வீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத்த தகவல். அப்படியென்றால் எங்கள் வீட்டிற்க்கு இரண்டு துயிலறையிலும் இரண்டு அலமாரிகள், சமையல் அறையில் தேவையான அடுக்குகள் மற்றும் வரவேற்பறையில் அலங்கார பொருட்கள்/புத்தகங்கள் வைக்க ஒரு பெரிய செல்ப் என மொத்தம் 500/600 அடிக்கு வேலைகள் இருக்கிறது என்றால் ஐந்து/ஆறு லட்சம் செலவாகும் என்று கணக்கு போட்டு பார்த்தவுடன் சற்று அதிர்ந்து தான் போய் விட்டேன்.
அம்மாவிற்கு இம்மாதிரியான விசயங்களில் ஓரளவு அனுபவம் இருப்பதால் அவரிடம் கேட்டேன். பிறகு இரண்டு பேரும் உட்கார்ந்து தோராயமாக கணக்கு போட்டோம். பொருட்களுக்கு மட்டும் எவ்வளவு செலவாகும்? ஆசாரியர்கள் இம்மாதிரியான வேலைகளுக்கு எவ்வளவு சார்ஜ் செய்கிறார்கள் என சிறிதாக ஹோம் வொர்க் செய்து பார்த்தோம். எப்படி பார்த்தாலும் இவர்கள் சொல்லும் 1000 த்தை தொடவே இல்லை. சரி நாமே பொருட்களை வாங்கி கொடுத்து ஆசாரி வைத்து வேலைகளை செய்வோம் என களத்தில் இறங்கி இன்றோடு ஒரு மாதம் ஆகிறது.
90% சதவிகித வேலைகள் முடித்தாயிற்று. பெரும்பாலும் இம்மாதிரியான விசயங்களில் எனக்கு அறிவு கொஞ்சம் கம்மி. அண்ணனுக்கு எல்லா விசயமும் தெரியும். அதே நேரத்தில் எவ்வளவு நாட்களுக்கு அவரையே தொந்தரவு செய்வது என்று நான் எடுத்த சின்ன ரிஸ்க் ஓரளவு நன்றாக போனது. அது மட்டும் இல்லாமல் இம்மாதிரியான வேலைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எதை உபயோகிக்க வேண்டும்/கூடாது என பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது.
வேலை முழுதும் பிளைவுட் மற்றும் மைக்கா மூலம் செய்திருக்கிறோம். மைக்காவிற்கு பதிலாக பிளைவுட் மற்றும் விநியரும் உபயோக படுத்தலாம். அப்படி செய்தால் ஒரிஜினல் மரத்தாலான மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதில் வார்னிஷ் அடிப்பது போன்ற மற்ற வேலைகள் உண்டு. ஆதலால் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு மைக்காவுக்கு தாவி விட்டோம்.
முதலில் பிளைவுட். இது சதுர அடி 20 ரூ 30 ருபாய் என்று தொடங்கி 100 ரூபாய்க்கும் மேல் கிடைகிறது. பிராண்டட் எல்லாம் 100 ரூபாய் அளவிற்கு விற்கிறது. நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும். ஆனால் இதில் தான் ஒரு சூட்சமம் இருக்கிறது. எல்லா வேலைகளுக்கும் இம்மாதிரியான முதல் தர பிளைவுட் போட கூடாது. உதாரணமாக லாப்ட் என்று சொல்லக்கூடிய இடங்களில் கதவுகள் போடும் போது அதிக வெய்ட்டான பிளைவுட் உபயோகபடுத்தினால் கொஞ்ச நாள் கழித்து கதவுகள் இறங்கி விட வாய்ப்புண்டு. நல்ல தரமான பிளைவுட் போட வேண்டும் என்று நினைத்தால் ஒரு சதுர அடி 60 ரூ, 70 ரூபாய்க்கு உள்ளதை வாங்கினால் போதும். அதே போல் லாப்ட் பொதுவாக ரூம் உள்ளே இருப்பதால் அதற்க்கு வாட்டர் ப்ரூப் மெட்டீரியல் தேவை இல்லை. சமையலறை போன்ற இடங்களுக்கு வாட்டர் ப்ரூப் மெட்டீரியல் அவசியம் தேவை.
நாங்கள் சமையலறை மற்றும் ஷோ கேஸ்சிற்கு மட்டும் வாட்டர் ப்ரூப் முதல் தர மைக்கா போட்டோம். மற்றவை எல்லாம் நடு தரம். அதாவது சதுர அடி 70 ரூபாய்க்கு.
பெரும்பாலான பிளைவுட் விற்கும் கடைகள் பிராண்டட் பொருட்களை விற்க ஆர்வம் காட்டுவதில்லை அதற்க்கு பதிலாக அவர்களாக ஒரு பிராண்ட் வைத்துக்கொண்டு இதை போடுங்கள் சார், அதை போடுங்கள் சார். இது பிராண்டட் மாதிரியே ஸ்ட்ராங்காக இருக்கும். விலையும் கம்மி என்று கூறி அவர்கள் பொருட்களை விற்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தரமான பிளைவுட் என்றால் நன்கு கனமாக, ஒரு நுனியில் இருந்து பார்த்தால் நேராக (வளைவு இல்லாமல்) இருக்க வேண்டும்.
