இன்று உலகத்திலேயே அதிக குப்பைகளை உருவாக்குபவர்கள் அமெரிக்கர்கள் தான். நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக 3-4 கிலோ குப்பைகளை உருவாக்குகிறார்கள். ஆண்டொன்றுக்கு ஒவ்வொருவரும் 100 டன் குப்பைகளை உருவாக்குவதாக கணித்துள்ளார்கள். இது மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட அளவு.
இவ்வாறு பெருகிக் கொண்டிருக்கும் குப்பைகள் அனைத்தும் பெரிய பெரிய மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கில் குவிக்கப் பட்டு மக்கி வைக்கப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால், பல குடியிருப்புகள், நகரங்கள் இந்த குப்பை மேட்டின் மீதுதான் எழுப்பப் பட்டுள்ளது. அமெரிக்கர்களின் குப்பைகளில் அதிகம் இடம் பிடிப்பது உணவு/கோக் போன்ற கேன்கள் தான். அதற்க்கு அடுத்த படியாக உணவு பொட்டலங்களின் மிச்சங்கள். அதே போல் ஒவ்வொரு பொருளும் இங்கு பாக் செய்யப்பட்டே விற்கப் படுகின்றன. ஒரு சாதாரண கேமரா வாங்கினால் அதனுடன் வரும் பாக்கிங் மட்டும் பல டப்பாக்கள் சேரும். இது எல்லாமே குப்பைகள் தான். இம்மாதிரி பாகிங்களுக்கே அதன் தயாரிப்பாளர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள்.
குப்பைகளை பற்றிய ஆராய்ச்சியை Garbology என சொல்கிறார்கள். Edward Humes என்பவர் தன்னுடைய Our dirty love affair with trash என்கிற தன் நூலில், அமெரிக்காவில் குப்பைகள் எப்படி உருவாக்கப் படுகிறது, அவை பிறகு எவ்வாறு கையாளப் படுகிறது என்பதை அழகாக எடுத்துக் கூறியுள்ளார். அவரின் கணக்குப் படி லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அமைந்துள்ள மலை அடிவாரங்களில் மட்டும் நூற்றுக்க் கணக்கான மில்லியன் டன் குப்பைகள் புதைக்கப்பட்டுள்ளன. இதனால் உருவாகும் மீதேன் வாய்வினால் பல கெடுதல்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளார். அது மட்டுமில்லாமல், மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் பொருட்கள் இங்குள்ள பசிபிக் கடலில் கலந்து போய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக முப்பது சதவிகிதத்திற்கும் மேலான குப்பைகள் முறையாக அழிக்கப் படுவதில்லை. இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைகளே. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தான் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு வந்தது. முதன் முதலில் பிளாஸ்டிக்கை வைத்து லாண்டரி பைகள் தான் உருவாக்கப் பட்டது. நாளடைவில் எல்லாவற்றுக்கும் பிளாஸ்டிக் பை உபயோகத்திற்கு வந்து தற்போது உலக சுற்று புற சூழலையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
சரி, இந்த அமெரிக்க குப்பைகளால் யாருக்கு லாபம் என்கிறீர்களா? சைனாவுக்கு தான். சைனாவின் முதல் பெண் மில்லியனர் 49 வயதான Zhang Yin அவர்களின் தொழிலே அமெரிக்காவிலிருந்து குப்பைகளை வாங்கி சீனாவில் அதை ரீ சைக்ளிங் செய்து அதையே மீண்டும் கார்ட் போர்ட், பாக்கிங் பேப்பர் என்று தயாரித்து அதை மீண்டும் அமெரிக்கவிற்கே விற்பது தான் அவரின் Nine Dragons Paper கம்பெனியின் பிசினஸே.
கடைசியாக அமெரிக்காவில் குப்பைகள் குறைந்து போனால் அப்போதே அங்கு பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது என்பதற்கான அறிகுறி. ஆம், மக்கள் பொருட்களை வாங்கினால் தானே குப்பைகள் பெருகும். வாங்கும் திறன் குறைந்து போனால் குப்பைகளும் குறைந்து தானே போகும்.
நம்ம ஊர் செய்தி: எனக்கு தெரிந்து சென்னையில் நான் பார்த்த பல குளங்கள் சில காலங்களில் குப்பைகள் கொட்டப் பட்டு குப்பை மேடான பிறகு அவை ஒன்று பார்க்காகவோ, அப்பார்ட்மென்ட்டாகவோ மாறி போனதை பார்த்திருக்கிறேன்.
share on:facebook
2 comments:
கடைசியாக அமெரிக்காவில் குப்பைகள் குறைந்து போனால் அப்போதே அங்கு பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது என்பதற்கான அறிகுறி...
தகவலுக்கு நன்றி..
electronic items kuda varum kuppaigalai enna seirathune theriyalai..andha company return vangita enna??
Post a Comment