Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Tuesday, January 31, 2012

இசைஞானியும் புகழ் பாடும் ஞானிகளும்

இளையராஜாவை பற்றி நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த நூற்றாண்டிலும் கட்சி தலைவர்கள், நடிகர்களுக்கு அடுத்தபடியாக தானாக கூடும் கூட்டம் என்றால் அது இளையராஜாவின்  இசை  நிகழ்ச்சிக்கு தான்.

அன்னக்கிளியில் ஆரம்பித்து 80, 90 களில் அவருக்கு இருந்த மவுசு வேறு எந்த இசை அமைப்பாளருக்கும் இருந்ததில்லை. அதே போல் இன்றும் அவரது  இசை கச்சேரிகளில் மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக ரசிகர்கள் அவருக்கு மரியாதையை தந்து கை தட்ட வேண்டிய நேரங்களில் மட்டும்  கைதட்டி மற்ற நேரங்களில் பள்ளி கூட பிள்ளைகள் போல் அமைதி காப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அவரது மேடையில் பாட வரும் சீனியர் பாடகர்கள் கூட இளையராஜா முன் பள்ளி கூட பிள்ளைகள் போல் தான் அடக்கம் காட்டுவார்கள்.

இசையை இளையராஜா போல் காதலிப்பவர் யாரும் இல்லை. ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்தால் கூட அதில் இளைய ராஜாவின் முத்திரை கண்டிப்பாக எங்கோ ஒரு இடத்தில் இருக்கும். காசுக்காகவோ, விரும்பாமலோ அவர் ஒரு படத்திற்கு  இசை  அமைத் திருப்பார் என நான் நம்பவில்லை.

இவர் இப்படி என்றால், தமிழ் திரை உலகில் கோடி கட்டி பறக்கும் இன்னொரு இசை அமைப்பாளர் கடந்த  இரு  வருடங்களாக நான் தமிழ் படங்களே பார்க்கவில்லை என  (பெருமையாக!) கூறுகிறார். அப்படி என்றால் எப்படி அவரால் திரைக்கதைக்கு  ஏற்ற  இசையை தர முடியும் என எனக்கு தெரியவில்லை.

சமீபத்தில் ஜெயா டி.வியில் ஒலிபரப்பப் பட்ட இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பார்த்தேன். எப்போதும் போல் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பாடல் இசை அமைக்கப் பட்ட விதமும் அதற்க்கான காரணங்களும் சுவை பட கூறினார். பெரும் நட்சத்திரங்களும், ரசிகர்களும் ஒரு சில பாடல்கள்  இசைக்கப் பட்ட போது உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியதும், தங்களை  அறியாமல் இசைக்கு தலை ஆட்டியபடி ரசித்ததும் ரசிக்க வைத்தது.

"மா" படத்திலிருந்து, ஒரு ஐந்து நிமிடம் இசை இன்றி ஒரு கட்சியை ஒளி  பரப்பி பின் அதே கட்சியை இளையராஜாவின் இசையுடன் மீண்டும் ஒளி  பரப்பியபோது தான் தெரிந்தது ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணி இசை  எவ்வளவு முக்கியமானது என்று. அந்த வகையில் இன்று இந்தியாவிலே  பின்னணி இசையில் இளையராஜாவை பின்னுக்கு தள்ள ஒருவர் இனி பிறந்து வந்தால் தான் உண்டு.

ஜெயா டி.வியில் நான் பார்க்கும்/பார்த்த ஒரே சமீபத்திய நிகழ்ச்சி இளைய ராஜாவின் இந்த இசை நிகழ்ச்சியை தான். நிகழ்ச்சி பற்றி இன்னும் சொல்ல  நிறைய இருக்கிறது. அதை பற்றி பார்க்கும் முன், ஒன்றே ஒன்று தான் நிகழ்ச்சி முழுதும் நெருடலாக இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன்  என்ற முறையில் அதை இங்கே சொல்வதற்கு எனக்கு நானே உரிமை  எடுத்துக் கொள்கிறேன். அது, எல்லோரும் இளைய ராஜாவை  அளவுக்கு மீறி  புகழ்ந்தது தான். 

அவரது இசையை பற்றியும், அந்தந்த பாடல் இசை அமைக்கப் பட்ட விதம்/சிறப்பை பற்றியும்  விரிவாக எடுத்துக் கூறினாலே  போதும், அவரின் சிறப்பை அறிந்து கொள்ள. அதை விடுத்து, அடிக்கடி  அவரை புகழ் பாடியது அவருக்கே பிடித்ததா என்று எனக்கு தெரியவில்லை.

இன்னும் வரும்...

இசை பற்றிய மற்றொரு பதிவு மயக்க வைக்கும் இசை - பேத்தோவன் ஓர் ஆச்சர்யம்
    

share on:facebook

Tuesday, December 27, 2011

CNN -ல் Why this kolaveri di... TOP SONG OF 2011

Why this kolaveri di... பாட்டுக்கு கிடைத்த சமீபத்திய அங்கீகாரம். CNN டி.வியின் பிரபலமான எரின் பர்னெட்டின் (Erin Burnett) அவுட்பிரன்ட்  ப்ளாக்கில் Why this kolaveri di... பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Why this popularity - Top song of the year. Song recorded in Tamil and English going viral என்ற தலைப்புடன் அவரின் செய்தி தொகுப்பு இவ்வாறு போகிறது.

