Wednesday, August 28, 2013

ஏ......நானும் பதிவர் தான். நானும் பதிவர் தான். சொன்னா நம்புங்க சார்....

அட, கீழே உள்ள படத்த பார்த்த பிறகாவது நம்புங்கப்பா. நானும் ஒரு பதிவர் தான்னு. இதே போல் பதிவர் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரின் பெயரும் கீழே உள்ள லிங்க் -ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்து கொள்ளாதவர்கள் உடனே விழா குழுவினருக்கு ஈமெயில்/அலை பேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதி படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விழாவுக்கு வருகை தரும் பதிவர்கள் பட்டியல்...




பதிவர் திருவிழா ஏற்பாடுகளை பல பதிவுகளில் படிக்கும் போது இது தான் நினைவுக்கு வருகிறது. ஒரு கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை அப்புறம் அவர்களுடைய குடும்பத்தினர் என்றால் ஒரு பத்து பேருக்கு மேல் தேராது. அவர்கள் முக்கியமானவர்கள் என்றாலும் கூட அதை விட முக்கியம் திருமணத்திற்கு வருகை தரும் உறவுகள் தான். அதனால் தான் வந்திருக்கும் உறவுகளை முதலில் கவனித்து விட்டு தான் அவர்களே சாப்பிட போவர்கள்.  

கல்யாணத்தன்று அவர்கள் எல்லோருடைய கவனமும் அந்த சொந்தம், இந்த சொந்தம் என்று பல நூறு மையில் தூரத்து சொந்தக்காரனை எல்லாம் நீங்க சாப்பிட்டீங்களா? நீங்க சாப்பிட்டீங்களா? கேட்டு கேட்டு சாப்பிட வைப்பதிலும், வரவேற்பதிலும் இருக்கும். அது போல் தான் நம்முடைய இரண்டாம் ஆண்டு பதிவர் திருவிழாவும். பெரிய பதிவர்கள் எல்லாம் தாங்களாகவே முன் வந்து தங்கள் வீட்டு விசேசம் போல் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டுள்ளார்கள். யாருக்குக்காக? எதற்காக? எல்லாம் விழா சிறப்பாக நடை பெற வேண்டும் என்பதற்காக. நாம் எல்லாம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.

தங்கும் வசதி, மதிய உணவு (வெஜ்/நான்-வெஜ்) என்று எல்லாவற்றையும் தடபுடலாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாம் நம்மை போன்ற சாதாரண பதிவர்களுக்காக தான். இன்னும் சொல்லப்போனால் நம்ம பதிவர் திருவிழாவின் சிறப்பு அம்சமே இது தான். ஒரே ஒரு பதிவு போட்டவராக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பதிவு போடுவாராக இருந்தாலும் எல்லோருக்கும் அடை மொழி பதிவர் தான்.

ஆகவே பதிவர்களே, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வரும் ஞாயிறு அன்று நடை பெற உள்ள இரண்டாம் ஆண்டு பதிவர் திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டியது மட்டும் தான். விட்டாச்சு லீவுன்னு ஞாயிற்று கிழமை வீட்டுல உட்கார்ந்து விடாதீர்கள்.

நிகழ்ச்சி நிரல் கீழே.



share on:facebook

6 comments:

sury siva said...

நானும் பதிவர், நானும் பதிவர் என்றால்
என்ன பொருள் என்று மறு முறையும் பார்த்தால்,

பதி என்றால் கணவன் என்றும்
வர் என்றால் சிறந்தவர், என்றும்
பொருள் வருவதால்,

பதிவர் என்னும் சொல்லுக்கு
உத்தம கணவர், சிறந்த கணவர் என்று புரிதல் கொள்ளப்படவேண்டும் என்பதால்,

பதிவர் மா நாட்டுக்கு போவதற்கு முன்னால் ,
எதற்கும் இருக்கட்டும் என்று நான் ஒரு
சர்டிபிகேட் என் மனைவியிடம் வாங்கி வைத்திருக்கிறேன்.

அப்ப நீங்க ?

சுப்பு தாத்தா.

ராஜி said...

பதிவராயிட்டீங்கல்ல!! அப்போ ட்ரீட் எப்ப?!

Yaathoramani.blogspot.com said...

சுப்புத்தாத்தாவின் விளக்கம் அருமை
சுவாரஸ்யமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

அமுதா கிருஷ்ணா said...

ஹை நானும் பதிவர் தான்.ஆ க்கு முன்னாடி அ வந்துருக்கே..

சாய்ராம் கோபாலன் said...

ஐயா ஜாலி - சென்னை வந்தால் ட்ரீட் கொடுங்கள்

உங்களையும், எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், கௌதமன் சார், RVS மற்றும் மோகன்ஜி யாரையும் இன்னும் தொலைபேசியில் தொல்லை படுத்தவில்லை.

நான் இந்தியா திரும்பிவிட்டேன் ஒரு முக்கிய வேலை நிமித்தமாக.

என் மன உளைச்சலில் இருந்து வெளியில் வந்தவுடன் அழைக்கின்றேன். என்னுடைய நம்பரை வெளிபடுத்தவும் வேண்டாம் என்று தான் !!!

அதே கைத்தொலைபேசி நம்பர் தானே ?

ஆதி மனிதன் said...

Hi Sai, Just saw ur comment. Not sure if u r still in India. Please put a comment or send an email on ur status. Thanks.

Post a Comment