நம்மூரில் சில, மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் சில பெண்கள் தங்கள் துப்பட்டாவை அதன் உண்மையான பயன் பாட்டுக்கு மேல் பயன் படுத்துவார்கள். அதாவது மாரப்பை மறைக்க பயன் படுத்துவதை தாண்டி தங்கள் முகத்தையும் அதனால் மறைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறோம். ஒன்று டூ வீலரில் போகும் போது. மற்றொன்று தங்களுக்கு பிடித்த இனியவருடன் அதே டூ வீலரில் பின்னால் உட்கார்ந்து கொண்டு/கட்டி பிடித்துக் கொண்டு செல்லும் போது தங்களை யாரும் பார்த்து விட கூடாது என்பதற்காக.
இதற்க்கெல்லாம் காரணம் நம்மூர் கலாச்சாரம் பண்பாட்டின் படி திருமணம் ஆகும் முன் இன்னொரு ஆணுடன் சேர்ந்து செல்வதை இன்னமும் நம் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்பதால். அதே நேரம், மேலை நாடுகளில் அவ்வாறான கலாச்சாரம் இல்லை என்பது நம்முடைய பொதுவான கருத்து. அது பெருமளவில் தவறு. கண்ணியமானவர்களும் நல்ல கலாச்சாரமும் உலகெங்கும் பரவி இருக்கிறது. என்ன ஒன்று? நமக்கு தவறாக தெரியும் ஒன்று வேறொரு கலாச்சாரத்தின் படி அவர்களுக்கு சரியாக படும். இது பல காலமாக நாம் கடை பிடித்து வரும் முறைகளினாலும் பழக்க வழக்கத்தினாலும் ஏற்படுவது.
சரி நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். சமீபத்தில் அமெரிக்காவில் பிரபலமான கால் பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ஒருவர் (இவர் ஏற்கனவே திருமணமானவர்) இன்னொரு பெண்ணுடன் தனியாக தனது காரில் சென்றார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். அதாவது இதுவும் ஒரு காரணமாக கூறப் படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் திருமணமான ஒருவர் வேறொரு பெண்ணுடன் தனியாக செல்வது ஒன்றும் ஒரு பெரிய குற்றமான காரியமாக நமக்கு தெரிவில்லை என்றாலும், அவ்வாறு அவர் செய்திருக்க கூடாது என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்...
திருமணமான இவர், தன் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தனியாக காரில் செல்வது என்பது தன் மனைவிக்கு செய்யும் துரோகம். அதே போல் அவர் தனது அணிக்கும் ஏன் துரோகம் செய்ய மாட்டார் என்பது தான் அணியின் தலைமை குழு தற்போது எழுப்பும் கேள்வி. அமெரிக்காவில் குடும்ப உறவுகள் அவ்வளவு வலுவானது இல்லை என்பது தெரிந்த ஒன்று தான். இருப்பினும் தற்போது அங்கும் குடும்ப உறவுகளை காத்து நெடுநாள் அதே கணவன்-மனைவியுடன் உறவுகளை தொடரவே விரும்புகிறார்கள்.
ஆனால், அதே நேரத்தில் பிடிக்காதவருடன் நம்மை போல் காலம் முழுதும் குழந்தைகள், குடும்ப கவுரவம் போன்ற காரணங்களுக்காக அவர்கள் தொடர்ந்து வாழ விரும்புவதில்லை. அதே போல் இங்குள்ள குழந்தைகளும், தங்கள் தந்தையோ, தாயோ வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலையில் புதிதாக வரும் அம்மாவையோ, அப்பாவையோ ஸ்டேப் பாதர், ஸ்டேப் மதர் என மிகவும் ஈஸியாக புது உறவுகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஒன்றி விடுகிறார்கள்.
