Tuesday, March 27, 2012

அமெரிக்க டி.வி. சீரியல்களும் நம்மூர் அழுக்காச்சி டி.வி. தொடர்களும்


இந்தியாவில் இருந்தவரை ஆங்கில படமென்றால் அது ஆக்சன் படமாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றும் பலரும் அது போல் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஆங்கிலத்திலும் அருமையான படங்கள் வெளி வருகின்றன.

நம்மூர் பாலசந்தர், பாரதி ராஜாவெல்லாம் தோத்துப் போகும் அளவுக்கு இவர்களும் திரைப் படம் எடுக்கிறார்கள். என்ன ஒன்று. இதெல்லாம் அதிகமாக நம்மூரில் திரை இடப் படுவதில்லை. இப்போது கொஞ்சம் தேவலாம். இன்டர்நெட், டி.வி.டி. இவை எல்லாம் வந்த பின் நிறைய நல்ல ஆங்கில படங்கள் நம்மூருக்கும் வருகிறது.

திரைப் படங்களை விட்டு தள்ளுங்கள். டி.வி. தொடர்களில் நம்மூரை மிஞ்சும் அளவிற்கு இங்கும் மெகா தொடர்கள் உள்ளன. ஆனால், அவைகளை தினமும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவைகள் பெரும்பாலும் நகைச்சுவை கலந்த குடும்ப அல்லது நண்பர்கள் பற்றியதாக இருக்கும். சொல்வதற்கு பல தொடர்கள் இருந்தாலும் 'Friends' மற்றும் 'Everybody loves Raymond' ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை (பெரும்பாலானோருக்கு).

1996 முதல் 2005  வரை மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பான 'Everybody loves Raymond' அதன் இயக்குனர் ரே (ரேமன்ட்) என்பவற்றின் வாழ்வில்/குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக கொண்டு எடுக்கப் பட்ட தொடராகும். இத் தொடர்களில் வரும் பெரும்பான்மையான பாத்திரங்களும் அவரின் நண்பர்கள் மற்றும் உறவுகளின் வாழ்வில் நடை பெற்ற உன்னை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப் பட்டவையே ஆகும்.

முழுக்க முழுக்க மாமியார் மருமகள், கணவன் மனைவி, கொழுந்தனார், குழந்தைகள் என இவர்களை சுற்றியே ஒவ்வொரு எப்பிசொடுகளும் எடுக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் நகைசுவை 100 % கியாரண்டி. 2005 லேயே இத்தொடர் முடிவுற்றாலும் இன்னமும் தினமும் குறிப்பிட்ட சானல்களில் பழைய தொடர்களை மீண்டும் ஒளி பரப்பி வருகிறார்கள். அமெரிக்காவில் தினமும் உள்ள வேலை பளுவினால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் நீங்க ஒரு அரை மணி நேரம் இத்தொடரை பார்த்தால் போதும். மைன்ட் தானாக ரிலாக்ஸ் ஆகி விடும்.  

ரே, டெப்ரா இவர்கள் கணவன், மனைவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் (இரட்டை பிறவிகள்) ஒரு மகள். ரேவின் பெற்றோர் மேரி, பரோன். அதாவது டெப்ராவின் மாமியார் மாமனார். ரேவின் மூத்த சகோதரர் ராபர்ட். இவரின் காதலி (பிறகு இவரையே மணக்கிறார்) இவர்களை சுற்றியே பெரும்பாலும் எல்லா எப்பிசொடுகளும் இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் அனைத்து கருத்து மோதல்களும், சமரசங்களும், மாமனார் மாமியார் பிரச்சனைகள் என இந்தியாவில் நாம் அன்றாடம் பார்க்கும்/சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக நகைச்சுவையுடன் சொல்லி இருப்பார்கள். இவையெல்லாம் பார்த்த பின்தான் எனக்கே அமெரிக்காவிலும் மாமியார் மாமனார் கொழுந்தனார் பிரச்சனைகள் உண்டு என்பதை அறிந்து கொண்டேன்.

எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் ரேவின் தந்தை  பரோன், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் சப்போர்ட் செய்வார். இவர் குண நலன்கள் எல்லாம் என் தந்தையை நினைவு படுத்துவதால் எனக்கு இவரின் பாத்திரம் மிகவும் பிடிக்கும்.

