Tuesday, April 16, 2013

IT: அதிகரிக்கும் தற்கொலைகளும், விவாக முறிவுகளும்

சென்னையில் திருமணமான 8 மாதத்தில் IT யில் பணிபுரிந்த வாலிபரும் அவருடைய மனைவியும் அதிகாலை 3 மணிக்கு வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை. பெங்களூரில் சாப்ட் வேர் இஞ்சினியர் தூக்கிட்டு தற்கொலை. கடந்த ஓரிரு வாரங்களில் செய்தி தாள்களில் வெளிவந்த மனதை வதைத்த செய்திகள்.

இது சற்று அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல. யோசித்து பார்த்தால் பொதுவாக தற்கொலைகள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு உடனே எடுக்கும் முடிவு என்பார்கள். இது அதையும் தாண்டியது போல் தான் எனக்கு தெரிகிறது. விடியற்காலை 3 மணிக்கு தம்பதி சகிதமாக மொட்டை மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொள்வது என்றால் ஜீரணிக்க முடியவில்லை. அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழி இல்லை, குழந்தை குட்டிகளை கப்பாற்ற வழி இல்லை என்று வறுமையின் பிடியில் சிலர் தற்கொலை செய்து கொள்வதை கேட்டிருக்கிறோம். ஆனால், கை நிறைய சம்பாதிக்கும் இவர்களுக்கு என்ன பிரச்னை என தெரியவில்லை.

என்னை பொருத்தவரை இதற்க்கெல்லாம் அவர்களின் சுற்றமும் பெற்றோர்களுமே காரணம் என கூறுவேன். சாதாரண குடும்பங்களில் பிள்ளைகள் வேலைக்கு சென்று திருமணம் ஆன பின்பு கூட பெற்றோர்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள். எங்கே செல்கிறார்கள், எப்படி செலவு செய்கிறார்கள் என விசாரித்து கொண்டே இருப்பார்கள். எங்கள் வீட்டில் இன்னமும் என் அம்மா (அப்பா இருந்தவரை அப்பாவும்) இந்த மாதம் என்ன செலவு செய்தாய்? இதை ஏன் செய்கிறாய்? அதை ஏன் செய்ய வில்லை என கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அது தான் நமக்கும் நம்மை. நம் மீது அக்கறை கொண்டவர்கள் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்டால் நாம் பதில் சொல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை எப்போதும் தந்து கொண்டே இருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக இன்று நன்றாக சம்பாதிக்கும் இளைஞர்களின் பெற்றோர்கள் இதை கடை பிடிப்பதில்லை. அது தான் இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு காரணம்.

என்னுடைய நண்பர் ஒருவர் மிக பெரிய தொழில் அதிபர். காலை முதல் இரவு வரை தொழிலை பற்றி மட்டுமே சிந்திக்க நேரம் இருந்தாலும், இரவு ஒரு அரை மணி நேரம் தன் வயது முதிர்ந்த அம்மாவிடம் அன்று நடந்த நல்லது கேட்டது என அனைத்தையும் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து சொல்லி விட்டு அவரை படுக்க வைத்து விட்டு தான் மற்ற வேலைகளை கவனிப்பாராம். அது தானே நண்பா இந்த வயதில் அவர்களுக்கு வேண்டும்? நாம் அவர்களோடு பேசுகிறோம், அவர்களிடம் கருத்து கேட்கிறோம் என்கிற எண்ணமே அவர்களை பல காலம் வாழ வைக்கும் என்பார். எதற்கு இதை சொல்கிறேன் என்றால் நாம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டோம், நமக்கு தெரியாதது அவர்களுக்கு என்ன தெரிந்து விட போகிறது என்கிற மனநிலையே நம்மை பெரியவர்களிடம் இருந்து தள்ளி வைக்கிறது. நமக்கு ஒரு பிரச்னை என்று வரும் போது யாரிடம் போய் சொல்வது என்று தெரியாமல் தவறான முடிவுக்கு இட்டு செல்கிறது.

