Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, January 28, 2013

விஸ்வரூபம்: ஹை கோர்ட்டு அறிவுரை! - என்ன செய்ய போகிறார் கமலஹாசன்?


விஸ்வரூபம் வழக்கை இன்று விசாரித்த ஹை கோர்ட் நீதிபதி, தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு கவலை, தமிழகத்தில் மத நல்லிணக்கம் மற்றும் விஸ்வரூபத்தில் கமலின் முதலீடு முதலியவற்றை கருத்தில் கொண்டு, 'நீங்கள் ஏன் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்ள கூடாது' என யோசனை தெரிவித்து உள்ளார்.

கமல் இன்று தான் அமெரிக்காவிலிருந்து இநதியா திரும்பி இருப்பதால் இதை பற்றி அவரிடம்  கலந்தாலோசித்த பிறகு கருத்து தெரிவிப்பதாக அவரின் வக்கீல் தெரிவித்து உள்ளார்.

மேலும் மாவட்ட கலெக்டர்கள் பிறபித்த தடையாணையை எதிர்த்து போடப்பட்ட தனி தனி வழக்குகளையும், இந்த முக்கிய வழக்குடன் சேர்த்து விசாரிக்க நாளை விசாரணையை தள்ளி வைத்து உள்ளார்.

ஹ்ம்ம்...இவங்க எல்லாம் பேசி முடிப்பதற்குள் அடுத்த தீபாவளி வந்துடும் போல...

share on:facebook

Friday, January 25, 2013

விஸ்வரூபம் விமர்சனம்: இதற்க்கு தான் இத்தனை தடை பிரச்சனைகளா?


பதிவர் நண்பர் சத்யப்ரியன் விஸ்வரூபம் பார்த்து விட்டு எழுதி உள்ள விமர்சனம் இங்கே.

ஹ்ம்ம் சும்மா கிடந்த சங்கை ஊத்தி விட்டான் ஆண்டி என்பார்கள். அது போல  இந்த தடை எதிர்ப்பு எல்லாம் வராமல் போய் இருந்தால் விஸ்வரூபம் வந்த  வேகத்தில் தியேட்டரை விட்டு போய் இருக்கும் போல. இப்போ அட்லீஸ்ட்
எல்லோரும் அதில் என்ன தான் இருக்கு என பார்க்க ஆசை படுகிறார்கள்.  ஆனால் அதற்கும் வந்தது ஆபத்து. படம் ஓரிரு இடங்களில் மட்டும்  வெளியிடப்பட்டு  விட்ட நிலையில் அதன் எதிர் மறையான விமர்சனங்கள்  பொது மக்களை படம்  பார்க்க தூண்டுமா என தெரியவில்லை? என்னமோ போங்க. கமலுக்கு நல்ல  காலம் இல்ல போலருக்கு. 

share on:facebook

Wednesday, March 28, 2012

கமலின் மும்பை IIT பேச்சு...பழசுதான் ஆனாலும் worth sharing...







share on:facebook

Sunday, March 11, 2012

தமிழில் ஏன் பேச வேண்டும் - நடிகர் கமல ஹாசன்

சமீபத்தில் நான் ரசித்த கமலின் பேட்டி. அவர் சொல்வது போல் ஒன்றிரண்டு முக்கிய சொற்களையாவது  நாம் தமிழில் அடிக்கடி பேச வேண்டும். அப்போது அதற்குரிய மதிப்பும், வலிமையையும் தனி தான். நான் பொதுவாக நண்பர்களிடம்/மற்றவர்களிடம் பேசும் போது பெரும்பாலும் 'வணக்கம்', நன்றி போன்ற வார்த்தைகளை உபயோகிப்பேன். அதனால் எனக்கு இன்னும் அதிக மரியாதை தான் அவர்களிடம் இருந்து கிடைக்கிறதே ஒழியே யாரும் என்னை குறைவாக மதிப்பிடுவதில்லை. 


share on:facebook

Saturday, January 14, 2012

வணக்கம் சென்னை பாடல் - தமிழ் சினிமாவின் மாற்றம்.


