பொதுவாக அமெரிக்கர்கள் மற்றும் மேலை நாட்டவர்களை நாம் அறிவாளிகளாகவே பார்த்து வருகிறோம். வெள்ளை தோல் உள்ளவர்களை எல்லாம் வெள்ளை காரர்கள் (ஆங்கிலேயர்கள்) என்று நாம் நினைத்துக் கொள்வது போல் தான் இதுவும்.
ஆனால், அமெரிக்கா சென்ற சிறு காலத்திலேயே அவர்கள் எல்லாம் அவ்வளவு அறிவாளிகள் இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனாலும் அவர்களால் மட்டும் எப்படி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக ஆக முடிந்தது என்பது தான் என் மிக பெரிய கேள்வி. அதற்க்கான பதில்..
பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் விருப்பம் போலவே கற்கிறார்கள். எதை ஆசை படுகிறார்களோ அதில் மட்டும் தங்கள் கவனத்தை செலுத்தி அத்துறையில் சாதித்து காட்டுகிறார்கள். ஒரு ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் கல்லூரி படிப்பை தொடர்வது ஐம்பது சதவிகிதத்துக்கு குறைவானவர்களே. அதற்க்கு காரணம், ஒன்று வேலை இல்லா திண்டாட்டம் அங்கு மிக குறைவு. மேலும் தங்கள் படிப்பிற்கும் தகுதிக்கும் என்ன வேலை கிடைக்கிறதோ அதையே விரும்பி செய்வார்கள். எதிர்காலம், குழந்தைகள் எதிர்காலம் என்றெல்லாம் அவர்கள் அதிகம் கவலை படுவதில்லை.
இரண்டாவது, யாரும் தங்கள் குழந்தைகளை வறுத்து எடுத்து இதை படி அதை படி என்று கட்டாயப் படுத்துவதில்லை. அப்படி கட்டாயப் படுத்தவும் முடியாது. கல்லூரி விரிவுரையாளராக இருப்பவர் சாதாரண மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என விருப்பப் பட்டு பள்ளியில் வேலை செய்பவரும், நான் ஐந்து ஆண்டுகளாக மூன்றாம் வகுப்புக்கு படம் எடுக்கிறேன் என பெருமையாக சொல்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆசைகள்.
இவை எல்லாவற்றையும் சொல்வதற்கு காரணம், பெரும்பாலான அமெரிக்கர்கள் மிக பெரிய ஆளாக வேண்டும் பெரிய வேலைக்கு செல்ல வேண்டும், மிக பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று கூட எண்ணுவதில்லை. இருந்தும் எல்லாவற்றிலும் அந்நாடு முன்னேறியதற்கு காரணம் அப்படி விருப்பப்படும் ஒரு சிலர் தங்கள் நிலையை அடைவதற்கு அங்கு எந்த தடையும் இல்லை. நேர் மாறாக அவர்களுக்கு தேவையான எல்லாம் கிடைக்கிறது. படிப்பு மட்டுமே வாழ்க்கையில் முன்னேற ஒரே படியாக அவர்கள் எண்ணுவதில்லை. அதே நேரம் மற்ற வகைகளில் அவர்கள் முன்னேறவும் அங்கு தடை இல்லை.
அதனால் தான் இன்று ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் பில் கேட்ஸ் வரை அனைத்து ஜாம்பாவன்களும் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் ஆனாலும் அவர்களால் நினைத்த இடத்திற்கு செல்ல முடிந்தது. ஒன்றுக்கும் உதவாதவர் என பள்ளியில் இருந்து அனுப்பப் பட்ட எடிசன் நூற்றுக்கணக்கான கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி செய்வதாலேயே அவர்களால் அதில் ஏதாவது ஒன்றை பிற்காலத்தில் சாதிக்க முடிகிறது என்பதே என் எண்ணம்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி செய்வதாலேயே அவர்களால் அதில் ஏதாவது ஒன்றை பிற்காலத்தில் சாதிக்க முடிகிறது என்பதே என் எண்ணம்.