நான் எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. என்னுடைய நண்பர்கள் என் பிராஜக்ட்டில் வேலை செய்யும் பலரும் தங்கள் அக்காள், தங்கைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் நிறைய செய்கிறார்கள். அம்மாதிரியான ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு ஒரு பொறுப்பு வந்து அதை அவர்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மேலே நடந்துள்ள சம்பவங்கள் பெரும்பாலும் இம்மாதிரி எந்த கவலையும் இல்லாதவர்களிடம் தான் அதிகம் நடப்பது போல் தெரிகிறது.

சமீபத்திய செய்தி ஒன்றில் தெரிந்து கொண்டது. 2012 ல் சென்னை போலீசாரிடம் வந்த குடும்பம் சார்ந்த பிரச்சனைகளில் 50 % மேல் IT யில் பணிபுரிபவர்களிடம் இருந்து தானாம். அதில் பாதிக்கும் மேல் உப்பு சப்பு இல்லாத விவகாரங்கள். என் கணவர் திருமணத்திற்கு முன் வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட வெளியில் அழைத்து செல்வார். இப்போது அது போல் செய்வதில்லை என்பது போன்ற புகார்கள். தனியே சுயமாக வாழ்வது, வாழ கற்றுகொள்வது நல்ல விஷயம் என்றாலும், அதற்கும் ஒரு மன பக்குவம் வேண்டும். அது வரும் வரை அல்லது ஒரு சிறிய காலத்திற்காவது பெரியோர்களுடன் சேர்ந்து இருப்பது பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வழி வகுக்கும். இல்லாவிட்டால் ஒரு சிறிய சந்தோசத்திற்காக ஓட்டல் செல்வது போய் அது அழைத்துக்கொண்டு போகாதது ஒரு மிக பெரிய குற்றமாக பார்க்கப்படுகின்றது.

எனக்கு தெரிந்த குடும்பத்தில் ஒருவரின் மகன் IT யில் நல்லதொரு வேலையில்  அமெரிக்காவில் இருந்தார். திருமணத்திற்கு முன்பே லோன் போட்டு சென்னையில் ஒரு மிக பெரிய அபார்ட்மெண்ட் வாங்கினர். வாங்கியது தவறில்லை. அதை முற்றிலும் பர்னிஷ் செய்து வாங்கினார். அவருக்கே தெரியும் அவர் அப்போது ஒன்றும் இந்தியா திரும்ப போவதில்லை என்று. இருந்தும் பர்னிஷ் செய்த வீட்டை வாடகைக்கு தான் விட்டார். அதுவும் அவர் பிராஜக்ட்டில் இந்தியாவில் வேலை பார்த்தவர்களுக்கு. பிறகென்ன வாடகை கூட மார்க்கெட் நிலவரத்தில் பாதி  தான் கிடைத்தது. இதையெல்லாம் அவருடைய விவசாய தந்தை என்னிடம் சொல்லி ஒரு முறை வருந்தினார். அதை சொல்லி கூடவே இதையும் சொன்னார். ஆரம்பத்திலேர்ந்தே அவன் அதிகமா சம்பாதிக்கிறார், சம்பாதிக்கிறார் என்று யாரும் அவனை கேள்வி கேட்பதில்லை. அதன் பலன் தான் இன்று நாங்கள் அனுபவிக்கிறோம் என்று.

வேலைக்கு சேர்ந்த அடுத்த வாரத்திலேயே கிரெடிட் கார்ட் அப்ளிகேஷன், ஓரிரு மாதத்தில் கார் லோன், ஓரிரு வருடத்தில் ஹவுசிங் லோன். இது தான் இவர்களின் பிரச்னை. எல்லாவற்றிலும் அவசரம். ஏன் வேறு யாருமே தற்கொலை செய்து கொள்வதில்லையா என கேட்டால், அவர்களுக்கு ஆயிரம்  ஆயிரம் பிரச்சனைகள் இருந்திருக்கும். நல்லா சம்பாதிக்கும் இவர்கள் ஏன் இம்மாதிரி பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது தான் என் ஆதங்கம்.