சமீபத்தில் ரசித்த எதார்த்தமான ரசிக்க வைத்த ஒரு தமிழ் பாடல். முதலில் ஏதோ ஒரு 'ஆல்பம்' என்று நினைத்து தான் பார்த்தேன். பிறகு தான் தெரிந்தது இது வரப்போகும் ஒரு தமிழ் (மெரினா) திரைப் படத்தின் பாடல் என்று.

சும்மா ஹீரோ ஹீரோயினை சுவிஸ்சிலும், ஆசியிலும் ஆடி ஓட விட்டு காதல் செய்வதை காட்டுவதை விட இது ரொம்ப நல்லாவே இருக்கு. இம்மாதிரி மாற்றங்கள் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு வேண்டும். பாடல் கீழே...



share on:facebook

Tuesday, November 29, 2011

ரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...


சென்ற பதிவில் ரஜினியின் ஒரு முகத்தை பார்த்தோம். இந்த பதிவில் அவரின் (எனக்கு தெரிந்த) இன்னொரு முகம்.

இது பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு. அடுத்த நாள் ரஜினியின் பிறந்த நாள். அதற்கு முதல் நாள் மாலை ரஜினியை சந்திக்க அவரின் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்றோம். குறிப்பிட்ட சில ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்று இருந்ததால் சகல  மரியாதைகளுடன் ரஜினி வீட்டின் வரவேற்பரையில் காத்திருந்தோம்.

மாலை நேரம் கடந்து இரவு ஆரம்பித்தது. அவ்வப்போது தலைமை மன்ற  நிர்வாகியோ வேறு எவரோ வந்து சார் இப்ப வந்துடுவார், டப்பின்  லேட்டாகிவிட்டது. சற்று பொறுங்கள். சார் வந்தவுடன் பார்த்து விட்டு போய்  விடலாம் என்று அவ்வப்போது நாங்கள் போரடித்து விடாமல் இருக்க  சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ரஜினியை நேரில் பார்க்க போகிறோம்,  அதுவும் கூட்டத்தோடு கோவிந்தாவாக இல்லாமல் குறிப்பிட்ட சிலரோடு  நெருக்கத்தில் பார்க்க போகிறோம் என்ற உணர்வில் மாலையாவது, இரவாவது  எதுவும் எங்களுக்கு சலிப்பாக தெரியவில்லை. இது எல்லாவற்றுக்கும் மேலாக  திருமதி. லதா ரஜினியே ஒரு முறை வந்து, சார் இப்ப வந்துடுவாங்க, கொஞ்சம்  பொறுத்துக்கோங்க என்று கூறிவிட்டு போனார்.

அநேகமாக நள்ளிரவுக்கு சில மணித்துளிகள் முன் ரஜினியின் கார், வீட்டின் முன் வந்து நின்றது. தலைவர் காரை விட்டு கீழே இறங்கி கிடு கிடுவென்று நடந்து வீட்டிற்க்குள் போகும் முன் வரவேற்பரையை எட்டி  பார்த்தவர், நாங்கள் கும்பலாக உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டு,  அவருக்கே உரித்தான ஸ்டைலுடன், பைவ் மினிட்ஸ் மா, இப்ப வந்துடுறன்  என்று உள்ளே சென்றவர், ஒரு பத்து பதினைந்து நிமிடம் கழித்து எங்களை  வந்து  சந்தித்தார்.

எங்களை காத்திருக்க வைத்ததிற்கு ஒரு முறைக்கு மேல்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டு, வழக்கமான விசாரிப்புகள் முடிந்த பின்  எங்களிடம்  இருந்து பிறந்த நாள் பரிசாக நாங்கள் எடுத்து சென்ற மாலை  மற்றும்  நினைவு கேடயத்தையும் பெற்று கொண்டார். தொடர்ந்து, "ஏற்கனவே  ரொம்ப லேட் ஆயுடுச்சு" நீங்கள் காலையில் மீண்டும் வந்தால் ரொம்ப  கூட்டம்  இருக்கும். அதனால் இப்பவே நாம் போட்டோ எடுத்து கொள்ளலாம்  என்று  அங்கிருந்த போடோ கிராபரை அழைத்து ஒவ்வொருடனும்  தனியாகவும், மொத்த குழுவுடனும் அலுக்காமல் போடோவுக்கு போஸ்  கொடுத்தார். இன்று அதையெல்லாம் ஒரு சாதாரண ரசிகனால் நினைத்து பார்க்க முடியுமா? ரஜினியை விடுங்கள். ஒரு சாதாரண முன்னணி நடிகரிடம் கூட இத்தகைய விருந்தோம்பலை நாம் எதிர்பார்க்க முடியாது.

