தமிழகம் என்னை விரட்டுகிறது. அதலால் கஷ்மீரில் இருந்து கேரளா வரை தமிழகம் தவிர இந்தியாவில் வேறு ஏதாவது ஒரு மத சார்பற்ற மாநிலத்தை தேடி போக போகிறேன் என்று ஆவேசத்துடன் பேட்டி அளித்துள்ளார் கமலஹாசன்.
இதுவரை தான் இரண்டு முறை திவாலாகி போய் இருப்பதாகவும் தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் திவாலாகும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தனக்கு இசுலாமிய ரசிகர்கள் பலர் இருப்பதாகவும், தான் என்றுமே தனது நற்பணி மன்றங்களில் இசுலாமிய சகோதரர்கள் அதிகம் சேர்ந்து பணியாற்றுவதை விரும்பியதாகவும் தெரிவித்துள்ள கமல், ஒரு M.F. ஹுசைன் எப்படி வெளிநாட்டிலிருந்து தன் கலை பணியை தொடர்கிராரோ அதே போல் தானும் தாய் தமிழகத்தை விட்டு வெளியே செல்ல போவதாக தெரிவித்துள்ளார்.
'விஸ்வரூபம்' நஷ்டமடைந்தால் தன் சொத்து முழுவதையும் விற்று விநியோகிஸ்தர்கள் பணத்தை திருப்பி எடுத்துக்கொள்ளலாம் என்று மனம் வருந்தி தெரிவித்துள்ளார்.
இறுதியாக, தன்னை இவ்வாறான அரசியலில் இழுக்க வேண்டாம் எனவும், தனக்கு தன் நேர்மையின் மேல் மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு கூடியிருந்த நிருபர்களின் வேறு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் கமல் தன் பேட்டி முடிந்ததும் திரும்பி விட்டார்.
share on:facebook
No comments:
Post a Comment