Sunday, March 25, 2012

இலங்கை தமிழர் பிரச்னை : நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆங்கில நாளேடுகள்.


சென்ற பதிவில் இலங்கை தமிழர் பிரச்சனையில் நம்மூர் ஆங்கில நாளேடுகளின் இரட்டை வேடம் பற்றி எழுதி இருந்தேன். இந்து பத்திரிக்கை தான் அப்படி என்றால் தற்போது தென்னகத்தில் வேகமாக வளர்ந்து வரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும் அப்படிதான். இது இன்னும் மோசமாக தனது கருத்தை வெளியிட்டு உள்ளது.

நான் முன்பே கூறியிருந்தது போல் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஆரம்பம் முதல் நாம் (இந்தியா) தான் காரணம். நம் சுய நலன்களுக்காக அவர்களை பாடாய் படுத்தி இன்று நடு தெருவில் நிறுத்தி இருக்கிறோம். அது மட்டுமன்றி தமிழ் இனத்தின் ஜனத்தொகையில் பாதிக்கும் மேல் பலிகொடுத்து விட்டோம்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தின் படி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் ஆசிய கண்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப் பட்டோமாம். அதற்க்கு தமிழகம் தான் காரணமாம். நம் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷுடன் ஒன்று சேராமல் நாம் போனதற்கு தமிழர்கள் தான் காரணமாம். தெரியாமல் தான் கேட்கிறேன், இவர்கள் எல்லாம் நமக்கு என்ன நட்பு தேசங்களா என்ன? அருணாசலம் எங்கள் நாட்டை சேர்ந்தது என்று சீனாவும், ஜம்மு காஸ்மீர் எங்களது என்று பாகிஸ்தானும், இந்தியவிற்க்குள் ஊருடுவும் தீவிரவாதிகள் அனைவரும் பங்களாதேஷ் மூலமும் தான் வருகிறார்கள்.

இவர்களுடன் சேர்ந்து நாம் இலங்கைக்கு அதரவாக ஓட்டளிக்க வேண்டுமாம். இது என்ன நியாயம் என தெரியவில்லை. அது மட்டும்மல்ல, இலங்கைக்கு உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தால் அதனால் இலங்கை தமிழர்கள் தான் பாதிக்கப் பட போகிறார்களாம். என்ன இலங்கையில் வாழும் தமிழர்கள் கார் வாங்கவும், இறக்குமதியாகும் பொருட்களையும் வாங்கவும்  முடியாமல் அழ போகிறார்களா? அந்த நிலைமையிலா அவர்கள் இருக்கிறார்கள்?

இலங்கை அதிபர் ராஜபக்சேவை விட இவர்கள் தான் இலங்கையை பற்றி அதிகம் கவலை படுகிறார்கள். உண்மையை சொல்லப் போனால் விடுதலை புலிகள் நல்லவர்களோ கெட்டவர்களோ அவர்கள் இருந்தவரை நம் இந்திய பூலோக நலன்கள் காக்கப் பட்டது. சீனாக்காரனோ வேறு யாரோ இலங்கையில் காலடி வைக்க தயங்கினார்கள். ஆனால், இன்று அவர்களுக்கு எல்லாம் சிகப்பு கம்பள விரிப்பு. இதை எல்லாம் மறைக்கத்தான் எப்போது பார்த்தாலும் புலிகள் அகண்ட தமிழ் ஈழம் அடைய தமிழகத்தை தங்களுடன் இணைக்கும் திட்டம் போட்டுள்ளார்கள் என்று இவர்களாக ஒரு கதையை அவ்வப்போது பரப்பி அவர்களை இந்தியாவின் எதிரியாக எப்போதுமே பார்க்கப் பட வைத்ததாக விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.


எது எப்படியோ, அமெரிக்க தீர்மானத்தால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் போதும். அப்படியே நம்புவோமாக.

தொடர்புடைய பதிவுகள்...

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.

share on:facebook

2 comments:

Sankar Gurusamy said...

//அமெரிக்க தீர்மானத்தால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் போதும். அப்படியே நம்புவோமாக.//

உங்களோட சேர்ந்து நாங்களும் அப்படியே நம்புவோம்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..


http://anubhudhi.blogspot.in/

Anonymous said...

//டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தின் படி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் ஆசிய கண்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப் பட்டோமாம். அதற்க்கு தமிழகம் தான் காரணமாம். நம் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷுடன் ஒன்று சேராமல் நாம் போனதற்கு தமிழர்கள் தான் காரணமாம். தெரியாமல் தான் கேட்கிறேன், இவர்கள் எல்லாம் நமக்கு என்ன நட்பு தேசங்களா என்ன? அருணாசலம் எங்கள் நாட்டை சேர்ந்தது என்று சீனாவும், ஜம்மு காஸ்மீர் எங்களது என்று பாகிஸ்தானும், இந்தியவிற்க்குள் ஊருடுவும் தீவிரவாதிகள் அனைவரும் பங்களாதேஷ் மூலமும் தான் வருகிறார்கள்.//

அது ஒண்ணுமில்லை. மத்த நாடுகளுக்கெதிராக தார்மீக அடிப்படையிலும் எதிர்க்கத் துப்பில்லாத அதிகார வர்க்கமும், கொள்கை வகுப்பாளர்களும் சலாம் போட்டு தம்மைக் காத்துக் கொள்ள எண்ணுவதன் விளைவே இவையெல்லாம். ஏமாளித் தமிழனிடம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வான் என்ற எண்ணமும்தான்.

Post a Comment