Sunday, May 13, 2012

படிப்பு: ஆறாவது பெயில். பதவி: மாநில IT (தகவல் தொழில் நுட்ப) அமைச்சர்.


நான் ஒன்னும் அப்படி சொல்லலீங்க. கீழே உள்ள தினமலர் செய்தி தான் அப்படி சொல்லுது. இது தொடர்பாக இன்று தினமலரின் இணைய தளத்தில் வந்துள்ள செய்தி கீழே...


தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், தவறான கல்வித்தகுதியை அரசுக்கு அளித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம்சாட்டி, முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முக்கூர் சுப்பிரமணியன். இவர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார். இவரது கல்வித்தகுதி, புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

6ம் வகுப்பு பெயில்:முக்கூர் சுப்பிரமணியன், 2009ம் ஆண்டு ஆரணி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்த, அபிடவிட்டில் செய்யாறு தாலுகா, கொருக்கை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1972 ஏப்ரல் 21ம் தேதி, ஆறாம் வகுப்பு படித்து பெயிலானவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அபிடவிட் விவரம், தற்போது இந்திய தேர்தல் கமிஷன் வெப்சைட்டிலும் உள்ளது.

கடந்த, 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், செய்யாறு தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தாக்கல் செய்த வேட்பு மனுவில் (2011 மார்ச் 11ம் தேதி), தமிழ்நாடு திறந்த வெளி பல்கலையில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவரம், தமிழக தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் உள்ளன.முக்கூர் சுப்பிரமணியன் கொடுத்த தகவலின்படி, 2009-10 கல்வியாண்டில் முதலாமாண்டும், 2010-11 இரண்டாம் ஆண்டும், 2011-12 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டும் படித்திருக்க முடியும். 

இதன்படி, 2012ம் ஆண்டு நடந்த தேர்வில், மூன்றாம் ஆண்டு தேர்வு எழுத தகுதி உடையவராகிறார். அதற்கான ரிசல்ட் வரும், ஜூன் மாதத்துக்கு பின் தெரியவரும். மேலும், இவர் மூன்று ஆண்டுகளும் தேர்வு எழுதி இருந்து, அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவர் பி.ஏ., முடித்ததாக கருதப்படும்.

பி.ஏ., பாஸ்?தமிழக அரசு சார்பில், வெளியிடப்படும் அமைச்சரின் விவரங்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள் அடங்கிய வெப்சைட்டில், அவருடைய கல்வித்தகுதி, பி.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது."அமைச்சராக உள்ள ஒருவர், அரசுக்கு தன் கல்வியின் விவரங்களை தவறாக கூறியுள்ளார். மேலும், அவருடைய கல்வித்தகுதியை முதல்வருக்கு, தவறாக தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து முதல்வருக்கு புகார் மனுவை அனுப்ப உள்ளோம்' என, அமைச்சரின், எதிர் கோஷ்டி, அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர்.

மேலும், அமைச்சரின் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், "2009ம் ஆண்டு பி.ஏ., முதலாமாண்டு தேர்வு எழுதியது உண்மை. அதில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறவில்லை. 
இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவே செல்லவே இல்லை. அப்படி இருக்க அவர் எவ்வாறு, பி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க முடியும்' என, கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கல்வி வளர, தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் நிலையில், அமைச்சர் இது போன்று ஈடுபட்டு வருவது கேலிக்குரியது என, அ.தி.மு.க., வினர் புலம்பி வருகின்றனர். திடீரென எழுந்துள்ள புகாரால், அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியத்துக்கு, சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எனக்கு தெரியாது:இதுகுறித்து, அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், நான் பி.ஏ., படித்து வருகிறேன். முதல் இரண்டாண்டு தேர்வு எழுதியுள்ளேன். மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவில்லை. பி.ஏ., பட்டப்படிப்பு முழுவதும் முடிக்கவில்லை. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வெப்சைட்டில், கல்வித்தகுதி என்ன வெளியிடப்பட்டுள்ளது என, எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கிறேன்.இவ்வாறு கூறினார்.

share on:facebook

3 comments:

நம்பள்கி said...

இதில் எந்த தவறும் இல்லை. படிப்பிற்கும் மந்திரி பதவிக்கும் ஒரு சம்பதம் இல்லை. முக்கால்வாசி முதல் அமைசர்கள் பள்ளியை தாண்டவில்லை. ஒரே தகுதி சினிமா!

அவ்வளவு ஏன்? அப்ப MLA -க்கு மட்டும் இந்த படிப்பு போதுமா? அவரை MLA ஆக்கும் போது அறிவு போச்சு? அவரை MLA ஆக்கும் போது அறிவு போச்சு?

Unknown said...

கைநாட்டுப் பேர்வழி கூட கல்வி அமைச்சராகவே
வரலாம்! இது ,நமது சுதந்திரம் தந்த பெருமை! தப்பு
தப்பு! உரிமை!

சா இராமாநுசம்

Vadivelan said...

Arasiyala இதெல்லாம் சகஜமப்பா...

Post a Comment