இதையெல்லாம் இங்கு சொல்வதற்கு காரணம், ரஜினி ஒன்றும் அப்போது சாதாரண நடிகர் இல்லை. அன்றும் அவர் சூப்பர் ஸ்டார் தான். இருந்தும்  ரசிகர்களுக்கும் அவருக்கும் அன்று பெரிய இடைவெளி இல்லை. ஆனால் இன்று? அவருக்கு என்று ஒரு வட்டத்தை அவர் உருவாக்கி கொண்டார் அல்லது அவரை அறியாமல் ஒரு வட்டம் அவரை சுற்றி உருவாகி அவரை ரசிகர்களிடம் இருந்து பிரித்து வைக்கிறது. அந்த வட்டத்தினுள் வேறு யாரும் அல்ல, எல்லோரும் எனக்கு நண்பர்கள் என்று சொன்னாலும் அவரை சுற்றி உள்ள ஒரு சில சுய நல கூட்டம் தான். அவர்கள் ஒன்று  சினிமாவை சேர்ந்த பெரிய புள்ளிகள் அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியுனுடைய தலைவர்கள். இவற்றை எல்லாம் உடைத்து கொண்டு ரஜினி வெளியே வர வேண்டும் என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

அடுத்து ரஜினியும், ரஜினி ரசிகர் மன்றங்களும்...

share on:facebook

Thursday, November 24, 2011

இருபது லட்சம் ஹிட்ஸ் - Why this kolaveri ...Di உலகம் முழுவதும் பிரபலம்.



"3" படத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இருபது லட்சம் ஹிட்ஸ். "தி இந்து" நாளிதழில் முதல் பக்கத்தில் விமர்சனம். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மொழி வானொலிகளிலும் பாடல் ஒலிபரப்பு. இதுவரை  சமீப காலத்தில்  எந்த ஒரு தமிழ் சினிமா பாடலுக்கும் கிடைக்காத  ஒரு  வரவேற்ப்பு  Why this kolaveri ...Di பாடலுக்கு கிடைத்து இருக்கிறது.

முதல் தடவை Why this kolaveri ...Di பாடலை கேட்ட போது என்ன பாடல் இது என்று தான் நான் நினைத்தேன்(இப்போதும்). ஆனால், மாற்றமாக ஒன்றை  தந்தால் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பதற்கு இந்த பாடலின் ஹிட் ஒரு  உதாரணம். 

இது பெண்களையும், ஆங்கிலம் பேசுபவர்களையும் அவமானப் படுத்துவதாக அமைந்திருக்கிறது என்ற குற்றசாட்டு எழுதுள்ள  வேலையில்,  அப்படி ஏதும் இல்லை என்கிறார் 3 படத்தின் இயக்குனர்  ஐஸ்வர்யா தனுஷ். தனுஷ் "ஆடுகளத்தில்" முன்பு உடைந்த ஆங்கிலத்தில் பேசியது அவருடைய காரக்டருக்கு நன்றாக இருந்தது. அது போல் முயற்சித்தால் என்ன என்று நினைத்தோம். அவ்வளவு தான். வேறொன்றுமில்லை என்கிறார்.

பத்து நிமிடத்தில் டியுன் போட்டு இருபது நிமிடத்தில் இப்பாடலை பதிவு  செய்திருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல, இங்கு அமெரிக்காவில் கூட என்னுடைய வட இந்திய நண்பர்கள் இப்பாடலை கேட்டுவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்றார்கள். 

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்.

share on:facebook

Tuesday, November 22, 2011

ரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை

தமிழ் திரை உலகில் ரஜினி வில்லனாக உலா வந்த நேரம். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ரஜினி படம் என்றால் எப்போதும் "நோ"  தான். அவன் கெட்டவன், அவன் படத்துக்கெல்லாம் போக கூடாது  என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்(இன்றைய ரஜினி ரசிகர்கள் கோபித்து  கொள்ள கூடாது).