யூ டூபில் இந்த வருடம் மிகவும் பாபுலரான பாடலாக Why this kolaveri di... இடம் பெற்று இருக்கிறது. அது மட்டுமில்லாமல், ஒரு மாதத்தில்  பார்க்கப்பட்ட நாற்பது மில்லியன் யு டூப் வீடியோவில், இருபத்தி  எட்டு மில்லியன் தடவை இப்பாடல் மட்டும் பார்வை  இடப்பட்டுள்ளது.   

ஒரு வாரத்துக்கு முன் நியூசிலாந்து, ஒக்லாந்தில் உள்ள ஒரு மிக பெரிய மாலில் இப்பாடல் ஒளிபரப்பப்பட்டு அதற்க்கு எல்லோரும் நடனம் ஆடி  உள்ளார்கள்.  இப்பாடல் பற்றி குறிப்பிட்ட எரின், தமிழ் மொழி திரைப்படம் "3" க்காக தமிழ் மொழியில் இயற்றப்பட்ட இப்பாடல், உலகம் பூராவும் தமிழ்   மற்றும்  ஆங்கிலம் பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளதாகவும் அவருடைய  செய்தி  குறிப்பில் தெரிவித்துள்ளார். 

அவருடைய செய்தி குறிப்பின் முதல் கேள்வியாக, இந்த வருடத்தின் மிகவும் பாபுலரான பாடல் எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு நீங்கள்,  Adele?  Pitbull?  Bieber? என்றால் அது தான் இல்லை. இந்த வருடத்தின் மிகவும் பாபுலரான பாடல் இது தான் என்கிறார்.

Why this kolaveri di... பாடலை வைத்து இந்தியாவில், தமிழகத்தில் போக்குவரத்து போலீசார்,  வைத்திருக்கும் பாணர்களையும் தன்னுடைய செய்தி குறிப்பில் பகிர்ந்துள்ளார்.

CNN ல் Why this kolaveri di... பற்றிய முழு செய்தி குறிப்பை காண இங்கே சொடுக்கவும். எரின்னின் பிளாக்கில் முதல் பக்கத்தில் இச் செய்திக்குறிப்பை  காணலாம்.  

எப்படியோ, இங்குள்ள தமிழர் அல்லாத இந்தியர்கள் அனைவரும் "மாமா சூப் சாங்கு" என்று கொஞ்சு தமிழில் சொல்லும் போதும், அமெரிக்கர்கள் சிலர் கூட இப்பாடலை ரசிப்பதும், இப்பாடலுக்கு சொந்தக்காரர்களையே சேரும். அந்த வகையில் நமக்கு எல்லாம் பெருமையே.


share on:facebook

Thursday, August 4, 2011

டங்கு னோசா - நாக்கு மூக்க பாடலின் ஆங்கில பதிப்பு.

நாக்கு மூக்க பாடல் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த டங்கு னோசா பாடல் கண்டிப்பாக பிடிக்கும். என்னமாய் அனுபவித்து இந்த பாடலை  பாடுகிறார் மதுரை சின்னபொண்ணு .   


நன்றி: youtube 


share on:facebook

Friday, January 14, 2011

மயக்க வைக்கும் இசை - பேத்தோவன் ஓர் ஆச்சர்யம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஜெர்மனி நாட்டில் 1770 இல் பிறந்த பேத்தோவன் (Ludwig van Beethoven) மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் தன் முத்திரையை பதித்தவர். தன் இருபதாவது வயதில் காதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கேக்கும் திறனை இழக்க ஆரம்பித்து சிறுது காலத்தில் கேக்கும் திறனை முழுவதும் இழந்த பிறகும் கூட தானே பாடல் இயற்றி இசை அமைத்து அதை அரங்கேற்றம் செய்வதை நிறுத்தவில்லை.

விடிய விடிய இசை/பாடல் அமைக்கும் போது தூக்கம் வராமல் இருக்க குளிர்ந்த தண்ணீரில் தன் தலையை முக்கி தூக்கத்தை களைத்துக்  கொள்வாராம்.


அவருடைய இனிமையான ஒரு இசை தொகுப்பு இங்கே (என்ன பிரமாண்டம் பாருங்கள்)...இசையை கேட்ட பிறகு இதை ஏதோ ஒரு இந்திய/தமிழ் சினிமா பாடலாக கேட்ட மாதிரி இருக்கிறதா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது. ஆனால் எந்த படத்தில் இதை காப்பி அடித்தார்கள் என்றுதான் தெரியவில்லை. தெரிந்தால் பின்னூட்டத்தில் போடுங்களேன். மண்டை காய்கிறது.




அதே போல் இந்த இசையையும் நீங்கள் பல இடங்களில் கேட்டிருக்கலாம். காரின் ரிவர்ஸ் அலாரமாக, வீட்டின் காலிங் பெல் இசையாக. ஹ்ம்ம்..ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.




நன்றி: You Tube.   
அன்புடன்...
share on:facebook