இன்று மாலை மூன்று மணிக்கெல்லாம் 'நீலம்' காரணமாக பெரும்பாலான IT கம்பெனிகள் முன்னரே மூடி விட்டார்கள். எங்கள் கம்பெனி பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது தான் அந்த காட்சியை கவனித்தேன்.
சென்னை சிறுசேரியில் உள்ள மிக பெரிய IT கம்பெனி அது. 'Elevation' என்று சொல்வார்களே. அதற்காக இக்கம்பெனியின் மேல் பறவை பறப்பது போல் இருபுறம் ரெக்கைகள் விரிந்திருப்பது போலும் மிக பெரிய இரும்பு குழாய்கள் மூலம் வடிவமைத்து இருப்பார்கள்.
நான் எதார்த்தமாக எங்கள் பஸ்ஸில் இருந்து பார்த்தபோது தான் அதை கவனித்தேன். பக்கவாட்டில் உள்ள இந்த புறா ரெக்கை போன்ற அமைப்பு கொண்ட இரும்பு குழாய்கள் அப்படியே சரித்து போய் கிடந்தன. இவை நிச்சயம் அக்கம்பெனியில் உள்ளவர்கள் கவனித்து இருப்பார்கள். ஆனால், அதை வெளி காட்டவில்லை என நினைக்கிறன். பெயர் கெட்டுவிடுமோ என்ற எண்ணமாக இருக்கலாம். ஏன் என்றால் அந்த IT கம்பெனியும் மிக பிரபலமானது. அக்கட்டிடத்தை கட்டியதும் ஒரு பிரபல நிறுவனம் தான்.
இதுவே கட்டிடத்தின் மேல் பிராமாண்டமாக இருக்கும் மிக பெரிய குழாய் அமைப்புகளுக்கு இந்த புயலில் ஏதும் ஆகி இருந்தால். நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. இம்மாதிரி கட்டிடங்கள் கட்டும் போது, அதுவும் ஒரு காலத்தில் வயல் வெளிகளாக இருந்த நிரப்பரப்பில், இம்மாதிரி மிக பெரிய கட்டிடங்கள் கட்டும் போது 'நீலம்' போன்ற புயல் மழையை தாக்கு பிடிக்க முடியும் அளவுக்கு ஆராய்ந்து கட்டுவது நலம்.
எப்படியாவது அவ்வாறு இரும்பு குழாய்கள் சரிந்து இருந்ததை புகைபடம் எடுத்து விடலாம் என நினைத்தேன். முடியவில்லை. அதற்குள் எங்கள் பஸ் நகர்ந்து விட்டது. என்னடா கம்பெனி பேர் சொல்லாமல் ரொம்ப பம்முறானு பாக்குறீங்களா? ரெண்டு விஷயம். நானும் ஒரு IT கம்பெனியில் வேலை பார்கிறேன். ஆதாலால், முழுதும் தெரியாமல் இன்னொரு கம்பெனியை பற்றி சொல்லக் கூடாது. இரண்டாவது இந்த ட்விட்டர்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமைகள். எதை எழுதினால் என்ன கேஸ் போடுவார்கள் என்றே தெரியவில்லை. ஏன் நமக்கு ஊர் பொல்லாப்பு?
அப்பா...கரண்ட் வந்ததும் ஒரு பதிவை போட்ட திருப்தி.
படம்: எங்கள் கம்பெனியின் வாசலில் உள்ள மரங்கள் தலை விரித்து ஆடியபோது க்ளிக்கியது.
படம்: எங்கள் கம்பெனியின் வாசலில் உள்ள மரங்கள் தலை விரித்து ஆடியபோது க்ளிக்கியது.
share on:facebook
2 comments:
இம்மாதிரி கட்டிடங்கள் கட்டும் போது, அதுவும் ஒரு காலத்தில் வயல் வெளிகளாக இருந்த நிரப்பரப்பில், இம்மாதிரி மிக பெரிய கட்டிடங்கள் கட்டும் போது 'நீலம்' போன்ற புயல் மழையை தாக்கு பிடிக்க முடியும் அளவுக்கு ஆராய்ந்து கட்டுவது நலம். ///
கரெக்ட்....
கட்டிடங்கள் கட்டும் பொது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது
Righttu !!
Post a Comment