உலகில் மற்ற அனைத்து உறவுகளும் ஏதோ ஒரு காரணத்தால் நம்மால் மட்டுமே முடிவு செய்யப் படுவதில்லை. அன்னை, தந்தை, அக்காள், அண்ணன் ஏன் மனைவி கூட நம்மால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை தவிர.
அதிலும் பள்ளி கல்லூரி கால நண்பர்கள். அவர்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. வேலையில் சேர்ந்த பிறகு ஏற்படும் நட்புகள் வேறு. அவர்களிடம் எல்லாவற்றையும் நாம் பகிர்ந்து கொள்ள முடியாது. ஸ்டேடஸ், ஈகோ, கவுரவம் என பல காரணங்கள் அதற்குள் வரும். ஆனால், பால்ய நண்பர்கள் அப்படி இல்லை. அவன் சாப்பாட்டை நாம் சாப்பிட்டு, காசில்லாத போது சிறிதும் யோசிக்காமல் மாம்ஸ், ஒரு அஞ்சு ரூபா இருந்தா கொடேன் என்று கேட்டு விடுவோம்.
அப்படி ஒரு பால்ய நண்பரை கடந்த மாதம் சந்திக்க நேர்ந்தது. ஒரே ஊர் என்றாலும் எப்பவாவது இந்தியா வந்து கொண்டிருந்த போது அவ(ரை)னை சந்திக்கும் வாய்ப்பு பெரும்பாலும் கிடைத்ததில்லை. அதற்க்கு கரணம் அவர் தற்போது ஒரு மிக பெரிய தொழில் அதிபர். சென்ற முறை தஞ்சை சென்றிருந்த போது அவரின் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எதிரே நண்பர் வந்தார். பார்த்தவுடன் சிறிது மலைத்து நின்று விட்டு, பிறகு சுதாரித்து என்னை அடையாளம் கண்டு கொண்ட பின், அவரின் முகத்தில் சந்தோசத்தை பார்க்க வேண்டுமே. எனக்கும் தான்.
கைகளை இறுக பிடித்துக் கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கையிலேயே, அவரை சுற்றி ஓரிரு முக்கியஸ்தர்கள் எதற்கோ அவருக்காக கத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, சரிப்பா, நீ எப்ப ப்ரீயா இருப்பனு சொல்லு. நான் வந்து பார்கிறேன் என்றேன். நண்பர் அதை பற்றியெல்லாம் கவலை படாமல், தன்னுடன் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க தொடங்கிவிட்டார்.
இவன் என்னுடன் பள்ளியில் படித்தவன். என்னுடைய பெஸ்ட் பிரண்டு. ரொம்ப வருடங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கிறோம் என்று பழைய கதைகளை சிறிது நேரம் எல்லோருடனும் பகிர தொடங்கி விட்டார். பரிட்சையில் காப்பி அடித்தது முதல், கட் அடித்து விட்டு சினிமா போனது வரை.
நாங்கள் எல்லாம் அதை படித்து, இதை படித்து, எங்கெங்கோ சென்று ஒரு வருடத்தில் சம்பாதித்ததை, சம்பாதித்துக் கொண்டிருப்பதை, நண்பர் தன தொழில் மூலம் ஓரிரு மணி நேரத்தில் கல்லா கட்டிவிடுவார். அது மட்டுமில்லை. இன்று தஞ்சை நகரில், முக்கியமான ஒரு தொழில் அதிபர். பிராதான தொழிலான 'ஸ்வீட் ஸ்டால்' தவிர, பழமுதிர்சோலை, கல்யாண மண்டபம் என்று அவரின் தொழில் சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் காரணம், உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டும் தான். பள்ளி நாட்களிலேயே, பள்ளி விட்டு வீடு திரும்பினாலும், மீண்டும் பள்ளிக்கு வரும் முன்பும், ஸ்வீட் தயாரிப்பில் தானும் உட்கார்ந்து, அதன் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்ட நண்பர் இன்றும் அவ்வப்போது ஸ்வீட் போடும் போது தானும் தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்.
தீபாவளி மற்ற பண்டிகைகளின் போது தஞ்சை ரயில்வே நிலையம் அருகே உள்ள நண்பரின் ஸ்வீட் ஸ்டால் வழியே செல்லும் பேருந்துகள் கூட சில சமயம் நிறுத்தப்பட்டு டிரைவர், கண்டக்டர், பிரயாணிகள் என அனைவரும் அவரின் கடையில் இனிப்புகளை வாங்கி செல்வர். இவை எல்லாவற்றுக்கும் காரணம், தரமான இனிப்பு, கார வகைகள் நியாயமான விலையில் கிடைப்பதே. உதாரணத்திற்கு, சென்னையில் உள்ள பிரபல இனிப்பு கடைகளின் விலைகளை ஒப்பிட்டால், இங்கு அதில் சரி பாதி தான் இருக்கும்.
