Thursday, October 25, 2012

ஊரெங்கும் வெள்ளக்காடு. 'அம்மா'வுக்காக கொட்டும் மழையில் புதிய சாலைகள்.

உலகத்திலேயே நம் தமிழக அரசியல் தலைவர்கள் தனி ரகம். அது அம்மாவாக இருந்தாலும் சரி ஐயாவாக இருந்தாலும் சரி.

சில காலம் நான் வட மாநிலங்களில் இருந்திருக்கிறேன். நம்ம ஊர் லெட்டர் பேட் கட்சியின் ஆடம்பரம் கூட பெரிய கட்சிகளின் கூட்டங்கள், அவற்றில் கலந்து கொள்ள வரும் தலைவர்களின் வரவேற்புகளில் இருக்காது. ஆனா நம்ம ஊர் அரசியல் வாதிகள் இருக்கிறார்களே?

கடந்த ஒரு வாரமாக சென்னையின் பெரும் பகுதி இடங்கள் நீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ரோடு எங்கே என்று தெரியாத அளவிற்கு தண்ணீர் முழங்கால் முட்டும் தேங்கி கிடக்கிறது. பல IT கம்பெனிகள் அமைந்துள்ள OMR ரோடும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இத்தனைக்கும், இதற்க்கு எக்ஸ்பிரஸ் வே என்று பெயர். துரைப்பாக்கத்தில் ஆரம்பித்து சோளிங்க நல்லூர் வரை இரு புறமும், தண்ணீர் குளம் போல் தேங்கி (இன்று வரை) நிற்கிறது.

இதனால், பேருந்துகள் முதல், ஆட்டோ, பைக்குகள் வரை எல்லோரும் ஸ்லோ ரேசில் போவது போல் நகர்வதே தெரியாத அளவிற்கு அவ்வளவு மெதுவாக ஊர்ந்து கொண்டு போய் வருகிறன. அதே போல் வேளச்சேரி செல்லும் அனைத்து இணைப்பு சாலைகளும். நத்தை வேகத்தில் தினமும் பயணம். இவை எல்லாம் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாதா என்ன?

இதை எல்லாம் விட்டு விட்டு, 'கிடக்கறது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணையில வை' என்று பெருங்களத்தூர் - கேளம்பாக்கம் இணைப்பு சாலையை இந்த கொட்டும் மழையில் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று நான் வேறு சொல்ல வேண்டுமா? அங்கு புதிதாக அமைய உள்ள காவலர் குடியிருப்புக்கான  அடிக்கல் நாட்டு விழாவிற்கு அம்மா அவ்வழியே வருவதால்.

அது மட்டுமா? ஐம்பது அடிக்கொரு வரவேற்ப்பு பேனர், நூறு அடிக்கு ஒரு போலிஸ் என ஏரியாவே திருவிழா களையில். அவ்வழியே ரெகுலராக போய் வருபவர்களுக்கு தெரியும். ஒரு முறையாவது நீங்கள் மூக்கை பொத்திக்கொள்ளாமல் அந்த இணைப்பு சாலையை கடக்க முடியாது. ஆடு மாடு என எந்த மிருகம் இறந்து போனாலும் அங்கு தான் வந்து போட்டு விட்டு போய் விடுவார்கள். இன்று அந்த நாற்றம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

இதே போல் யாராவது ஒரு புண்ணியவான் வேளச்சேரி சாலையிலும், OMR சாலையிலும் ஏதாவது ஒரு திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா என்று ஏற்பாடு செய்யுங்கப்பா. அங்குள்ள மக்கள் எல்லாம் உங்களை வாழ்த்துவார்கள்.

இப்படிக்கு,

தினம் தினம், தேங்கி கிடக்கும் மழை தண்ணீரால் வண்டி ஓட்ட முடியாமல் தவிக்கும் அப்பாவி குடிமகன்.   

share on:facebook

4 comments:

அமுதா கிருஷ்ணா said...

இங்கே எங்கள் வீடு இருக்கும் 200 அடி ரோடு துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் ரோடில் ஒரு லைட்டும் எரியாது. நிறைய பேர் ஏர்போர்ட் செல்ல பயன்படுத்தப்படும் இந்த ரோடில் (குரோம்பேட்டை-கீழ்கட்டளை சிக்னல் வரை மட்டும்) 4 டாஸ்மார்க்.அங்கே எரியும் சீரியல் லைட் வெளிச்சத்தில் ஹெட் லைட் வெளிச்சத்தில் தான் மற்ற வண்டிகள் போகணும். ஆனால்,மழை தண்ணீர் தேங்கலை.எதாவது ஒரு குறையுடன் தான் நாம் வாழ பழகிக்கணும்.

Unknown said...

ஆட்சிக்கு யார் வந்தாலும் இது மெகாத் தொடர்தான்

திண்டுக்கல் தனபாலன் said...

வருடா வருடம் இந்தப் பிரச்சனை மட்டும் தலை தூக்கும்...

Guhan said...

THIS IS THE BANE OF TAMIL NADU

LIKEWISE POLICE FORCE ARE DEPLOYED FOR SECURITY PURPOSES LEADING TO SO MANY ROBBERIES ELSEWHERE

OFFICIALS CREATE DISTANCE BETWEEN MINISTERS & PUBLIC AND MINISTERS ALSO START LIKING THAT....

Post a Comment