Showing posts with label வீடு திரும்பல். Show all posts
Showing posts with label வீடு திரும்பல். Show all posts

Sunday, August 25, 2013

ஒரே பதிவு, ஒரு லட்சம் ஹிட்ஸ். வீடுதிரும்பல் சாதனை.

ஒரே பதிவில், அதுவும் வெளியாகி ஓரிரு மணி நேரத்தில் ஒரு லட்சம் ஹிட்ஸ் என்றால் உண்மையிலே அது சாதனை தான். எது அந்த பதிவு என்று நீங்கள் கேட்கும் முன், உண்மையை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். பதிவுக்கு கிடைத்தது ஒரு லட்சம் ஹிட்ஸ் அல்ல. மாறாக அதை விட பெரிதாக ஒரு லட்ச ரூபாய் உதவி தொகை. ஆம். வீடுதிரும்பலில் வெளியான சேவை இல்ல பதிவு தான் அது.

எங்கள் அம்மா ஆசிரியராகவும், பின் கண்காணிப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய தஞ்சை அரசு சேவை இல்லம் பற்றி ஆதி மனிதனில் வெளியான பதிவை தொடர்ந்து நண்பர் மோகன் குமார் அவர்கள் அப்பள்ளி பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்களை நாடியபோது அதற்க்கான ஏற்பாடுகளை அம்மா செய்து கொடுத்தார்கள். அதை தொடர்ந்து வீடு திரும்பலில் வெளியான சேவை இல்லம் பற்றிய பதிவை பார்த்து பதிவு வெளியான ஓரிரு மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் இருந்து தமிழர்களால் நடத்தப்படும் AIMS India என்ற தொண்டு நிறுவனத்திடமிருந்து தொலை பேசி அழைப்பு. பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அவர்கள் கூறியது போலவே நாங்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் ஓரிரு வாரங்களில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான உதவி தொகை வந்து சேர்ந்தது. அதன் மூலம் பள்ளிக்கு நான்கைந்து வகுப்புகளுக்கு தேவையான 10 க்கும் மேற்பட்ட இரும்பினால் ஆன டேபிள் மற்றும் பெஞ்ச்சுகள் TANSI யில் ஆர்டர் கொடுத்து நல்ல தரத்துடனும், உட்கார, எழுத வசிதியுடனும் அழகாக வண்ணம் பூசி ஓரிரு மாதங்களில் வந்து சேர்ந்தது.

AIMS India தொடரபு கிடைத்ததிலிருந்து பள்ளிக்கு உதவிகளை ஒப்படைக்கும் வரை AIMS India வின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பாலகுமார், AIMS India வின் தமிழக தொடர்பு NAMCO ஒருங்கிணைப்பாளர் திரு. ஜீவா அவர்களும், சேவை இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு), அலுவலர் திரு. அசோகன், நண்பர் மோகன் குமார் மற்றும் எனது அம்மா ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்புக்கும், உதவிக்கும் இதன் மூலம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த அகஸ்ட்-15 ஆம் தேதி இரு பெரும் விழாவாக சுதந்திர தினம் மற்றும் உதவி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பள்ளி பொறுப்பாளர்கள் அழைத்ததின் பேரில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தார்கள். அது தொடர்புடைய புகைப்படங்கள் கீழே.

பதிவர் திருவிழா நடைபெறும் இந்த தருணத்தில் பதிவு/பதிவர்களுக்கு கிடைத்த கிடைத்த மரியாதையாகவே இந்த உதவித்தொகையை நான் பெரிதும் கருதுகிறேன்.

சேவை இல்லம் சார்பாக உற்சாக வரவேற்ப்பு:


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (அம்மாவுக்கு)...


தமிழ்த்தாய் வாழ்த்து...


கண்காணிப்பாளர் வரவேற்புரை....


அம்மாவுக்கு மரியாதை...


NAMCO ஒருங்கிணைப்பாளர் திரு. ஜீவாவுக்கு மரியாதை...


வீடு திரும்பல் திரு. மோகன் குமாருக்கு மரியாதை...


விழாவில் பேசியோர்கள்...




மோகனுக்காக ஒரு ஸ்பெஷல் க்ளோஸ்-அப் ஷாட்...


நன்றியுரை சேவை இல்ல திரு. அசோகன் அவர்கள்...


மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்...




டேபிள் பெஞ்ச் சாம்பிள்....


மாணவிகளின் கலை நிகழ்சிகள்...


மதிய உணவுக்கு முன் சாமி கும்பிடும் மாணவிகள்...


மதிய உணவு கூடம். இதற்கும் யாராவது புண்ணியவான் மேஜை நாற்காலிகள் செய்து கொடுத்தால் கோடி கும்பிடலாம்.


தஞ்சை சேவை இல்லத்தில் சேர தகுதி மற்றும் அதன் சேவைகள் குறித்து பள்ளியின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு இத்தகவலை அளித்து உதவலாம்.





share on:facebook