படங்கள் இங்கே. யார் மனதையும் புண்படுத்தாது என்ற நம்பிக்கையில் வெளியிட்டு உள்ளேன். ஆட்சேபனை இருந்தால் குறிப்பிட்ட படங்கள் உடன் நீக்கப்படும்.


சார். எளிய பதிவர் பற்றி ஒரு பேட்டி வேண்டும். உங்களுக்கு வசதி எப்படி?


நான் சின்ன பிள்ளையா இருந்ததிலிருந்து பதிவு எழுதிகிட்டு வரேன். நான் ஒரு சீனியர் பதிவர் தான். சொன்னா நம்புங்கப்பா...



சார். ஒன்ஸ் மோர் ஸ்மைல் ப்ளீஸ்....


சீக்கிரம் போட்டோ எடுங்கப்பா. எவ்வளவு நேரம் போஸ் கொடுத்து கிட்டே இருக்கிறது?




எனக்கு அடுத்த ஆண்டு மட்டும் பதிவர் விழாவில் பிரியாணி கிடைக்கல...அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஆமா சொல்லிப்புட்டேன்.

நன்றி.

share on:facebook

Wednesday, September 4, 2013

பதிவர் திருவிழாவும் - தினமணி செய்தியும்.

ஒரு வேலை ஒரு வட்ட செயலாளர் அல்லது ஒரு கவுன்சிலரோ இல்லை சின்ன திரை பெரிய திரை நடிகர் நடிகைகள் வந்திருந்தால் முதல் பக்கத்திலோ அல்லது விரிவான செய்தியாகவோ வந்திருக்கும். ஹ்ம்ம்...
Note this point your honor...


பி.கு. இது எதுவும் இல்லாமல் இத்துனூண்டு செய்தி போட்டதற்கே இவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.



share on:facebook

Tuesday, September 3, 2013

பதிவர் விழாவில் கலக்கிய பதிவர் சகோதிரிகள் - படங்கள் தொடர்ச்சி.

பதிவர் விழாவுக்கு பத்துக்கும் குறைவான பதிவர் சகோதிரிகளே வந்திருந்தாலும், அவர்களில் ஒரு சிலர் மேடை நிர்வாகம் மற்றும் மதிய உணவு நேரத்தில் மிகுந்த உதவியாக இருந்தனர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். பதிவர் சகோதிரிகள் தங்கள் படங்களையும் வெளியிட அனுமதி அளித்தால் வெளியிடுகிறேன். பின்னூட்டத்திலோ அல்லது இமெயிலிலோ தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

பதிவர் விழாவில் மைக் பிடித்தவர்களின் புகைப்பட தொடர்ச்சி. இதற்க்கு மேல் என் கேமராவில் இடம் இருந்தும் பாட்டரி தீர்ந்து விட்டதால், வேறு யாரேனும் விடு பட்டிருந்தால் I am sorry:(

சென்ற பதிவில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் அதை தெரிவிக்கவும். எடுத்து விடுகிறேன்.












































share on:facebook

Monday, September 2, 2013

பதிவர் திருவிழா: மைக் பிடித்த பதிவர்களின் புகைப்படங்கள் - A visual replay

ஞாயிறன்று நடந்த பதிவர் திருவிழாவில் விழா ஆரம்பித்ததிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு பகிர்ந்துளேன் (சகோதிரிகளின் படங்களை தவிர்த்து). ஒரு கட்டத்தில் பாட்டரி டவுன் ஆகி விட்டதால் மாலை வரை புகைப்படங்கள் எடுப்பதை தொடர முடியவில்லை. மேலும் சில/பல பதிவர்கள் பெயரையும் அவர்கள் பிளாக் பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள இயலாததால், யார் பெயரையும் இங்கு நான் போடவில்லை. மன்னிக்கவும்.


































மீதமுள்ள புகைப்படங்களின் தொகுப்பு நாளை ...

share on:facebook