சென்ற வாரம் கண்டெடுக்கப்பட்ட மாயன் காலத்து கல்வெட்டுகளில் இருந்து தமிழ் நாட்டை பற்றி அதிலும் குறிப்பாக 2013 தமிழ் நாட்டில் நடக்க கூடிய முக்கிய 10 நிகழ்வுகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறதாம். இதோ அவைதான் இது...
1. 2013 முதல் தமிழகத்தில் கரண்ட் கட் இருக்கவே இருக்காது (இப்பவே கண்ணா கட்டுதா? மேலும் படிச்சுட்டு சொல்லுங்க).
2. என் வழி தனி வழி என மீண்டும் கூறியுள்ள சூப்பர் ஸ்டார், 2013 இல் நிச்சயம் புது கட்சி ஆரம்பிப்பார்.
3. தமிழகத்தின் உடன் பிறவா சகோதிரிகள் மீண்டும் 2013 இல் பிரிய போகிறார்கள்.
4. சென்னையை பிடிக்காமல் எல்லா கொசுக்களும் வேறு கண்டத்திற்கு செல்ல முடிவெடுக்குமாம்.
5. தமிழகம் கேட்ட போதெல்லாம் தண்ணீர் திறந்து விட தயார் என கர்நாடகம் அறிவிக்கும்.
6. 2013 முதல் வாயே மூடாமல் நம் பிரதமர் பேசிக் கொண்டிருப்பாராம்.
7. தமிழ் சானல்களில் இனி அழுகை சீரியலே கிடையாது என அனைத்து டி.வி. தயாரிப்பாளர்களும் அறிக்கை விடுவார்கள்.
8. தமிழகத்தின் உடன் பிறந்த சகோதரர்கள் 2013 முதல் இரட்டை குழல் துப்பாக்கியாக சேர்ந்து செயல் பட போவதாக அறிவிப்பார்கள்.
9. பதிவர்கள் எல்லோரும் 'ஹிட்' கவுண்டர்களை எடுத்து விடுவார்களாம்.
10. இது எல்லாவற்றுக்கும் மேலாக இதற்க்கு முன்னரே டிசம்பர் 30 ஆம் நாள் உலகம் அழியுமாம்.
ஹி, ஹி, ஹி...இத நீங்க நம்பலைல. அப்ப மேலே உள்ள எதையும் நம்பாதீங்க. நல்ல விசயங்கள என்னைக்கு இருந்தாலும் பின்பற்றுங்க, பின்பற்ற உறுதி எடுத்துக்குங்க. அப்புறம் பாருங்க. ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் புது வருட பிறப்பு தான்.
டிஸ்கி: இப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லை.
share on:facebook
1 comment:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
Post a Comment