சமீபத்தில் விஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர்களை வைத்து 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை சூர்யா நடத்தினார். அதில் பங்கேற்ற 'நீயா நானா' புகழ் திரு. கோபிநாத் சிறப்பாக விளையாடி பதினாறு லட்சம் வென்றார்.
இடை இடையே திரு. சூர்யா கேட்ட கேள்விகளுக்கு உணர்வு பூர்வமாக பதில் அளித்தார். எல்லாம் நன்றாக தான் போய்கிட்டு இருந்தது. திடீரென்று ஆடியன்சை பார்த்து, இனிமே வெளிநாடுகளுக்கு போய் இன்னொருத்தன் கிட்ட கையேந்தி வேலை செய்யறதை விட்டுட்டு அவங்களை போல் உலகமே பேர் சொல்லும் மாதிரி எதையாவது ஒன்றை (ஒரு ப்ராடக்டை) புதுசா கண்டு பிடிங்கப்பா. அப்பத்தான் இந்தியா முன்னேறும் என்றார். தொடர்ந்து என்னப்பா கண்டு பிடிப்பீங்களா? என்று விடை கிடைக்காத ஒரு கேள்வியும் கேட்டார்.
அவர் IT நண்பர்களை மனதில் வைத்துதான் அதை சொன்னார் என்பதற்கு வேறு விளக்கங்கள் தேவை இல்லை. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. அமெரிக்காவில் IT இல் வேலை பார்ப்பவர்களை பற்றி பலரும் ஒரு குத்தலாக தான் பேசுகிறார்கள். அதற்க்கு காரணம் அவர்களால் அவ்வாறு கண்டம் விட்டு கண்டம் சென்று மிகவும் சொகுசாகவும், மரியாதையாகவும் வாழ வழி இல்லை என்ற பொறமையையை தவிர வேறு ஒன்றும் இல்லை.
நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தது போல், அமெரிக்காவிற்கு யாரும் வெத்தலை பாக்கு வைத்து அழைப்பதில்லை. இங்கு வரும் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவில் கஷ்டப்பட்டு படித்து, போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களுக்கு உள்ள தகுதியின் அடிப்படையில் முண்டி அடித்து தான் இங்கு வந்து சேருகிறார்கள். "Career" என்று சொல்வார்களே. அதில் ஒரு மைல் கல்லாகத்தான் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை IT இல் உள்ளவர்கள் கருதுகிறார்கள். பாங்க்கில் வேலை செய்யும் ஊழியர்கள் மானேஜர் போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும் போது பெரும்பாலும் வெளி ஊர்கள் அல்லது மாநிலங்களுக்கு டிரான்ஸ்பர் செய்யப் படுகிறார்கள். அது போல் தான் IT மக்கள் வெளி நாடுகளுக்கு டிரான்ஸ்பர் செய்யப் படுகிறார்கள். இதை எப்படி நம் நாட்டை விட்டுவிட்டு அடுத்தவனுக்கு சேவகம் செய்வதாக பார்க்கிறார்களோ தெரியவில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களில் அதிக பட்சம் பத்து/பதினைந்து சதவிகிதம் பேர் கூட அங்கேயே செட்டில் ஆவதில்லை. ஒரு கட்டத்தில் பெரும்பாலானோர் இந்தியா திரும்பி விடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இப்போது தான் நம்மிடையே கணிப்பொறி மற்றும் அது சம்மந்தப் பட்ட அறிவு பெரும்பாலான மக்களிடையே பரவி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நம்மிடையே ஒரு பில் கேட்ஸ்சோ ஸ்டீவ் ஜாப்ஸ்சோ நிச்சயம் உருவாவார்கள். அதற்க்கு இந்த தலைமுறையின் கணணி அறிவு நிச்சயம் அடுத்த தலைமுறையை மேலும் அறிவாளிகளாக்க பயன்படும்.
