Thursday, August 22, 2013

பதிவர் திருவிழா Caption : பிரபல பதிவர்கள் கவனத்திற்கு


ஆளப்பிறந்தவன், அண்ணி ஆக பிறந்தவள்னு தமிழ் சினிமாக்களுக்கு பேர் வைக்க கஷ்ட படுறாங்களோ இல்லையோ. இந்த மாதிரி caption என்னா வைக்கறதுன்னு தான் 11 பேர் கொண்ட குழு அமைத்து பாடு படுறாங்கன்னு நமக்கு தெரிந்த சினிமா PRO ஒருத்தர் சொன்னாரு.

சரி, அவங்களாம் இப்படி வைக்கும் போது, நம்ம பதிவர் பாசறைக்கும் (பாசறை கவனிக்க: பின்னாடி அரசியல் கட்சி எதாவது தேர்தல் நேரத்தில நம்ம கிட்ட அதரவு கேட்டு வரும் போது கெத்தா இருக்கும்ல. அதான்) இந்த பதிவர் திருவிழாவின் போது ஒரு caption கண்டுபிடித்து வைத்தால் நல்லா இருக்குமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் உதித்தது தான் இது. சில caption உண்மையிலேயே நல்லா தான் வந்திருக்கு. சில சும்மா கவுண்டுக்கு.

ஆகையால், பதிவுலக பெரியோர்களே, ஜாம்பாவான்களே, செயற் குழுவிலோ, பொது குழுவிலோ இந்த கோரிக்கையை முன் வைத்து நிறைவேற்றி தருமாறு கீழே கமெண்ட் போட்டவர்கள் சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

அப்புறம், வழக்கம் போல மேலும் நல்ல captions உங்களுக்கு உதித்தால் அவசியம் கமெண்டில் போடவும். மீண்டும் தலைப்பை படிக்கவும். கமெண்ட் போடும் ஒவ்வொருவரும் பிரபல பதிவராக கணக்கிடப்படுவர்.

1. Blogging : A new free world

2. Blogging: Right to Think, Read & Write

3. Bloggers: Citizens of the free world

4. Time to Blog

5. Time to Write

6. Time to Read

7. Time to Comment (தனபாலன் சார் கவனத்திற்கு)

அடடா, தமிழ் பிளாகர்களுக்கு தமிழ்ல அடை மொழி வேணுமேனு நினைத்ததின் விளைவு இது...

1. பதிவுலகம்: அது புது உலகம் 

2. சிந்திக்க, எழுத, பின்னூட்டமிட (எப்புடீ?)

4. பேனா முனையை விட கீ போர்ட் வலிமையானது (நாங்களும் கண்டு பிடிப்போம்ல!)

5. தமிழ் வாழ்க, பதிவர் ஒற்றுமை ஓங்குக (யாருப்பா அது, அங்கு எதிர் வினை பதிவு போட கிளம்பறது?) 
   

share on:facebook

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நான் கமெண்ட் போடலை... ஹிஹி....

அபயாஅருணா said...

1.புதியதோர் எழுத்துலகம் செய்வோம்

indrayavanam.blogspot.com said...

நல்ல பதிவு...

ராஜி said...

நல்லாதான் இருக்கு. ஆனா, எனக்குதான் பிரியலை :-(

Unknown said...

ஆயிரம் வார்த்தைகள் எடுத்துச் சொல்வதை ஒரு படமே விளக்கிக் காட்டிவிடும். எனவே, வாள் முனையைவிட பேனாமுனையே வலிமை வாய்ந்தது என்பது முதுமொழியாகிப்போனது. படம் வரையப் பயன்படும் தூரிகையை வேண்டுமாயின் சொல்லலாம். கார்ட்டூன்கள் ஓர் உதாரணம். 2013-வலைப்பதிவர் அழைப்பிதழ் பல வலைப்பூக்களில் மின்னுகின்றது.

Post a Comment