அடுத்ததாக மைக்கா. இதுவும் லோக்கல் முதல் பிராண்டட் வரை பல கம்பெனிகள் உள்ளது. விலை வித்தியாசமும் அப்படியே. கம்பெனி மைக்கா ஒரு சீட் (8*4 அடி) 600 முதல் ஆயிரம் தாண்டியும் கிடைக்கிறது. நாங்கள் வெளி புறத்திற்கு கம்பெனி மைக்காவும் உள்ளே போடும் தட்டுகளுக்கு half white என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற சாதாரண மைக்காவும் உபயோகபடுத்தினோம்.
இம்மாதிரி பிளைவுட் மைக்கா வேலைகள் எதுவாக இருந்தாலும் அதன் durability மைக்கா எதை வைத்து ஓட்டப்படுகிறது/எவ்வாறு ஒட்டப்படுகிறது? ப்ளைவுட்/மைக்காவின் தரம் மற்றும் சீதோசன நிலை/உபயோகப்படுத்தும் முறை பொறுத்தே அமைகிறது(இன்னும் ஏதாவது இருக்கா)?.
அவையெல்லாம் எது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...
படத்தில் உள்ளது எங்கள் வீட்டின் சமையல் அறை அல்ல.
share on:facebook
11 comments:
ரொம்ப பெரிய வேலை. கவனமாக செய்யணும். நான் டெக்கரேட்டரை வெச்சு செஞ்சேன். (சாமான் வாங்கி கொடுத்து அலைய முடியாது என்பதால) ஆனா பக்கத்துலேயே இருந்து நமக்குத் தேவையான மாதிரி செஞ்சு வாங்கணும்.கொஞ்சம் கண்ணசந்தாலும் பட்ஜட்டை தூக்கி விட்டுவாங்க. :)
உங்க பகிர்வால புதுசா செய்ய விரும்பறவங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைக்கும். பகிர்வுக்கு நன்றி
அருமையான முயற்சி.நாமாக செய்தால் தான் ஏன்,எதற்கு & எப்படி போன்று கேள்விகள் கேட்டு மிச்சப்படுத்தலாம்.
நான் போன வருடம் வீடு கட்டும் போது சூளையில் போய் ப்ளைவுட்,மைக்கா,சைடில் ஒட்டும் டேப்,ஃபெவிக்கால்,ஸ்க்ரூ அப்படி இப்படி என்று வாங்கி கொடுத்து ஆசாரி வைத்து செய்து கொண்டேன்.டெக்கரேட்டரை வைத்து செய்தால் பட்ஜெட் எகிறிடும்.
கொஞ்சமா இல்லை லோ லோவென்று இதற்காக அலைந்தேன்.
நான் ஒரு இண்டீரியர் டிசைனர்தான்...20 முதல் 25 % வரை மார்ஜின் வைப்பேன்..
தரமான பொருட்களை மட்டுமே உபயோகிப்பேன்..வட இந்திய கார்பெண்டர், பெயிண்டர் இவர்கள் மட்டுமே நல்ல ஃபினிசிங் தருவார்கள்..
இங்கு கோவையில் மாடுலர் கிச்சன் 1100 / வினியர், 950/ லேமினேட், 750 / போஸ்ட் பார்மிங் சார்ஜ் பண்னுகிறேன்..
நீங்களே செய்வதால் மொத்தவிலையில் 20 % கம்மியாகும்...ஆனால் ஆட்களை வைத்து வேலை வாங்க கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும்..
//ரொம்ப பெரிய வேலை. கவனமாக செய்யணும். //
ஆமாம் தென்றல்.
//உங்க பகிர்வால புதுசா செய்ய விரும்பறவங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைக்கும்.//
அப்படியா. ரொம்ப சந்தோசம்.
நன்றி குமார். அதனால் தான் நானே செய்ய முடிவு எடுத்தேன்.
@அமுதா கிருஷ்ணா said...
//கொஞ்சமா இல்லை லோ லோவென்று இதற்காக அலைந்தேன்.//
Me too...பட் நிறையா தெரிஞ்சுக்க முடியுது. சூளைனு ஒரு இடம் இருக்கிறதே இப்பதான் எனக்கு தெரியும்.
விபரங்களுக்கு நன்றி கோவை நேரம்.
ஓரளவு நானும் அதை தான் எதிர் பார்கிறேன் (20 முதல் 30 சதவிகிதம் மிச்சமமாகும் என்று)
//ஆட்களை வைத்து வேலை வாங்க கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும்.//
ஊரிலிருந்து ஆட்களை கொண்டு வந்ததால் நாம் சொன்னபடி ஓரளவிற்கு வேலை செய்தார்கள்.
வட இந்தியாவில் மர வேலைகள் பிரமாதமாக இருக்கும். நாங்களும் முன்பு எங்கள் வீட்டில் ஆள் வைத்து தான் செய்து கொண்டோம்.
உங்கள் பதிவு மூலம் நிறைய விபரங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
நல்ல பதிவு. ஒரு சந்தேகம் - ச.அடிக்கு 1000 ரூபாய் கேள்பவர்களும் இப்படித்தானே செய்வார்கள்?
Post a Comment