கடைசியாக நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பார்த்து கோபிநாத் கேட்ட கேள்வியை அவரிடமே நான் கேட்க நினைக்கிறேன்.
ஆமா, 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நீங்களா கண்டுபிடித்த நிகழ்ச்சியா? பல நாடுகளில், மொழிகளில் நடத்தப் பட்ட, நடந்து கொண்டு இருக்கிற நிகழ்ச்சியை தானே நீங்கள் காப்பி அடிக்கிறீர்கள். நீங்க எப்போது இது மாதிரி ஒரு நிகழ்ச்சியை கண்டுபிடித்து உலகம் பூரா உள்ள மற்ற நாட்டு தொலைகாட்சிகள் உங்களை பின்பற்ற வைக்க போகிறீர்கள். சொல்வது எல்லாம் ஈசிதான் சார். அதை நாம செய்து பார்த்தா தான் கஷ்டம் தெரியும்.
இந்தியர்கள் தான் முதன் முதலில் அனைவரும் இலவசமாக பயன்படுத்தும் வகையில் முதன் முதலில் இன்டர்நெட் பேஸ்ட் ஈமெயில் வசதியை கண்டு பிடித்து அதை செயல் படுத்தினார்கள். அது தான் தற்போதுள்ள மைக்ரோ சாப்ட் 'ஹாட் மெயில்'. ஆரம்பித்த சில ஆண்டுகளில் நல்ல விலை கிடைத்தவுடன் அதை மைக்ரோ சாப்ட்டிடம் விற்று விட்டார்கள். நாம ஏற்கனவே கண்டு பிடித்து விட்டோம் சார். இன்னும் நிறைய கண்டு பிடிப்போம்...
share on:facebook
16 comments:
நல்ல கேள்வி.
:-)
#The words from heart as well mine.
நீங்க கேட்பது சரிதான்....
:-)
ஒரு ப்ரோக்ராமை தொடர்ந்து செய்த உடன் பெரிய மனிதராக்கி விடுகிறது மீடியா.அதே போல் துணி விற்ற கதையினை அவர் சொல்லும் போது மற்ற அறிவிப்பாளர்கள் தங்கள் கண்களை துடைத்து கொண்டனர்.பி.ஈ, டாக்டர் என படித்து விட்டு குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து படிப்படியாக முன்னேறுபவர்கள் நிறைந்த உலகம் இது. பி.பி.ஏ படித்து விட்டு சேல்ஸில் இருந்ததை சொல்லும் போது நமக்கு அவர் மீது பச்சாதாபம் ஏற்படுத்த முயன்றார்.
குட் கொஸ்டின் ...
ஒரு கோடி நீங்களும் வெல்லலாம் என்ற பெயரில் நடத்தப்படும் ப்ரோக்ராம்
விஜய் டிவி தொகுப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட பொழுது அது ஒரு
doctored அல்லது engineered ப்ரொக்ராம் ஆகத்தான் தோன்றியது.
ஒரு பிரபலத்தை ஃஃபோனோ ஃப்ரன்ட் ஆகக் கூப்பிட்ட பொழுது அவருக்கு
மட்டும் எல்லோருக்குத் தரப்படும் 30 நொடிகளுக்கு மேல் தரப்பட்டது ?
யானை அந்தக் கவிஞரை மிதித்ததால் தானோ என்னவோ யானையை
எல்லா கோவில்கள் வாசலிலும் பிச்சை எடுக்க வைத்துவிட்டார்கள்
என்று தனது அறிவு சார் பதிலில் அவர் இயம்ப ஏறத்தாள் மூன்று நிமிடங்கள்
செலவாயிற்று. பரவாயில்லை, எல்லோருக்குமே அவரவர் துறையைச்
சார்ந்தவரிடம் ஒரு பரிவு இருக்கத்தானே செய்யும் என்று சொல்லிக்கொண்டோம்.
கோபினாத் அவர்கள் நீயா நானா என்று ஒரு ப்ரோக்ராம் செய்கிறார்கள் .
