Tuesday, August 20, 2013

பதிவர் திருவிழா: தலை காட்டும் பதிவர்கள் முகம் காட்டாமல் தப்பிப்பது எப்படி? அரிய யோசனைகள்...



அது என்னமோ தெரியல. எதனால் புனை பெயரில் பதிவு எழுத ஆரம்பித்தேன் என எனக்கே தெரியவில்லை. ஆனால் இன்று அதே பழகி விட்டதால் என்னை வெளிக்காட்டிக்கொள்ள எனக்கு கூச்சமாக இருக்கிறது. அதை விட புனை பெயரில் நாம் யாரென்றே அடுத்தவர்க்கு தெரியாமல் எழுதுவதில் ஒரு சுவாரசியமும் சுகமும் உள்ளது. அதற்காக நான் கண்டபடி எல்லாம் எழுதுவதில்லை. இதனாலேயே பதிவர்களிடம் நேரிடையாக பழகும்/பேசும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அது தான் என் மிக பெரிய வருத்தமே.

சரி, பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டால் அங்கு கூட்டத்தோடு கூட்டமாக எல்லோரையும் பார்த்து விடலாம் என்றால், கடந்த ஆண்டு நடந்த முதல் திருவிழாவின் போது மும்பையில் இருந்ததால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. ஆதலால் இம்முறை நிச்சயம் கலந்து கொள்ள ஏற்கனவே வீடு திரும்பல் மோகன் குமார் மூலம் என்னுடைய வரவை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டேன். கூடவே என்னுடைய பங்களிப்பையும்.

செப்டெம்பர்-1 ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு குழப்பம் தான். அதாங்க தலைப்பை திரும்பி படிங்க...

அதற்காக ஒரு சில யோசனைகள் வைத்திருக்கிறேன். எனக்காக மட்டும் அல்ல. என்னைப்போல் ஒரு சில/பல முகம் காட்ட விரும்பாத பதிவர்கள் தைரியமாக பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள மண்டையை குடைந்து சில யோசனைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1. அரசியல் கட்சி தொண்டர்கள்/சினிமா நடிகர்களின் ரசிகர்கள் செய்வது போல் அவரவர்க்கு பிடித்த ஒரு முகமூடியை அணிந்து கொண்டு விழாவில் கலந்து கொள்ளலாம்.

2. உங்களை போல முகம் காட்டாத அதே நேரம் பதிவர் விழாவுக்கு வராத ஒரு பதிவரின் பெயரில் நீங்கள் பங்கேற்கலாம். ஆனால் இவர் என்னை Impersonate செய்து விட்டார் என்று 66A அல்லது ஏதோ ஒரு தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் B பிரிவின் படி உங்கள் மேல் கேஸ் போடாமல் இருக்க வேண்டும்.

3. பெண் பதிவர்கள் என்றால் பர்தா போட்டுக் கொண்டு கலந்து கொள்ளலாம். 

4. கழுத்தில் no photos பிளீஸ் என்று ஒரு tag கட்டிக் கொள்ளலாம்.

5. குறிப்பாக மதிய உணவின் போது நான்-வெஜ் சாப்பிடுபவர்கள் கோழிக் காலை கடிக்கும் போது சுற்றும் முற்றும் பார்த்து சாப்பிட வேண்டும். இம்மாதிரி நேரங்களில் பலர் போட்டோ எடுக்கப் படுவார்கள்.

இதுக்கும் மேல நல்ல யோசனை இருந்த சொல்லுங்கள். நானும் ட்ரை பண்றேன். எப்படியோ எல்லோரும் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். அது தான் முக்கியம்.

நிகழ்ச்சி நிரல் கீழே....




share on:facebook

14 comments:

Avargal Unmaigal said...

புதுசா ஒரு வலைத்தளம் ஆரம்பித்து விழா ஆரம்பிபத்றகு முன்னால் தினசரி காப்பி பேஸ்ட் பதிவு போட்டுவிட்டு எல்லாப் பதிவுகளுக்கும் போய் புகழ்ந்து கருத்து சொல்லிவிட்டு விழாவிற்கு நானும் வருகிறேன் என்று பெயர் கொடுத்துட்டடு விழாவில் கலந்து கொள்ளலாமே. நானும் அப்படிதான் கலந்து கொள்வதாக ஐடியா வைத்துள்ளேன்

எப்படி நம்ம ஐடியா

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் பல யோசனைகளை நேரில் பேசுவோம்...!

வெளங்காதவன்™ said...

:)

ராஜி said...

முகத்துல ஒரு மரு, தாடி வச்சுக்கிட்டு வந்தா அடையாளாமே தெரியாது. இதுக்கு சான்று நம்ம தமிழ் சினிமாக்கள்!

அமுதா கிருஷ்ணா said...

அரிய யோசனைகள் என்று தானே இருக்கணும்.குழப்பமப்பா!!!

அமுதா கிருஷ்ணா said...

பிரபல பதிவர்களுக்கு துணையாக வந்தது போல் சொல்லிக்கலாம்.

sury siva said...

என்னங்க...

சாப்பாடு நான் வெஜ்ஜா ?

பயமா கீதே...


வரலாம் அப்படின்னு நினச்சுட்டு இருக்கேன்.

அட் லீஸ்ட் காபியாவது வெஜ்ஜா கொடுங்கப்பா.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

rajamelaiyur said...

PHONE NUMBER கொடுங்க விளக்கமா ஐடியா சொல்றேன் ...

ஆதி மனிதன் said...

@Avargal Unmaigal said...
//எப்படி நம்ம ஐடியா//

நல்ல ஐடியாதான்.

ஆதி மனிதன் said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//இன்னும் பல யோசனைகளை நேரில் பேசுவோம்...!//

:)

ஆதி மனிதன் said...

@ராஜி said...
//முகத்துல ஒரு மரு, தாடி வச்சுக்கிட்டு வந்தா அடையாளாமே தெரியாது. இதுக்கு சான்று நம்ம தமிழ் சினிமாக்கள்!//

உண்மையிலேயே இதை நான் யோசித்தேன். ஆனால் எழுதும் போது மறந்து விட்டேன். நன்றி.

ஆதி மனிதன் said...

@அமுதா கிருஷ்ணா said...

அறிய-அரிய திருத்தி விட்டேன். நன்றி.

ஒருவேளை அரிய தகவல்களை அறிய என்று எடுத்துக் கொள்ளலாமோ?

//பிரபல பதிவர்களுக்கு துணையாக வந்தது போல் சொல்லிக்கலாம்.//

அப்ப நான் தான் உங்களுக்கு துணையாக வர போகிறேன். எப்புடீ?

ஆதி மனிதன் said...

சூரி சிவா: கண்டிப்பாக வெஜ்ஜும் உண்டு. பயப்பட வேண்டாம்.

ஆதி மனிதன் said...

ராஜா: முதலுக்கே மோசமா போய்டுமே...

Post a Comment