மேரி. எப்போதும் தன் மருமகளிடம் குற்றம் கண்டு பிடிக்கும் இவர், தன் இளைய மகன் மீது மட்டும் கொஞ்சம் அதிகம் கரிசனை காட்டுவார். இதனால் பாதிக்கப் படும் டெப்ராவும், மூத்த மகன் ராபர்ட்டும் சமயம் வரும்போது  தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்துவது அழகு. அதே நேரத்தில் மனைவிக்கும், அம்மாவுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தில் ரே தவிக்கும் ஒவ்வொரு சீனும் அற்புதமாக இருக்கும்.

ஹ்ம்ம்..இன்னொன்றை மறந்து விட்டேன். ராபர்ட்டின் காதலியாக வந்து மனைவியாகும் ஏமி மற்றும் அவரின் பெற்றோர், அண்ணன் பத்திரங்களும் ரொம்ப வித்தியாசமானவை. அதே போல், ரேவின் குழந்தைகளாக வரும் கதாபாத்திரங்களும் தொடர்ந்து நடித்து வந்ததால் முதல் நூறு எப்பிசொடுகளில் கை குழந்தைகளாக வந்து கடைசி நூறு தொடர்களை பார்க்கும் போது அவர்கள் வளர்ந்திருப்பார்கள். இது இத் தொடர் முழுவதற்கும் ஒரு உயிரோட்டத்தை கொடுப்பதாகவே என் எண்ணம்.

இங்கு அமெரிக்காவில், Everybody Loves Raymond தொடர்கள் அனைத்தும் வீடியோ/CD களாக கிடைக்கின்றன. இணைய தளத்திலும் பல எப்பிசோடுகள் உள்ளன. முடிந்தால் பார்த்து விட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

குறிப்பு: சில எப்பிசொடுகளில் வரும் குறிப்பிட்ட காட்சிகள் சிறியவர்களுக்கு ஏற்றதல்ல.

share on:facebook

9 comments:

கோவை நேரம் said...

நம்மூர் மாதிரி வில்லி கள் இருப்பாங்களா..?

இராஜராஜேஸ்வரி said...

உயிரோட்டமுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

CS. Mohan Kumar said...

சீரியல் அல்லாம் பாக்குறீங்களா !!

தஞ்சை ரெண்டு நாள் போயிருன்தேன். காமிராவுடன் சுற்றி பல இடங்களை போட்டோ எடுத்துள்ளேன் ப்ளாகில் வெளியாகும் போது தஞ்சையின் பல இடங்களை நீங்கள் பார்க்கலாம்

நம்பள்கி said...

"குறிப்பிட்ட காட்சிகள் சிறியவர்களுக்கு ஏற்ரதல்லே"-- ஆங்கிலத்தில் அப்படியே இந்தியாவில் காட்டுகிறார்கள்.

அதை தமிழ் படுத்தினால் தான் A.

bandhu said...

Seinfield பிடிக்குமா.. முழுக்க முழுக்க சுயநலவாதிகளான நான்கு நண்பர்கள் குறித்த சீரியல்.. அருமையான நகைச்சுவை நிரம்பியது..

ஆதி மனிதன் said...

@Kovai Neram said...
//நம்மூர் மாதிரி வில்லி கள் இருப்பாங்களா..?//

நன்றி Kovai Neram:

நிச்சயமாக இல்லை. வில்லிகளுக்கு இங்கு இடமில்லை. அப்படி யாரும் இருந்தால் (நிஜத்தில்) டொமஸ்டிக் அப்யூசில் உள்ளே தள்ளி விடுவார்கள்.

ஆதி மனிதன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

@மோகன் குமார் said...
//சீரியல் அல்லாம் பாக்குறீங்களா !!//

ஆமாம். ஆனால் ஆங்கில சீரியல்கள் மட்டும் தான். தமிழ் சீரியல்களுக்கு எங்கள் வீட்டில் என்றுமே த(டா)டை.

//காமிராவுடன் சுற்றி பல இடங்களை போட்டோ எடுத்துள்ளேன் ப்ளாகில் வெளியாகும் போது தஞ்சையின் பல இடங்களை நீங்கள் பார்க்கலாம்//

தஞ்சையின் புகைப்படங்களுக்காக நீண்ட கமென்ட் வெய்டிங்...

ஆதி மனிதன் said...

@நம்பள்கி said...

//அதை தமிழ் படுத்தினால் தான் A.//

அப்படியா...

ஆதி மனிதன் said...

@bandhu said...

//Seinfield பிடிக்குமா.. முழுக்க முழுக்க சுயநலவாதிகளான நான்கு நண்பர்கள் குறித்த சீரியல்.. அருமையான நகைச்சுவை நிரம்பியது..//

ஆரம்பத்தில் பார்த்தேன்...பிறகு தொடர்ந்து பார்ப்பதில்லை.

Post a Comment