அதே போல் அமெரிக்கர்களின் கண்டு பிடிப்புகளுக்கு அவர்களின் சோம்பேறித்தனமும் ஒரு காரணமோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு. அதையே வேறு வகையில் சொல்வதென்றால் உடல் உழைப்புக்கு அதிகம் வேலை வைக்காமல் அதையே சிறிய சிறிய கண்டு பிடிப்புகளால் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிக் கொள்கிறார்கள்.
அமெரிக்காவில் நான் வியந்த/ரசித்த சில விஷயங்கள்...
# வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் கூட நூறு நோட்டுக்களை சேர்ந்த மாதிரி எண்ணத் தெரியாது. அதை பத்து பத்து நோட்டுக்களாக தனி தனியாக எண்ணி வைப்பார்கள்.
அதனால் தானோ என்னவோ எங்கு பார்த்தாலும் அவர்கள் ஆட்டோமேடிக் வெண்டிங் மெஷின் வைத்திருக்கிறார்களோ...
# லோட் வண்டிகள் அனைத்திலும் பாரங்களை எளிதாக ஏற்ற இறக்க ஆட்டோமேடிக்காக இயங்கும் படிக்கட்டுக்கள் உண்டு. வீடு மாறும் போதெல்லாம் இம்மாதிரி வண்டிகளை வாடகைக்கு எடுத்தால் நாமே மொத்த பொருட்களையும் ஏற்றி இறக்கி விடலாம்.தனியாக பாரங்களை இறக்க லோட் மேன்கள் தேவை இல்லை.
# கடைகள் போன்ற நிறுவனங்களுக்கு பொருட்களை டெலிவெரி செய்ய நம்மூரை போல் ஒரு வேன் ஓட்டுனர், லோட் மேன், கலக்க்ஷன் ஏஜென்ட் என்று ஒரு படையே செல்லாது. ஒரே ஒருவர், அவரே வண்டி ஓட்டுவார், அழகாக 'டானா' ஷேப்பில் ஒரு சிறு வண்டி இருக்கும். அதில் எல்லா பொருட்களையும் அவரே எடுத்து வைத்து டெலிவெரி செய்வார். அவரே கலக்க்ஷன் செய்து கொள்வர்.
# பெரிய பெரிய மால்களில் நடந்து செல்வதை கூட சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு, நகரும் எலிவேட்டர் அமைத்து அதில் தான் நகர்ந்து செல்கிறார்கள்.
இன்னும் எவ்வளாவோ உதாரணங்கள் உள்ளன...நேரம் கிடைத்தால் பின்னாடி ஒரு ரவுண்ட் பார்க்கலாம்.
அதனால் தானோ என்னவோ எங்கு பார்த்தாலும் அவர்கள் ஆட்டோமேடிக் வெண்டிங் மெஷின் வைத்திருக்கிறார்களோ...
# லோட் வண்டிகள் அனைத்திலும் பாரங்களை எளிதாக ஏற்ற இறக்க ஆட்டோமேடிக்காக இயங்கும் படிக்கட்டுக்கள் உண்டு. வீடு மாறும் போதெல்லாம் இம்மாதிரி வண்டிகளை வாடகைக்கு எடுத்தால் நாமே மொத்த பொருட்களையும் ஏற்றி இறக்கி விடலாம்.தனியாக பாரங்களை இறக்க லோட் மேன்கள் தேவை இல்லை.
# கடைகள் போன்ற நிறுவனங்களுக்கு பொருட்களை டெலிவெரி செய்ய நம்மூரை போல் ஒரு வேன் ஓட்டுனர், லோட் மேன், கலக்க்ஷன் ஏஜென்ட் என்று ஒரு படையே செல்லாது. ஒரே ஒருவர், அவரே வண்டி ஓட்டுவார், அழகாக 'டானா' ஷேப்பில் ஒரு சிறு வண்டி இருக்கும். அதில் எல்லா பொருட்களையும் அவரே எடுத்து வைத்து டெலிவெரி செய்வார். அவரே கலக்க்ஷன் செய்து கொள்வர்.
# பெரிய பெரிய மால்களில் நடந்து செல்வதை கூட சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு, நகரும் எலிவேட்டர் அமைத்து அதில் தான் நகர்ந்து செல்கிறார்கள்.