முகம்: 1

16 வயதினிலே "பரட்டை" ஆகட்டும், மூன்று  முடிச்சு வில்லன் காரக்டர்  ஆகட்டும். நம்பியார், அசோகன் காலத்திற்கு  பிறகு வில்லன் என்றால் ரஜினி, ரஜினி என்றால் வில்லன் என்றால்  மிகையாகாது. அதிலும் மூன்று  முடிச்சில், நீச்சல் தெரியாத கமலஹாசனை  தண்ணீரில் விழும் போது அதை பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாத ரஜினி, ஸ்ரீதேவி எவ்வளவோ கெஞ்சியும் தனக்கு நீச்சல் தெரியாது என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு துடுப்பை போட்டபடி "மனநிலைகள்  யாருடனோ, மாயவனின்  விதிவலைகள்.." என்று முகத்தை அவ்வளவு  இறுக்கமாக வைத்துக்கொண்டு  பாடும் பாடல் காட்சியில் யாருக்குமே  ரஜினியை பிடிக்காது. இப்போது உள்ள  அனைத்து வில்லன்களும் அப்படி  ஒரு கெட்ட! பெயர் வாங்க  ரொம்ப கஷ்ட  பட வேண்டும். 

அதன் பிறகு ஹீரோ ரோல் பண்ண ஆரம்பித்த பிறகு, அவருடைய ஸ்டைலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழக சினிமா ரசிகர்கள் அடிமை ஆக ஆரம்பித்தார்கள். குழந்தைகளிடம் ரஜினி ஸ்டைல் பாப்புலராக  ஆரம்பித்தது. எதார்த்தமாக  கையை காலை தூக்கினால் கூட அது என்ன? ரஜினி ஸ்டைலா? என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த காலக்கட்டத்திலேயே (இன்றும் அவர் முன்னணி ஹீரோ தான்) அவருடைய  நூறாவது படமாக "ராகவேந்தர்" வெளிவந்தது. இது தமிழக தாய்மார்களிடம் பெரும்  வரவேற்பையும், ரஜினியை பற்றிய மாற்று கருத்தையும் உருவாக்கியது.

அன்றிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமல்ல. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினியை ரசிக்க ஆரம்பித்தார்கள். ரஜினி படமென்றால் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பார்க்கலாம்  என்ற அளவில் அவரை பற்றிய கண்ணோட்டம் மாறியது. அதன்பிறகு வந்த படங்களில் காரக்டர் ரோல், கிராமத்தான், காமெடி ரோல் என பல வேடங்கள் ஏற்று தான் ஒரு முழு நடிகன் என நிரூபிக்க ஆரம்பித்தார். அவருடைய  படங்கள் பெரும்பாலும் நன்றாகவே ஓடின.

80 களின் இறுதியில் தனக்கென தமிழகத்தில் ஒரு பெரும் படையையே ரசிகர்களாக உருவாக்கி வைத்திருந்தார் ரஜினி. அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (பாக்கியம்) எனக்கு கிடைத்தது. அவருடைய போயஸ் கார்டன் இல்லத்திலேயே.

தொடரும்...
  

share on:facebook

Friday, November 18, 2011

ஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே -



share on:facebook

Monday, August 22, 2011

அண்ணா ஹசாரே குறித்து நமீதா...அட உண்மையிலேயே தாங்க.


ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. மாற்றம் மக்களிடமிருந்து வர வேண்டும், என்றார் நடிகை நமிதா.

ஹசாரேவின் போராட்டம் குறித்து நமிதாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், "அன்னா ஹசாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும். ஹசாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு.

லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹசாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்திய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹசாரேயின் போராட்டம் காந்திய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹசாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன்கூட இருக்காது. இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளேகூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்," என்றார்.