அடுத்ததாக ஈகோ, ஈகோ, ஈகோ.அமெரிக்காவில் என் நண்பன் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்து கொள்கிறான். அவ்வப்போது வீட்டில் இருந்தபடியே ப்ரீ லான்சராக பணிபுரிந்து அவருடைய பாக்கெட் மணியை தேற்றி கொள்கிறார். அவருடைய மனைவி தான் மெயின் source of income. ஆனால் அதை நண்பர் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சகஜமாக எல்லோரிடமும் கூறுவார். ஆனால், நம்மூரில் கணவனும் மனைவியும் வேலைக்கு சென்றால் யார் அதிகம் சம்பாதித்தாலும் பிரச்னை தான். நம் டீம் மேட் பெண்களுடன் நாம் வெளியே லஞ்ச் போய் வரலாம். ஆனால் அதுவே நம் மனைவி அவர்கள் டீமுடன் போய் வந்தால் நமக்கு சற்று இடிக்கும்.

எது எப்படியோ, குழந்தையற்ற பெற்றோர்களில் யாரரவது தற்கொலை செய்து கொண்டால் அது அவர்களுடன் முடிந்து விடுகிறது. ஆனால், சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டு விட்டு இவர்கள் எப்படி தான் அந்த முடிவிற்கு செல்கிறார்களோ தெரியவில்லை. பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட IT வாலிபருக்கு 1 1/2 வயதில் ஒரு குழந்தை உள்ளதாம். அவர் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமை தாங்காமல் தான் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வைத்துள்ளாராம்.

யார் மனதையும் புண்படுத்த இதை நான் எழுதவில்லை. முதல் பாராவில் கண்ட செய்திகளால் என் மனது புன்பட்டதின் வெளிபாடே இது. மேலே கூறியவை அனைத்தும் என் சொந்த கருத்தாகும்.

share on:facebook

16 comments:

Avargal Unmaigal said...

ஈகோ, ஈகோ, ஈகோ. அது இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது... அதனால் தான் தற்கொலைகளும் விவாகரத்தும் அதிகமாகி கொண்டிருக்கின்றன

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

இவர்கள் எங்கள் சேலத்தை சேர்ந்தவர்கள்தான்.அந்த பெண் வேலைக்கு செல்வேன் என்று பிடிவாதம் பிடித்ததாகவும், கணவன் குழநதி பெரும் வரை வேலை வேண்டாம், நான் நிறைய சம்பாதிக்கிறேன் அதுவே போதும் என்று எடுத்து சொல்லியும் அந்த பெண் பிடிவாதம் பிடித்ததாகவும் அதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் திடிரென அந்த பெண் குதித்து விட்டதாகவும் சொன்னார்கள். பெண்ணின் தாய் தந்தை, 'என் பெண்தான் பிரச்சினை ,மருமகன் நல்லவர்தான் ' என்று சொல்லியுள்ளனர்.இதில் அடுத்த பெரிய கொடுமை என்னவென்றால், அந்த ஆணின் தாயின் முதல் மகன் ஒரு விபத்தில் இறந்துவிட ,இந்த மகன் இப்படி என அந்த தாயின் நிலை?பெற்றோர்கள் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றுதானே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.அவர்கள் சேலத்தில் உள்ளனர்.எப்படி தெரியும், இப்படி அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருகின்றனர் என்று.இதை இதை விட பெரிய விஷயம், பெண்களின் காதல்.பெற்றோர்களின் கட்டாயத்துக்காக கல்யாணம் செய்து கொண்டு , பழைய அலுவகத்துக்கே செல்ல விரும்புவது ,அந்த காதலனும் வேண்டும்...கொடுமை.