இன்னும் எவ்வளாவோ உதாரணங்கள் உள்ளன...நேரம் கிடைத்தால் பின்னாடி ஒரு ரவுண்ட் பார்க்கலாம்.
share on:facebook
15 comments:
உங்க அமெரிக்க கட்டுரைகளை தொகுத்து ஒரு புக்கா போட்டுடலாம் ஆதி மனிதன். நிஜமா தான் சொல்றேன்
வெள்ளையர்களை சோம்பேறிகள் என்று சொல்ல முடியாது. அவர்கள் அறிவில் நம்மை விட முன்னோடிகள்! அதனால் தான் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த புதுப்புது இயந்திரங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். நம்மவர்கள் புதுப்புது மூட நம்பிக்கைகளையும் சாமியார்களையும் கண்டுபிடிக்கிறார்கள்.
As you know very well.. other few reasons how they become top in science & tech..(ruling the world)
1) no reservation(or very minor level not much political influences) on jobs
2) allowing anyone one to join even confidential program though he is of foreign origin (but with proper check and clearance prior to appointment) -- means giving imporatance to talent/work/dedication. -- & this is the key for success in any project.
3) giving importance to human value.. (unlike india).. and laws framed accordingly
blah.. blah.. blah..
என்னுடைய பாஸ் சொல்வார்.. Give the toughest job to the laziest person. He will find the easiest way to do that என்று. அதை விட முக்கியமான காரணம்.. இது தான் முடியும். இதன் படி செய்வோம் என்று எண்ணுவதே இல்லை. எப்படியும் இதை விட எளிதான முறை இருக்கும் என்று முயற்சித்துக்கொண்டே இருப்பது தான் இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன்
எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி செய்வதாலேயே அவர்களால் அதில் ஏதாவது ஒன்றை பிற்காலத்தில் சாதிக்க முடிகிறது என்பதே உண்மை...
எனக்குத் தெரிந்த, நான் கவனித்த இன்னொரு காரணம். அவர்கள், அதாவது வெள்ளைக்காரர்கள், எல்லாக் காரியங்களையும் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன், முழுமையாக செய்கிறார்கள். பாதி கிணறு தாண்டும் பழக்கம் அவர்களிடம் இல்லை. ஒரு வேலையை அரைகுறையாகச் செய்யும் பழக்கமும் அவர்களிடம் இல்லை.
# வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் கூட நூறு நோட்டுக்களை சேர்ந்த மாதிரி எண்ணத் தெரியாது. அதை பத்து பத்து நோட்டுக்களாக தனி தனியாக எண்ணி வைப்பார்கள்.
எண்ணத் தெரியாதவர்கள் இல்லை; வாடிக்கையாளர் வசதிக்காகவும், மொத்த எண்ணிக்கையில் குழப்பம் வராமலிருப்பதற்காகவும் வேண்டுமென்றே அவ்வாறு செய்கிறார்கள்.
சென்னை வங்கியில் ஊழியர் பலமுறை எண்ணுவார்; அதை வாடிக்கையாளரும் பல முறை எண்ணுவார்; அதற்குள் பின்னிருப்பவர் தன் கயை சன்னலுக்குள் நுழைத்துக் கொள்வார். வாடிக்கயாளர் எண்ணிக்கயில் குறைவு இருப்பதாகக் கூறினாலும் வங்கி ஊழியர் ஒப்பார்......
*****
எல்லா நட்டினரிடையேயும், எல்லா நிறம், சமூகம் எல்லாவற்றிலும், பலதரப்பட்ட அறிவு உள்ளவர்கள் உண்டு; வெள்ளைக்காரர்/இந்தியர்/தமிழர்/ இவர்கள் அதிக/குறைந்த புத்தி உடையவர்கள் என்று பொதுப்படுத்திப் பேசுவது போன்ற மூடத்தனம் கிடையாது.
@மோகன் குமார் said...
//உங்க அமெரிக்க கட்டுரைகளை தொகுத்து ஒரு புக்கா போட்டுடலாம்//
ஆஹா...நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது...
நன்றி மோகன். அப்படி போட்டா, ஒரு பத்து புத்தகமாவது உங்கள் மூலமா சேல்ஸ் பண்ணிடலாம்.