ஹசாரேவின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, "இருக்கலாம். அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்தியா பரந்த நாடு. என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது," என்றார் நமிதா. இந்தப் போராட்டம் தெற்கு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறித்து? "அது உண்மைதான். காரணம் இங்கே அதைவிட முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் கருதலாம். ஹசாரே குறைந்தபட்சம் இந்த மாநில மக்களிடம் பிரசாரம்கூட செய்யவில்லையே. இதை அவருக்கும் அரசுக்குமான பிரச்சினையாகத்தான் ஹசாரே பார்க்கிறார். இதில் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது?" என்றார் நமிதா. அரேபியக் குதிர சொல்வதும் வாஸ்தவந்தானே....
நன்றி: koodal.com

share on:facebook

Friday, August 5, 2011

ரஜினி கமல் காதல் புரிந்த இடங்கள்


எங்கள் கிராமத்தில் ஒரு காலத்தில் பெரிய மிராசுதாரராக இருந்த  ஒருவரின்  மகனின் பொழுது போக்கு, தமிழ் திரைப்படங்களில் வரும்  பாடல் காட்சிகளில் இடம்பெற்றுள்ள ரம்மியமான இடங்களை எல்லாம் உடனே  சென்று சுற்றி பார்த்து விட்டு வருவது. அப்படி சுற்றி சுற்றியே மிராசுதாரின் சொத்தில் பாதியை அழித்து விட்டார்.

ஆனால் அதே மாதிரியான ஒரு ரசிப்பு தன்மை உடைய தமிழகத்தை சேர்ந்த  இருவர் (ஒருவர் தன்னிச்சையான புகைப்பட வல்லுநர் - Free Lancer ),  மற்றொருவர் அவரின் கல்லுரி நண்பர் (இவர் அமெரிக்காவில்  கணணி  வல்லுனராக உள்ளார்), தாங்கள் அவ்வாறு சுற்றி பார்த்த இடங்களையும்  சுற்றி பார்க்க முடியாத இடங்களையும் சேர்த்து முழு விபரத்தையும் ஒரு  வலை தளம் உருவாக்கி அதில் விபரங்களை பகிர்ந்துள்ளார்கள்.  

அமெரிக்க ஹாலிவுட்டில் இவ்வாறு திரை படம் எடுக்க ஏதுவாக உள்ள இடங்கள் மற்றும் அது சம்மந்தமான விபரங்களை கொண்டு பல வலை தளங்கள் உள்ளது. ஆனால் தமிழ்/இந்திய திரை உலகம் சம்மந்தப்பட்ட இடங்களை (shooting spot ) முதல் முறையாக பட்டியல் இட்டுள்ளது இவர்கள் இருவரின் வலைத்தளம் தான் எனலாம்.

இனி நீங்கள் "அண்டங்காக்கா கொண்டைக்காரி" பாடல் முதல் "பள்ளே  லக்கா, பள்ளே லக்கா" பாடல் வரை அது எங்கு படமாக்கப்பட்டது  என  இவர்களின் வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.   

அந்த வலைத்தளம் இங்கே  

share on:facebook

Thursday, May 5, 2011

ஹீரோ - வில்லன் - டைரக்டர் காமெடி கூட்டணி.


சே, தேர்தல் முடிந்தாலும் இந்த "கூட்டணி" ஞாபகம் வந்து தொலைக்கிறது. சமீபத்தில் நான் மிகவும் ரசித்த காமெடி...

என்னதான் காமெடியாக தெரிந்தாலும், ஹீரோ வில்லன் சான்ஸ் கேட்டு வரும் இருவரின் முகத்திலும் தெரியும் தன்னம்பிக்கையும், அதற்காக அவர்கள் தங்களையே மறந்தவர்களாக தங்கள் கனவு கதாபாத்திரமாக மாறிவிட்ட அவர்களின் விடா முயற்சியும் என்னால் காமெடியையும்  தாண்டி இதை ஒரு தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக தான்  பார்க்க முடிகிறது.




share on:facebook

Wednesday, October 21, 2009

பிதாமகன் - இந்திப் பட ரசிகர்கள் எதிர்ப்பு

என்னுடன் பணியாற்றும் சீயான் விக்ரமின் (வட இந்திய) ரசிகர்கள் சிலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த link-ஐ உங்களுடன் ஷேர் செய்ய விரும்புகிறேன்.


ஒரு தமிழ் நடிகர்/இயக்குனரின் மேல் இவர்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் பார்த்து உண்மையில் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.

அப்படியே உள்ளே சென்று, கருத்து கணிப்பில் உங்கள் வாக்குகளை இட்டீர்களானால் மிகவும் சந்தோசப்படுவார்கள்


 http://savepithamagan.blogspot.com/
share on:facebook