Yaathoramani.blogspot.com said...

சுருக்கமாகச் சொன்னால்
அதிகச் சுதந்திரமும்
கட்டுப்பாடற்ற சுதந்திரமும்தான்
காரணமாகப் படுகிறது என நினைக்கிறேன்
அதிகம் சிந்திக்கச் செய்த பதிவு
வாழ்த்துக்கள்

அமுதா கிருஷ்ணா said...

போதும் என்ற மனம் குறைந்து கொண்டே வருகிறது.கிரெடிட்,கார்,வீட்டு லோன் என்று 30 வயதிற்குள்ளாகவே எல்லாமே வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்ற அவசரம்.அவசரமா டிக்கெட்டும் வாங்கி விடுகிறார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அதிக எதிர்ப்பார்ப்பால் அளவில்லாத ஆசை, எதிலும் திருப்தியற்ற வாழ்வுமுறை - இவை இரண்டும் ஆணி வேர்கள் என் நினைக்கிறேன்...

கவியாழி said...

இதற்கெல்லாம் காரணம் மனமுறிவுதான்

ஆதி மனிதன் said...

@Avargal Unmaigal said...
//ஈகோ, ஈகோ, ஈகோ. அது இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது... //

உண்மைதாங்க...

ஆதி மனிதன் said...

@Ponniyinselvan/karthikeyan said...
//பெண்ணின் தாய் தந்தை, 'என் பெண்தான் பிரச்சினை ,மருமகன் நல்லவர்தான் ' என்று சொல்லியுள்ளனர்.//

அப்ப எந்த அளவிற்கு அந்த வாலிபர் துன்பத்தை அனுபவித்து இருப்பார். மனசு கனக்கிறது.

ஆதி மனிதன் said...

@Ramani S said...
//அதிகம் சிந்திக்கச் செய்த பதிவு
வாழ்த்துக்கள்//

நன்றி ரமணி.

ஆதி மனிதன் said...

@அமுதா கிருஷ்ணா said...
//அவசரமா டிக்கெட்டும் வாங்கி விடுகிறார்கள்.//

அதனால் இருப்பவர்களுக்கும் அல்லவா மன உளைச்சல் அவஸ்தை...

ஆதி மனிதன் said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//அதிக எதிர்ப்பார்ப்பால் அளவில்லாத ஆசை, எதிலும் திருப்தியற்ற வாழ்வுமுறை - இவை இரண்டும் ஆணி வேர்கள் என் நினைக்கிறேன்...//

சரியாக சொன்னீர்கள் தனபாலன்.

ஆதி மனிதன் said...

நன்றி கவியாழி கண்ணதாசன்.

reverienreality said...

My friend...You can't just brand it as an IT issue...

The relationship between a man and a woman is the most complicated thing in the universe...

One problem I see among the current generation Tamil couples...

the girl is ready for today's world and tomorrow's too but unfortunately the boy has one step in yesterday's world and another in today's...

வெங்கட் நாகராஜ் said...

மனதை வருத்தும் செய்திகள்.....

அதிக பணமிருந்தாலும் கஷ்டம் தான்....

ஆதி மனிதன் said...

@ரெ வெரி said...
//My friend...You can't just brand it as an IT issue...//

My friend, I did not say that it happens only in IT. Please read it one more time. I said that I bothers me more when it happens in IT.

ஏன் வேறு யாருமே தற்கொலை செய்து கொள்வதில்லையா என கேட்டால், அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் இருந்திருக்கும். நல்லா சம்பாதிக்கும் இவர்கள் ஏன் இம்மாதிரி பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது தான் என் ஆதங்கம்.

//the girl is ready for today's world and tomorrow's too but unfortunately the boy has one step in yesterday's world and another in today's... //

Very hard to to determine who is living in Yesterday/Today/Tomorrow's world...


ஆதி மனிதன் said...

ஆம் வெங்கட். நன்றி.

Post a Comment