எனக்கு தெரிந்து ஆண்களின் கால்கள் கவர்ச்சி பகுதி இல்லை. ஆனால், இந்த IT நிறுவனங்கள் எங்கிருந்து தான் கண்டு பிடித்தார்களோ? யார் சொல்லிக் கொடுத்தார்களோ? ஆண்கள் இப்படி உடை அணிய வேண்டும். அது வெளியே தெரிய கூடாது. இது வெளியே தெரியகூடாது என ஆண் ஊழியர்களை மட்டும் காய்த்து விடுகிறார்கள்.
பின்ன என்னங்க? திங்கள் முதல் வெள்ளி வரை பார்மல்ஸ் இல்லை பிசினஸ் காஷுவல்ஸ் என்று கழுத்து முதல் கால்வரை மூடிக் கொண்டு அது பத்தாதுன்னு கழுத்து மேல் பட்டன் வரை போட்டிருக்க வேண்டுமாம். அடிக்கும் நூறு டிகிரி வெயிலில் தினமும் ஷூ வேறு போட்டுக் கொள்ள வேண்டும். இது எல்லாம் ஆண் ஊழியர்களுக்கு மட்டும் தான். பெண் ஊழியர்களுக்கு?
அவர்கள் சேலையில் ஆரம்பித்து வெஸ்டர்ன் பார்மல்ஸ் வரை அவர்கள் விருப்பப் பட்டதை அணிந்து கொள்ளலாம். ஷூ போட வேண்டிய கட்டாயம் இல்லை. கை வைத்த சட்டை அணிய வேண்டிய ரூல்ஸ் இல்லை. வார நாட்களில் ஜீன்சை தவிர எது வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம்.
அட இதுவாவது பரவாயில்லீங்க. வெள்ளிக்கிழமை அன்று காஷூவல்ஸ் என்று தான் பேர். அது பெண்களுக்கு மட்டும் தான். ஆண்கள் 'டீ' ஷர்ட் போடலாம். ஆனால் அது காலர் வைத்ததாக இருக்க வேண்டும். அப்படியே காலர் வைத்த 'டீ' ஷர்ட் போட்டாலும், அதில் எந்த வித வாசகமோ, படங்களோ இருக்க கூடாது. அதிலும் குறிப்பாக மற்ற கம்பெனிகளின் லோகோ இருக்கவே கூடாது.
ஆனால், பெண்கள் மட்டும் ஸ்லீவ்லெஸ் பனியன்கள் அணிந்து வரலாம். டிசைன் போட்ட பனியன்கள் அணிந்து வரலாம். முக்கியமாக காலில் செருப்பு போட்டுக் கொண்டு வரலாம். தெரியாம தான் கேக்குறேன். பெண்கள் ஸ்லீவ்லெஸ் போட்டால் அது கவர்ச்சி இல்லை. ஆண்கள் காலர் இல்லாத 'டீ' ஷர்ட் போட்டால் அது மட்டும் கவர்ச்சியா? செருப்பு அணிந்து வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்படி என்ன வித்தியாசத்தை கண்டு பிடித்தார்களோ? செருப்பு அணிந்து வருவது பார்மல்ஸ் இல்லை என்றால் பெண்கள் மட்டும் எப்படி செருப்பு அணிந்து வரலாம்?
இது மட்டுமா? ஷிப்டில் வேலை பார்த்தால், வேலை முடிந்து வீட்டிற்கு 'கேப்' இல் போகும் போது பெண்களாக இருந்தால் அவர்கள் வீட்டு வாசற்படியில் இறக்கி விட வேண்டும். இது நிச்சயம் செய்ய வேண்டியது தான். ஆனால் அதே நேரத்தில் அதுவே ஆண்களாக இருந்தால் தெரு முக்கு தான். அது நடு சாமமாக இருந்தாலும் 'கேப்' டிரைவர், சார் ஜென்ட்ஸ் எல்லாம் தெரு முனையில் இறக்கி விட்டால் போதும்னு அட்மின்ல சொல்லிட்டாங்க அப்படின்பார். ஏன் தெரு நாய்கள் ஆண்களை கடிக்காதா? இல்லை தெருவோர பள்ளங்கள் பெண்கள் விழுவதற்கு மட்டும் தானா?
நான் என்னா சொல்றேன். பெண்களுக்கு என்று நிச்சயம் சில சலுகைகள் வேண்டியது தான். ஆனால், இந்த மாதிரி உடை விசயத்திலும், பாதுகாப்பு விசயத்திலும், நாங்கள் பெண்களுக்கு சலுகைகள் வேண்டாம்னு சொல்லலை. எங்களுக்கும் அத தாங்கனுதான் சொல்றோம்.
ஹ்ம்ம்...இதெல்லாம் கேக்கறத்துக்கு யாருமே இல்லையா? அது யாருப்பா அது? போடா போடா புண்ணாக்கு பாட்ட இப்ப போடுறது?
IT - Is it only for women?
share on:facebook
8 comments:
வசதிக்கேற்பவும், வாழும் சூழல் தட்ப வெட்பம், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப உடை அணிவதே அனைவருக்கும் நல்லது. வெப்பம் நிறைந்த சென்னையில் கூட கோட் சூட் எல்லாம் எதுக்கோ என எனக்குத் தெரியவில்லை ..
:))
Aangalukkaaga vaathada vantha vakkeel !!
இதே கேள்வியை 8 வருடங்களுக்கு முன் என் ஹெச்.ஆரை கேட்டேன். பதில் சொல்ல தெரியவில்லை. 'அது அப்படித்தான்'னுட்டார்...
அவரவர் விருப்பம்...
அதானே!... :-) எனக்கும் இந்தக் கேள்வி உண்டு. நம்ம ஊர்ல இப்படின்னா.. சிங்கப்பூர் எல்லாம் அநியாயம்.
சேம் பீலிங்ஸ் ஆஃப் இண்டியா..... "அதுவே ஆண்களாக இருந்தால் தெரு முக்கு தான். அது நடு சாமமாக இருந்தாலும் 'கேப்' டிரைவர், சார் ஜென்ட்ஸ் எல்லாம் தெரு முனையில் இறக்கி விட்டால் போதும்னு அட்மின்ல சொல்லிட்டாங்க"
இப்போ இதைவிட உன்னோன்னு என்னான, லெக்கின்ஸ் ன்னு ஒரு உடைய எல்லா நாட்கள்ளையும் உடுத்தாறங்க, இங்கே சில பய புள்ளைங்கை கிராமத்திலிருந்து வாராங்கள, அது சும்மா பாத்தா கூட, "ஸீடி தட் வில்லேஜ் இடியட் கி இஸ் ஆல்வேஸ் ஸ்டேரிங் அட் மீ" ஒரே பீட்டரு. கரும்பு கட்டோட இருந்தா எறும்புக்கு என்ன வேளைங்கிறேன்.
வெள்ளி கிழமை வேஷ்டி போட பெர்மிஷன் கேட்டு போராடி பாருங்க..
ஒட்டு மொத்த ஆண்களின் குமுறல்களை கொட்டியிருக்கிறீர்கள். கலக்கல்.
Post a Comment