என்ன அறிவு பூர்வமான, ஆக்க பூர்வ சிந்தனைகள் அந்த இடத்தில் விளாசப்படுகின்றன
என்று எல்லோரும் கவனிக்கவேண்டும். மிகவும் சிறிய விஷயத்தை எடுத்துக்கொண்டாலும்
சமூகத்தில், குடும்ப சூழ்னிலையில், ஒரு அலுவலகத்தில், ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடமிருந்து
வித்தியாசமாக இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டி, இந்த வித்தியாசமான சூழ்னிலையிலும்
ஒரு அடிப்படை நேர்மை நிலையினை நமது தமிழ்ப்பண்பின் அடிப்படையில் எப்ப்டி மேற்கொள்ள
வேண்டிய கடமை கண்ணியம் எல்லோருக்கும் உள்ளது என்பதை மிகவும் அழகாக விளக்குகிறார்.
இருப்பினும், தமிழ், தமிழ் உணர்வு, தமிழர் பண்பாடு என்பது ஒரு நிலை. அன்றாட அவரவர் தொழில் சம்பந்தப்பட்ட வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் வேறு நிலை. அன்றைய தமிழனும் கடல் கடந்து வாணிபம் செய்தான் என்று தான்
பெருமைப்படுகிறோம். நமது தமிழகத்தை விட்டு வேற்றிடம் சென்றிடுனும் தமிழ், தமிழன் என்ற உணர்வுடன்
செயல்படுவது, வாழ்கின்ற இடத்தில் தம்முடன் வாழும் ஏனைய தமிழருக்கான உதவிகள் செய்வது,
அங்கிருந்தபடியே தமிழர் இளைஞரகளை ஊக்குவிப்பது, அவர்கள் திறனை, குறிப்பாக விஞ்ஞான, மருத்துவ, வானியல் ஆய்வகங்களில் மேம்படுத்துவது, முன் நிறுத்துவது போன்ற செயல்கள் தான் அயல் நாடுகளில் வாழும் தமிழர் கடமை .
சுப்பு ரத்தினம்.
ஆதிமனிதன் நல்ல பதிவு.
கோபிநாத் போன்றவர்களை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள கூடாது.
சபீர் பாட்டியா ஹாட் மெயில் கண்டு பிடித்தது 1996 ஆம் ஆண்டு. அவர் 1988 ஆம் ஆண்டே அமெரிக்க சென்று விட்டார். அவர் CIT யிலும் ஸ்டான்ஃபோர்டிலும் படித்த கல்வி அறிவு மற்றும் பெற்ற நட்புகள் அவருக்கு பெரிதும் உதவி இருக்கும். அவர் ஒரு வேளை இந்தியாவிலேயே இருந்திருந்தால் ஹாட்மெயிலை கண்டு பிடித்திருப்பாரா என்பது சந்தேகமே.
நாம் வருடத்திற்கு பல லட்சம் இஞ்சினியர்களை உருவாக்குகிறோம். பல டாக்டர்களை உருவாக்குகிறோம். அதில் அவ்வளவு பேர் புதிதாக எதையாவது கண்டு பிடிக்கிறார்கள். கண்டு பிடிக்க நமது கல்வி முறையே சொல்லிக் கொடுபதில்லையே.
What மற்றும் Define இரண்டும் தானே நமது கல்வி முறையில் இருக்கிறது. Why மற்றும் How இரண்டும் கிடையவே கிடையாதே.
ப்ரிடிஷ்காரன் தனது தேவைக்கான குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யும் கல்வி முறையை இன்னும் நடை முறையில் வைத்திருக்கும் வரை இதற்கு தீர்வு கிடையாது. ஆனால் விரைவில் இந்த நிலை மாறும் என்று நம்புவோம்.
கோபிநாத் : தன்னை ஒரு ஜெயமோகனாக எண்ணிக் கொள்ளும் சாருநிவேதிதா.
