Wednesday, March 7, 2012

சூர்யாவுக்கு ஒரு கேள்வி: சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா? மட்டனா?


சமீபத்தில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியை பார்த்தேன். அட ராமா! இவ்வளவு செயற்கைத்தனமாக ஒரு நிகழ்ச்சியை எப்படி எடுக்க முடியும் என்று தான் முதலில் எண்ணத் தோன்றுகிறது.

சூர்யா சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். அவர் என்னதான் எனர்ஜட்டிக்க்காக பேசுவது போல் 'நடித்தாலும்' அது எடு படவே இல்லை. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கோன் பனேகா க்ரோர் பதியை நினைவு படுத்தும் நிகழ்சிகளை மாற்றி மாற்றி பெயரிட்டு எடுத்துக் கொண்டு இருப்பார்களோ. சுயமாக சிந்திங்கப்பா!

ஒவ்வொரு கேள்வியை கேட்டு முடித்த பின் அதற்க்கு சரியான (இதற்க்கு ஹார்வர்ட் போய் படித்திருந்தால் தான் பதில் சொல்ல முடியும்) பதிலை சொன்ன பிறகு கை தட்டுகிறார்கள் பாருங்கள். ஐயோ தாங்க முடியல. எப்படி? எப்படி சூர்யாவும், கலந்து கொண்டவரும், அதை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களும் தங்களை மறந்து கை தட்டுகிறார்கள்.

கேள்வி இது தான்: ஒருவர் செய்வதை பார்த்து அதே போல் இன்னொருவர் செய்வதற்கு என்ன வென்று சொல்வார்கள்?

A. பேய் அடிச்சான் காப்பி.

B. பிசாசு அடிச்சான் காப்பி.

C. கொசு அடிச்சான் காப்பி.

D. ஈ அடிச்சான் காப்பி.

ஐயா, வேற கேள்வியே உங்களுக்கு கிடைக்கலியா? இல்ல நீங்க ஈ அடிச்சான் காப்பி செய்வதை எல்லோருக்கும் சொல்கிறீர்களா?

இதற்க்கு எல்லோரும் கை வேறு தட்டுகிறார்கள். சூர்யாவின் மேலும் அவரின் தந்தை நடிகர் சிவ குமாரின் மேலும் தனிப்பட்ட மதிப்பு எனக்கு உண்டு. இருவரும் உழைப்பால் தங்கள் சொந்த திறமையால் முன்னுக்கு வந்தவர்கள். ஆனால், இங்கு சூர்யா சொல்வதென்ன? ஒரு போட்டியாளரை பார்த்து அவர் கேட்கும் கேள்வி.

சூர்யா: உங்களின் ஒரு மாத சம்பளம் எவ்வளவு?
போட்டியாளர்: சுமார் பதினைந்தாயிரம்.
சூர்யா: ஒரு மாதம் நீங்கள் சம்பாதிக்க போகும் பணத்தை ஒரு பத்து நிமிடத்தில் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போக போகிறீர்கள். யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்.

நம்ம கேள்வி: அப்ப ஒரு மாசம் அவர் கஷ்ட பட்டு உழைத்து சம்பாதிப்பதை நீங்கள் ஏளனம் செய்கிறீர்களா? வர எல்லோருக்கும் நீங்க அவங்க அவங்க ஒரு மாச சம்பளத்தை கொடுக்க தயாரா?

அடுத்த கேள்வி: "புரட்சித் தலைவர்" என யாரை அழைப்பார்கள்?

நல்ல வேலை, நிலவுக்கு போன ஆம் ஸ்ட்ராங், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், சேகுவாரா என கஷ்டப் படுத்தாமல் அதில் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் பெயரையும் சேர்த்தீர்கள்.

சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா? மட்டனா? பண்ணி கறியா அல்லது மாட்டுக் கறியா என கேட்காமல் போனார்கள். சொல்ல முடியாது. அடுத்த நிகழ்ச்சியில் இந்த கேள்வியை எதிர் பார்க்கலாம். நாபகம் வைத்துக் கொள்ளுங்கள் மக்களே! சிக்கன் பிரியாணியில் இருப்பது "சிக்கன்" தான். இது தெரிய வில்லை என்றால், அப்புறம் நீங்கள் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டி இருக்கும்.

போட்டியாளர்களின் வீடு, குடும்பம் என அனைத்தையும் காண்பிக்கிறார்கள். அதே போல் போட்டியை நடத்துபவர்களின் குடும்பம், வீடு அனைத்தையும் காண்பித்தால் நல்லது. அப்போது தெரியும் நமக்கு. ஒரு லட்சம் இரண்டு லட்சத்தை கொடுத்து விட்டு எத்தனை கோடிகளில் அவர்கள் புரள்கிறார்கள் என்று.

மணி சார், ஜீனியஸ் சார் என்று உயிரற்ற பொருட்களுக்கெல்லாம் ஒரு பெயர். சரியான காமெடி. சூர்யா பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மடிக் கணணி கூட ஒரு பொம்மை கணணியாக இருக்கக் கூடும். பின்னால் இருந்து கொண்டு யாரோ டிஸ்ப்ளேவில் விடைகளையும் அடுத்த கேள்வியையும் நமக்கு கலர் புல்லாக காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்புறம் ஒரு கேள்வி கேட்டார்கள் பாருங்கள். நிச்சயம் இந்த கேள்வியை 'காப்டன்' அவர்களை மனதில் வைத்து தான் சூர்யா கேட்டிருப்பார் என நினைக்கிறேன். கேள்வி இது தான்.

திருநெல்வேலி எதற்கு பெயர் போனது?

A. இட்லிக்கா?

B. சட்னிக்கா?

C. சாம்பாருக்கா?

D. அல்வாவுக்கா?

ஆமா, அப்புறம். நம்ம காப்டன் ஒரு முறை பேட்டியின் போது உணர்ச்சி வசப்பட்டு சொன்னது (அவர் எப்போது தான் உணர்ச்சி வச பட வில்லை). திருநெல்வேலிக்கே அல்வாவா? DMDK கே சவாலா? என்று. அதை மனதில் வைத்து தான் இந்த கேள்வியை வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.


நல்லவேளை. திருநெல்வேலி என்றதும் நினைவுக்கு அருவாளா? ஜாதி சண்டையா? முரட்டு மீசையா? இல்ல ஒஸ்தி சிம்புவின் திருநெல்வேலி தமிழா? என்று கேட்கவில்லை.


போங்கப்பா. போய் புள்ள குட்டிங்களை படிக்க வைங்க. ஏதாவது நாலு பள்ளியை சேர்ந்த குழந்தைகளை கூப்பிட்டு அவர்களுக்கு அறிவு சார்ந்த "குவிஸ்" போட்டிகளை நடத்துங்கள். நல்ல பரிசுகளை பெரிய அறிவு ஜீவிகளை வைத்து கொடுங்கள். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் பார்க்கும். அவர்களின் பெற்றோர்கள் சேர்த்து தான். அப்ப போட்டுக்குங்க. உங்க கிரைண்டர் மிக்சி விளம்பரங்களை.

குழந்தைகள், கல்வி பற்றிய மேலும் சில பதிவுகள் ...

அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா? 

ஆறு மாதத்தில் ஒரு மில்லியன் - அமெரிக்க குழந்தைகள் சாதனை...

share on:facebook

14 comments:

Unknown said...

ஓ பரம்பொருளே நீ தான் காப்பாத்தனும்!

NKS.ஹாஜா மைதீன் said...

#போட்டியாளர்களின் வீடு, குடும்பம் என அனைத்தையும் காண்பிக்கிறார்கள். அதே போல் போட்டியை நடத்துபவர்களின் குடும்பம், வீடு அனைத்தையும் காண்பித்தால் நல்லது. அப்போது தெரியும் நமக்கு. ஒரு லட்சம் இரண்டு லட்சத்தை கொடுத்து விட்டு எத்தனை கோடிகளில் அவர்கள் புரள்கிறார்கள் என்று.#




சும்மா நச்சுனு இருக்கு...