@மதுரை அழகு said...
//நம்மவர்கள் புதுப்புது மூட நம்பிக்கைகளையும் சாமியார்களையும் கண்டுபிடிக்கிறார்கள்.//
நன்றி அழகு. நல்லா சொன்னீங்க. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வருவதற்கு எங்கெங்கோ பயணித்து வந்து சேர்ந்தார். கேட்டால், அந்த திசையில் பயணித்தால் தான் உங்களுக்கு நல்லது என்று ஒரு ஜோசியக்காரர் சொன்னாராம்.
Agreed Mathavan.
//no reservation(or very minor level not much political influences) on jobs//
On the other side, everyone has the right to do/perform whatever they want to...education and other opportunities are open to all...I mean no oppression because of caste...
@bandhu said...
//என்னுடைய பாஸ் சொல்வார்.. Give the toughest job to the laziest person. He will find the easiest way to do that என்று//
சூப்பர். I like it Bandhu. Thanks for your comments.
நன்றி இராஜராஜேஸ்வரி.
@பழனி.கந்தசாமி said...
//அதாவது வெள்ளைக்காரர்கள், எல்லாக் காரியங்களையும் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன், முழுமையாக செய்கிறார்கள். பாதி கிணறு தாண்டும் பழக்கம் அவர்களிடம் இல்லை//
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
@Muthu said...
//வெள்ளைக்காரர்/இந்தியர்/தமிழர்/ இவர்கள் அதிக/குறைந்த புத்தி உடையவர்கள் என்று பொதுப்படுத்திப் பேசுவது போன்ற மூடத்தனம் கிடையாது.//
:(
ஒவ்வொரு இனத்திற்கும் என்று சில சிறப்பு தகுதிகள்/குணங்கள் உண்டு என்பது என் கருத்து. அதற்க்கு காரணம் நம் கலாச்சாரம், வளர்ந்து வரும் சூழல் இன்று. அமெரிக்காவில் கார் ஓட்டுவது ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. சைக்கிள் ஓட்ட தெரியாத இந்தியர்கள் கூட அமெரிக்கா வந்த பிறகு இங்குள்ள ப்ரீ வேயில் 100 மைல்களில் சர்வ சாதாரணமாக ஓட்டுவார்கள். ஆனால், அதே சமயம் தலைகீழாக நின்றாலும் ஒரு அமெரிக்கர் சென்னை போன்ற நகரங்களில் கார் ஓட்டுவது என்பது குதிரை கொம்பு.
//எல்லா நட்டினரிடையேயும், எல்லா நிறம், சமூகம் எல்லாவற்றிலும், பலதரப்பட்ட அறிவு உள்ளவர்கள் உண்டு//
இருந்தும் தங்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.
பதிவுக்கான என் பின்னூட்டம்.
சில பல நேரங்களில் அமெரிக்கா பற்றி எழுதும் போது, எல்லாவற்றையும் என்னால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. சில நேரங்களில் உண்மை சில பேருக்கு கசக்கும் என்பதாலும், நம்மை நாமே குறைத்து மதிப்பிட கூடாது என்பதாலும். நான் நினைத்ததில் பாதி எழுதி இருந்தாலும் பலர் தங்கள் கருத்துக்களை அழகாக கூறி இருந்தார்கள். வழக்கம் போல் அமெரிக்கா பற்றிய என் பதிவுக்கு நல்ல வரவேற்ப்பு. இரண்டு நாட்களாக தமிழ்மணத்தில் அதிகம் வசிக்கப் பட்ட இடுகைகளில் இப்பதிவு முதல் இரண்டு இடத்தில். மகிழ்ச்சி.
//
1) no reservation(or very minor level not much political influences) on jobs
//
a. Ever heard of affirmative action?
b. Why there is reservation? bcoz demand is much more than supply. When the first mover ensures monopoly and deny level playing field for the rest, obviously there will be house break-in.
Open up the supply and would there be fight after that?
Do you think there is a fight for engineering seats nowadays? There are 20K~30K seats go vacant every year in large states.
What prevented the netas and babus to open many schools and colleges till the late 80s to meet the pent-up demand?
Think baby think.
Post a Comment