தமிழ் மனத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகம் பேர் படித்த சூடான இடுகைகளில் முதல் முப்பதில் (தற்போது ஒன்றாம் இடத்தில்) இருக்கிறது. ஹ்ம்ம்...கோபிநாத்துக்கு தான் இந்த பெருமையெல்லாம் போய் சேரனும்.
வெளிநாட்டில் இந்தியர்கள் சென்று வசிக்கவில்லை என்றால் இவர்களெல்லாம் கலை நிகழ்ச்சி நடத்துவம், பணம் வசூல் செய்யவும் எங்கு போவார்கள் ?
ம்... சரியாகத்தான் சொல்றீங்க...
ஆனாலும்... நாம எப்பவுமே மூளைய அடுத்தவங்களுக்காக பயன்படுத்தியே பழக்கப்பட்டுட்டோம்... இதிலிருந்து விடுபடுறது.. ஒண்ணும் அவ்வளவு ஈஸி இல்ல...
இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.
ம்ம்... நான் நீயா நானா-வின் அல்லது கோபிநாத்-ன் விசிறி அல்ல. பல பேரை சென்றடையும் ஒரு நிகழ்ச்சியில் இங்கு சொன்னால் அது பலருக்கும் சென்றடையும் என்ற வகையில் அவர் தன் மன வருத்தத்தை/எண்ணத்தை பதிவு செய்கிறார். அதை கூட தவறான கண்ணோட்டத்தில் பதிவிட்டு/கேள்விகேட்டு இருக்கிறீர்கள்.
நன்றி திரு. பழனி கந்தவேல் சார்.
நன்றி வெளங்காதவன் அவர்களே.
நன்றி பட்டாபட்டி.
நன்றி அமுதா கிருஷ்ணா.
//பி.ஈ, டாக்டர் என படித்து விட்டு குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து படிப்படியாக முன்னேறுபவர்கள் நிறைந்த உலகம் இது. பி.பி.ஏ படித்து விட்டு சேல்ஸில் இருந்ததை சொல்லும் போது நமக்கு அவர் மீது பச்சாதாபம் ஏற்படுத்த முயன்றார்.//
Rightly said.
நன்றி கோவை நேரம்.
நன்றி சூரி.
// வாழ்கின்ற இடத்தில் தம்முடன் வாழும் ஏனைய தமிழருக்கான உதவிகள் செய்வது,
அங்கிருந்தபடியே தமிழர் இளைஞரகளை ஊக்குவிப்பது, அவர்கள் திறனை, குறிப்பாக விஞ்ஞான, மருத்துவ, வானியல் ஆய்வகங்களில் மேம்படுத்துவது, முன் நிறுத்துவது போன்ற செயல்கள் தான் அயல் நாடுகளில் வாழும் தமிழர் கடமை .//
நச்சுனு சொன்னீங்க. இது தான் தற்போதைய தேவை. இதில் நாம் சற்று பின் தங்கி உள்ளோம் (மற்ற சமூகத்தை ஒப்பிடும்போது) என்றே நான் நினைக்கிறேன்.
நன்றி சத்யப்ரியன்.
//நாம் வருடத்திற்கு பல லட்சம் இஞ்சினியர்களை உருவாக்குகிறோம். பல டாக்டர்களை உருவாக்குகிறோம். அதில் அவ்வளவு பேர் புதிதாக எதையாவது கண்டு பிடிக்கிறார்கள். கண்டு பிடிக்க நமது கல்வி முறையே சொல்லிக் கொடுபதில்லையே.//
இது எல்லோருக்கும் உள்ள கவலை தான். அதிலும் நம்மை போன்றவர்களுக்கு அதிகம். ஏனென்றால் அவ்வளவு அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் (படிப்பில் தான்) ஆனால் அதே நேரம் நல்ல நல்ல கண்டு பிடிப்புகளை உலகுக்கு இவர்கள் தான் அதிகம் தருகிறார்கள் என்பதை நேரில் பார்க்கும் போது.
Post a Comment