கூடல் பாலா said...

என்னடா இது...சூர்யாவுக்கு வந்த சோதனை!

ராஜ் said...

பாஸ்,
நீங்க சொல்லுற கேள்விகள் எல்லாம் போட்டியோட ஆரம்பத்தில் கேட்க படுற கேள்விகள். கொஞ்சம்.... இல்ல இல்ல, ரொம்ப ரொம்ப ஈசியா கேள்வி கேட்டா தான் போட்டியாளர்கள் ஒரு 6-7 கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.. இல்லாட்டி அங்க வர ஆளுங்க எல்லாம் முத கேள்வியிலே அவுட் ஆகிருவாங்க.
எடுத்த உடனே கீழ இருக்குற மாதிரி கேள்வி கேட்டா அங்க வந்திருக்குற போட்டியாளர்கள் எல்லாம் ஓடியே போயிருவாங்க.
1) In which decade was the American Institute of Electrical Engineers (AIEE) founded?

A. 1850s B. 1880s
C. 1930s D. 1950s

2) Once the active medium is excited, the first photons of light are produced by which physical process?

A. Blackbody radiation
B. Spontaneous emission
C. Synchrotron radiation
D. Planck’s oscillation

I feel they start asking real questions after 7 question.

Madhavan Srinivasagopalan said...

//போங்கப்பா. போய் புள்ள குட்டிங்களை படிக்க வைங்க. ஏதாவது நாலு பள்ளியை சேர்ந்த குழந்தைகளை கூப்பிட்டு அவர்களுக்கு அறிவு சார்ந்த "குவிஸ்" போட்டிகளை நடத்துங்கள். நல்ல பரிசுகளை பெரிய அறிவு ஜீவிகளை வைத்து கொடுங்கள். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் பார்க்கும். அவர்களின் பெற்றோர்கள் சேர்த்து தான். அப்ப போட்டுக்குங்க. உங்க கிரைண்டர் மிக்சி விளம்பரங்களை. //

Well said.

I also got irritated by such programs.. & thought of writing against them. hhmmm..
If time available, no mood..
If mood available, no time..

கோவை நேரம் said...

http://www.kovaineram.blogspot.in/2012/03/blog-post.html நம்ம பதிவுல...இப்படிதான்

அருள் said...

இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

ஆதி மனிதன் said...

நன்றி விக்கியுலகம்.

நன்றி ஹாஜா.

நன்றி கூடல் பாலா.

ஆதி மனிதன் said...

நன்றி ராஜ்: நீங்கள் சொல்வதும் உண்மைதான். இருந்தாலும் ஈசியான கேள்விக்கும் ஒரு அளவு உண்டல்லாவா? தேங்காய் சட்னியில் தேங்காய் போடுவார்களா? மாங்காய் போடுவார்களா? என கேட்க கூடாதல்லவா?

ஆதி மனிதன் said...

நன்றி மாதவன்: உங்களுக்கு கூட மூட் அவுட் ஆகுமா?

ஆதி மனிதன் said...

நன்றி ஜீவா: உங்கள் பதிவு இன்னும் பிரமாதம்.

Sankar Gurusamy said...

இவ்வளவு ஈசியாக கேள்விகள் கேட்டால்தானே இன்னும் லட்சக்கணக்கான மக்களை முட்டாள்களாக்கி எஸ் எம் எஸ் அனுப்ப வைத்து இன்னும் சம்பாதிக்க முடியும். லாட்டிரிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

ஸ்ரீதர் said...

இதுபோன்று முட்டாள் தனமான கேள்விகளுக்கு பதில் அளிப்பவன் நம் தமிழன் தானே அவனுக்கு அறிவு வேண்டாமா?

CS. Mohan Kumar said...

Take it easy !!

Post a Comment