அதே போல் கணவன்/மனைவி பிரிந்து போன பின் அந்த நிகழ்வையும் அவர்கள் முதலில் சற்று வருத்தமாக இருந்தாலும் பெரும்பாலனோர் மறு மணம் செய்த பின் மை எக்ஸ் ஹஸ்பண்ட/எக்ஸ் வைப் என்று சர்வ சாதாரணமாக அடுத்தவர்களிடம் பேசிக் கொள்வார்கள். அதே சமயம் நீண்ட நாள் கணவன் மனைவியாக இருக்கும் தம்பதிகள், நாங்கள் இருபது வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்கிறோம் எங்களுக்கு திரு'மணம் ஆகி முப்பது வருடங்கள் ஆகின்றன என்பதை பெருமையாக கூறிக் கொள்வார்கள்.
ஒரு முறை என் குழந்தையின் தோழி எங்கள் வீட்டிற்கு வார விடுமுறையில் வந்திருந்தாள். மாலை வீட்டுக்கு கிளம்பும் போது, நான் கொண்டு வந்து விடவா என கேட்டேன். அதற்க்கு அவள், இல்லை நான் எங்கள் அம்மா வீட்டிற்க்கு போகிறேன். என் அப்பா என்னை என் அம்மா வீட்டில் விட்டு விடுவார் என கூறியதை கேட்டு முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் பிறகு தான் என் மகள், 'her parents got separated Dad' என்று புரிய வைத்தாள். இதை விட கொடுமை என்ன வென்றால் இருவரும் அடுத்த அடுத்த தெருவில் தான் பிரிந்து வசிக்கிறார்கள். இப்படி பட்டவர்களை தான் அமெரிக்காவில் சிங்கிள் மாம், சிங்கிள் டாட் என்பார்கள். ஹ்ம்ம்...அமெரிக்கா சில சமயம் 'ஆ'மெரிக்கா தான்.

share on:facebook
7 comments:
நேற்று விஜய் டிவியில் நீயா நானாவில் கணவன் மனைவி பற்றிய டாபிக். அப்போது அமெரிக்காவில் ஒவ்வொருவரும் பல திருமணம் செயவது பற்றி பேசி கொண்டிருந்தோம்
//திருமணமான இவர், தன் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தனியாக காரில் செல்வது என்பது தன் மனைவிக்கு செய்யும் துரோகம். //
என்னங்க இது இந்த விஷயத்தில் இந்தியாவை விட கட்டுபெட்டியா இருக்கு அமேரிக்கா? காரில் போனாலே தப்பா? காரில் போகையில் தப்பு செய்தால் தானே தப்பு?
அமெரிக்கா பற்றி இப்படி கூறுவார்களே இது மிக பிரபலம் " My children and your children are playing with our children".
தமிழ் மணம் டிராபிக் ரேன்க் நூறுக்குள் வந்து விட்டது, வாழ்துக்கள்
//மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தனியாக காரில் செல்வது//
எதுக்குங்க போவாங்க?
நான் பதிவில் கூறியிருந்தது போல், தற்போது அமெரிக்கர்களும் Infidelity பற்றி நிறைய யோசிக்க கவலை பட ஆரம்பித்து விட்டார்கள். அவரவர்களும் தங்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என நினைப்பது மனித இயல்புதானே.
// My children and your children are playing with our children//
அமாம், ஆமாம்.
//தமிழ் மணம் டிராபிக் ரேன்க் நூறுக்குள் வந்து விட்டது, வாழ்துக்கள்//
நன்றி மோகன். மேலே உள்ள என்னுடைய கமென்ட்டிலேயே தங்களை குறிப்பிட மறந்து விட்டேன். சாரி.
99 போதுங்க அதுக்கு மேல நம்மால எழுத முடியாது...
நல்ல வெயிலில் டூவீலரில் போகும் போது தலை,முகத்தினை மூடி கொள்வதற்கு துப்பட்டா மிக அருமையாக பயன்படும்!!!!
// My children and your children are playing with our children//
வெளங்கிடும்..
நம் நாட்டில் நடக்கும் கள்ளக் காதல் குற்றங்களைப் பார்க்கும் போது 'ஆ' மெரிக்கா தேவலாம்தான்.
Post a Comment