Thursday, December 6, 2012

IT அவலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்...

உலகம் பூராவும் எட்டு மணி நேர வேலை என்றால் IT கம்பெனிகளில் மட்டும் ஒன்பதரை மணி வேலை நேரம்.

இக்கரைக்கு அக்கறை பச்சை என்பார்கள். அப்படிதான் இந்த IT வேலையும். வெளியில் உள்ளவர்கள் எல்லாம் இன்று விலைவாசி உயர்வு தொடங்கி, ரியல் எஸ்டேட்டின் விண்ணை முட்டும் விலை வரைக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் இந்த IT யும், அதில் வேலை செய்பவர்களும் தான் என்கிறார்கள்.

வெளியில் இருந்து பார்க்கும் போது எல்லாம் நல்லாத்தான் தெரியும். உள்ளே வந்து பார்த்தால் தான் எங்கள் நிலைமை புரியும். கீழே சொல்லப்படும் எல்லாம் பல IT கம்பெனி நண்பர்கள் மூலம் வாய் மொழியாக கேட்டது.

நாள் முழுதும் ஏசியில் உட்கார்ந்து வேலை செய்கிறோம் என்று பலர் பொருமுவார்கள். ஆனால் IT கம்பெனிகளில் பல இடங்களில் ஏ.சி. வேலை செய்வதே இல்லை. இதை கேட்டால் 'டிசைனே'  அப்படிதான் சார் என்பார்கள். தொடர்ந்து கம்ப்ளைன்ட் செய்தால் ஒரு காற்றாடியை தூக்கி கொடுத்து விடுவார்கள். நாள் பூரா இண்டஸ்ட்ரியல் பேன் முன் உட்கார்ந்து பாருங்கள். மாலையில் வெளியே போகும் போது முகம் எல்லாம் பேயறைந்தது போல் இருக்கும்.

அடுத்து வேலை நேரம். உலகம் பூராவும் எட்டு மணி நேர வேலை என்றால் IT கம்பெனிகளில் மட்டும் ஒன்பதரை மணி நேரம் வேலை. இடையில் ஒரு மணி நேரம் மதிய சாப்பாட்டுக்கு என்றாலும் பெரும்பாலானோர் உட்காரும் இடத்திலேயே பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலையை தொடங்கி விடுவர். எட்டு மணி நேரமாக தான் இருந்தது முதலில். 2008 வாக்கில் ரூபாயின் மதிப்பு உயர்ந்த போது (ஒரு டாலர் நாற்பது ரூபாய்க்கும் குறைந்த போது) லாபம் குறைகிறது என்று சொல்லி கூட அரை மணி நேரம் வேலை பார்க்க சொன்னார்கள். இன்று ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்து ஒரு டாலர் ஐம்பத்தைந்தை தாண்டி விட்டது. ஆனால் இவர்கள் மட்டும் அதே நேரத்தை பின் பற்றுகிறார்கள்.

தீபாவளி பொங்கல் என்றால் எல்லோரும் ஓரிரு நாள் முன்பே ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டு போய் விடுவார்கள். சென்னையே வெறிச்சோடி கிடக்கும். ஆனால் அப்போது தான் அந்த ப்ரொடக்ஷன் பிராப்ளம், இந்த  இம்ப்ளிமெண்டேஷன் என்று முதல் நாள் இரவு வரை கட்டாயமாக இருக்க வைத்து விடுவார்கள்.

ஷிப்ட்டில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் ஷிபிட் முடிந்தால் கூட உடனே வீட்டுக்கு போக முடியாது. 11 ஷிப்ட் முடிந்தவன் 12 மணி ஷிப்ட் முடியும் வரை காத்திருந்து அவனோடு சேர்ந்து தான் வீட்டுக்கு கேப்பில் போக முடியும். கேட்டால் காஸ்ட் கட்டிங் சார். கேப் புல் ஆனால் தான் எடுக்க சொல்லி இருகிறார்கள் என்று அட்மினில் புலம்புவார்கள்.

படிச்சு முடிச்சோமா, வேலைக்கு சேர்ந்தோமா என்று இந்த தொழிலில் இருக்க முடியாது. வருடம் வருடம் அதை படி இதை படி அப்போதான் புரோமஷன் என்று நம் குழந்தைகளோடு சேர்ந்து நம்மையும் (வலு) கட்டாயமாக மீண்டும் படிக்க வைக்கிறார்கள். இல்லை என்றால் இன்கிரிமென்ட் கிடையாது புரோமோஷன் கிடையாது. என்ன தான் மாடு மாதிரி வேலை செய்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எந்த கம்பெனியிலும் வளர முடியாது.

