தற்போது தினமலர் இணைய தளத்தில் பார்த்த செய்தி. தலைப்பை பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி ஆகி விட்டேன். வேறு எந்த செய்தி தாளிலும் பெரிதாக ஒன்றும் போடவில்லை. இது உண்மையா?
காபூல் : அல்குவைதா இயக்க தலைவர் பின் லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ஆப்கானில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஒபாமா ரகசிய பயணம் : அல்குவைதா இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதன் முன்னாள் தலைவர் பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அவ் வியக்கத்தினரால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய பயணமாக ஆப்கான் சென்றிருந்தார்.அங்கு தலைநகர் காபூலில் அதிபர் ஹர்சாயை சந்தித்து நிதியுதவி , மற்றும் படைகளை படிப்படியாக குறைப்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். தொடர்ந்த அமெரிக்க ராணுவத்திரின் மத்தியில் பேசிய அதிபர் இந்தாண்டு இறுதிக்குள் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என கூறினார்.
உளவுத்துறை எச்சரிக்கை : அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லாடனின் நினைவு தினத்தை முன்னிட்டு தீவரவாதிகள் திடீர் தாக்குதலி்ல் ஈடுபடக்கூடும் என அமெரிக் உளவுத்துறை ஆப்கானிஸ்தானின் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
தீவிரவாதிகள் தாக்குதல் : அதிபர் ஒபாமா தனது ஒருநாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ஆப்கானி்ன் கிழக்கு மாகாண தலைநகரில் அமெரிக்க தூதரகம் அமைந்து ள்ள கிரீன்வில்லேஜ் வணிக வளாகத்தி்ல் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட அறிக்கயில் தெரிய வந்துள்ளது.
மற்றொரு தாக்குதல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பினர் பொறுப்பேற்ற நிலையில் மேற்கு பகுதியில் குடியிருப்நு வளாக பகுதியில் சக்தி வாய்நத குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சுமார் 6 பேர் வரை பலியாகியிருக்க கூடும் என தலைமை போலீசார் அயூப் சாலங்கி தெரிவித்தார்.
share on:facebook
No comments:
Post a Comment