பெரிய தொழில் அதிபர் மட்டுமன்றி நண்பர் பலருக்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் படிப்புக்கு மட்டுமன்றி பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். நண்பர்களை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வதில் யாருக்கு தான் பெருமை இல்லை. அந்த வகையில், தஞ்சை 'பாம்பே' ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் என் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை தான்.
தஞ்சை சென்றால், பாம்பே ஸ்வீட் ஸ்டாலில் இனிப்பு வகைகளை வாங்கி சுவைத்து பாருங்கள். அடுத்த முறை தஞ்சை சென்றால் மீண்டும் வாங்காமல் வர மாட்டீர்கள். பாம்பே ஸ்வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது, சந்திரகலா மற்றும் ட்ரை குலோப்ஜாமுன். குடிப்பதற்கு பாதாம் கீர்.
share on:facebook
13 comments:
ok good
தஞ்சை 'பாம்பே' ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் என் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை தான்.
வாழ்த்துகள் நட்புக்கு !!
சூப்பர் நண்பர்.அடுத்து போகும் போது கடைக்கு போகணும்.அங்கு அசோகா இல்லையா?
ஆதிமனிதன்: எப்பவாவது நீங்களும் நானும் ஒரே நேரத்தில் தஞ்சையில் இருந்தால் சில முக்கிய இடங்களை ஒன்றாய் சுற்றி வரலாம்... (இவரை பார்ப்பதையும் சேர்த்து )
தஞ்சை சென்றால் நான் செய்யும் கடைசி வேலை: பம்பாய் சுவீட் ஸ்டாலில் சுவீட் வாங்கி கொண்டு சென்னைக்கு ரயில் ஏறுவது தான்.
அமுதா மேடம்: அங்கு அசோகா அமர்க்களமா இருக்கும் சாப்பிட்டு பாருங்க
கொடுத்து வைத்தவர் நீங்கள்...
நண்பருக்கும் பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துக்கள்...
@நன்பேண்டா...! said...
//ok good //
அட என்ன பொருத்தம். 'நண்பேண்டா' பதிவுக்கு நண்பேண்டா பதிவரிடமிருந்து வாழ்த்து. நன்றீங்கோ.
நன்றி இராஜராஜேஸ்வரி
அமுதா மேடம்: அசோகாவும் அங்கு ஸ்பெஷல் தான். சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.
@மோகன் குமார் said...
//ஆதிமனிதன்: எப்பவாவது நீங்களும் நானும் ஒரே நேரத்தில் தஞ்சையில் இருந்தால் சில முக்கிய இடங்களை ஒன்றாய் சுற்றி வரலாம்... (இவரை பார்ப்பதையும் சேர்த்து )//
நிச்சயமாக மோகன். எனக்கும் ஆசை தான். ஆனால், நாம் இன்னமும் சென்னையில் சந்திக்கவிருந்ததே நடை பெறவில்லை. அதை நினைத்தால் தான்..
//தஞ்சை சென்றால் நான் செய்யும் கடைசி வேலை: பம்பாய் சுவீட் ஸ்டாலில் சுவீட் வாங்கி கொண்டு சென்னைக்கு ரயில் ஏறுவது தான். //
மீ டூ...
நன்றி தனபாலன்.
நட்புகள் தொடரட்டும்.
சுவீட் பார்சல் அனுப்புங்கள் :))
அந்தக்காலத்தில் அதாவது 1962 ல்
லஞ்ச் டயத்தில் வீட்டில் கட்டிக்கொடுத்த சாப்பாட்டை முடித்தபின்
பாம்பே ஸ்வீட் ஸ்டாலுக்கு நண்பர்கள் சகிதம் படையெடுத்து
வருத்த மிந்திரிப்பருப்பு வாங்கிக் கொறித்த நினைவு வருகிறது. அங்க
ஜாங்கிரி ஜோர் ஜோர்.
அப்ப மிந்திரிபருப்பு விலை, மயக்கம் போட்டு விழந்து விடாதீர்கள்.
கிலோ ரூபாய் 37.
ஆனா, தங்கத்தின் விலையும் அப்ப பவுன் ( 8 கிராம்) ரூபாய் 134 தானே.
சுப்பு தாத்தா.
Post a Comment