ஆம், முதல் இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகள் அதிக பட்சமாக வளர்ச்சியை எதிர் பார்க்கலாம். அதன் பின் பெரும்பாலும் இறங்கு முகம் தான். இதற்க்காகவே ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு கம்பெனி மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி மாறுவது எளிதாகினும் அதன் பின் மீண்டும் முதலிலிருந்து நம் திறமையை புது கம்பெனியில் நிருபித்து காட்ட வேண்டும்.

நான் முப்பது ஆண்டுகள் செர்விசில் இருந்தேன் என்றெல்லாம் பெருமை பட அரசு ஊழியர்களால் தான் முடியும் போல். இன்னும் சில ஆண்டுகளில் IT யை சேர்ந்தவர்கள் அறுபது வயதை தொடும் காலம் வரும். ஆனால் அது வரை தொடர்ந்து IT சமூகம் வேலையில் தொடர்வார்களா என்பது சந்தேகமே. எனக்கு தெரிந்து நாற்பது நாற்பத்தி ஐந்து வயதை நெருங்கிய, நன்றாக சம்பளம் வாங்கும் IT நண்பர்கள் சிலர் தற்போதே வேலையை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். அந்த அளவிற்கு வேலை பளு. மன அழுத்தம்.

இன்னும் சில வருடங்களில் IT மீதுள்ள மோகம் நிச்சயம் குறைந்து விடும் என நம்புகிறேன்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்...

IT நிறுவனங்களும் பெண்களின் ஆடை குறைப்பும்

'ஆன்சைட்டா' அந்தப்புரமா?. IT படுத்தும் பாடு பார்ட் - 2

ஆடி தள்ளுபடியில் IT மாப்பிள்ளைகள்


share on:facebook

8 comments:

Anonymous said...

நானும் ஐடி நிறுவனம் ஒன்றில்தான் ​வே​லை ​செய்கி​றேன். நீங்கள் ​சொல்வது அ​னைத்தும் உண்​மைதான். ஆனால் ஒட்டு​மொத்த நாட்டு மக்களின் ​வே​லை நி​லை​மைக​ளோடு ஒப்பிட்டுத்தான் நம் நில​மை​யை புரிந்து ​கொள்ள ​வேண்டும் என்ப​தே, நான் எனக்கு நா​னே ​சொல்லிக் ​கொள்வது. ​தொடர்ந்து 15 வருடங்களாக டூவீலரில் பயணம் ​செய்ததாலும், 10 மணி ​நேரத்திற்கு ​மேல் வீலிங் ​சேரில் கனிணிக்கு முன்பு அமர்ந்து ​வே​லை ​செய்வதாலும் மீள முடியாது ஏற்ப்பட்ட கழுத்து வலியால், தற்​பொழுது மின்சார ​தொடர் வண்டியிலும் ​பேருந்திலும் ​வே​லைக்குச் ​சென்று வருகி​றேன். கமிட்​மென்ட் இல்​லை​யென்றால், என்​றைக்க​கோ ஒரு ஊர் சுற்றியாக இந்தியா முழுவதும் சுற்றி வரச் ​சென்றிருக்கலாம் என்ற எண்ணம் எப்​பொழுதும் ​தோன்றிக் ​கொண்​டே இருக்கிறது.

​தொடர் வண்டி மற்றும் ​பேருந்தில் வரும் ​பொழுது தினமும் ஜனங்களின் அவஸ்​தைக​ளையும் வாழ்க்​கை​யையும் ​நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பு கி​டைக்கிறது. ஒரு ஐடி ஊழியருக்கு கி​டைக்கும் சம்பளத்திலும் அலுவலக ​செளகரியங்களிலும், மதிப்பிலும் 10ல் ஒரு மடங்கு கூட கி​டைக்காத எண்ணற்ற மக்கள் அரக்​கோணத்திலிருந்தும், கும்மிடிப்புண்டியிலுருந்தும் ஏன் அவற்​றை தாண்டி திருத்தணி, ​செங்கல்பட்டு ​போன்ற இடங்களிலிருந்தும் கா​லை 5 அல்லது 6 மணிக்​கெல்லாம் கிளம்பி ​சென்​னையின் பல பகுதிகளுக்கு ​வே​லைக்குச் ​செல்வ​தையும், இரவு 10 அல்லது 11 மணிக்கு க​டைசி ​தொடர்வண்டிகள் பிடித்து ஊர்களுக்குச் ​செல்வ​தையும் தினமும் கவனித்து வருகி​றேன். வாழ்க்​கையில் என்ன சந்​தோசமும், நிம்மதியும் கி​டைக்கிறது இவர்களுக்கு என வருத்தமுற்று வருகி​றேன்.

நாம் வாங்கும் சம்பளத்தி​லே​யே நம்மால் நம் குடும்பங்க​ளை சமாளிக்க முடியவில்​லை​யே இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் தங்கள் குடும்ப ​செலவுக​ளை என்பது மிகவும் ​வேத​னை தரும் விசயமாக உள்ளது. அதிலும் வியாபார நிறுவனங்களில் ​விற்ப​னை பிரிவில் 4000ற்கும் 5000ற்கும் நாள் முழுவதும் கால்கடுக்க 10 முதல் 15 மணி​நேரம் நிற்கிறார்கள். பலர் அவசரத்திற்கு ஒதுங்க​வோ தண்ணீர் குடிக்க​வோ கூட வழியின்றி உடல்​நோக நகர் முழுவதும் அ​லைகிறார்கள்.

எப்படி பார்த்தாலும் ஒப்பீட்டளவில் ஐடி நிறுவனத்தினர் நல்ல வாழ்க்​கை​யே வாழ்கிறார்கள்.

Anonymous said...

நல்ல பதிவு வெளியில் இருந்து பார்ப்பதற்கு அனைத்தும் மின்னவே செய்யும், தொழில்நுட்பத் துறை சம்பளம் அதிகம் அதே சமயம், வேலைப் பளு, நிறைவின்மையும் அதிகமே. விருப்பமின்றி சம்பளத்துக்காக இத்துறையில் புகுந்தால் நிறைவில்லா மனமும், மன அழுத்தமும் மிஞ்சி விடும்.

Anbu said...

No Doubt..

சமுத்ரா said...

உண்மைதான்...ஆனால் மின் விசிறி கொண்டு வந்து டேபிளில் வைப்பது கொஞ்சம் ஓவர்!:)

அமுதா கிருஷ்ணா said...

என் கணவர் 46 வயது வரை ரயில்வேயில் வேலை பார்த்து விட்டு அதில் VRS கொடுத்து விட்டு சாஃப்ட்வேரில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். எதற்கு துட்டுக்கு தான். வாங்கும் சம்பளம் ஜாஸ்தின்னா வேலையும் ஜாஸ்திதான் இருக்கும் என்பார் அவர். எதற்கு புலம்பணும் என்று கேட்பார்.முடியலையா வேறு வேலைக்கு போக வேண்டியது தானே என்று புலம்பும் என் தம்பிகளை திட்டுவார். இது ஒவ்வொருவரின் மனோபாவத்தை பொறுத்தது. அரசு வேலையில் இருக்கும் போதே வாங்கிய சம்பளத்திற்கு மேலேயே வேலை செய்வார்.

உலகம் சுற்றும் வாய்ப்பு,கார் வாங்கும் வாய்ப்பு,குழந்தைகளின் யு.கே.ஜிக்கே ஒரு லட்சம் செலவு செய்யும் வாய்ப்பு இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
ஒரு காலத்தில் பணக்காரர்கள் என்று ஒரு தனி பிரிவு சமுதாயத்தில் துண்டாக தெரிவார்கள். இப்ப அப்படி பெரிசாக தெரிவதில்லை.மத்திய தரம் அதிகம் தங்கள் தரத்தில் உயர்ந்தது இந்த ஐ.டியால் தான்.

அமுதா கிருஷ்ணா said...

போன மாதம் employment exchange,E.B இரண்டுக்கும் ஒரு வேலைக்காக போனேன். அடராமா..இந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு எப்படி தான் வேலை செய்கிறாகள் என்று யோசித்து கொண்டே வந்தேன். டேபிள் கூட அரத பழசு.தூசியும்,பழைய பேப்பர் ஃபைல்களும்.உட்கார்ந்து இருக்கும் சேர் இரண்டு நாட்களில் பிய்ந்து விடும் நிலைமையில் தான் இருக்கு. மேலே தகர சீட்,ரேஷன் கடைகளும் இதே நிலைமை தான். டேபிள் ஃபேனாவது கிடைக்குதே.ஐடி கம்பெனி மாதிரி இவைகளெல்லாம் மாறாதா என்று நினைத்து கொண்டேன்.

இராஜராஜேஸ்வரி said...

இன்னும் சில வருடங்களில் IT மீதுள்ள மோகம் நிச்சயம் குறைந்து விடும் என நம்புகிறேன்.

Jayadev Das said...

IT ஒழிஞ்சா தான் நாடு உருப்படும், நடுத்தர மக்கள் வாழ முடியும். இல்லாட்டி லிவிங் டுகெதர் பண்ணி மொத்தமும் நாசமாயிடும்.

Post a Comment