இந்த பதிவு பெண்களை தவறாகவோ தரம் தாழ்த்தியோ எழுதும் எண்ணத்தில் எழுதப்படவில்லை. நான் கண்ட/கேட்டவற்றை வைத்து தான் இதை பகிர்கிறேன்.
அமெரிக்க வாழ்க்கை அனுபவம் என்பது இரண்டு வகை. ஒன்று தனியாகவோ/அல்லது கணவன் மனைவியாக அங்கு வாழ்வது. இரண்டாவது குழந்தைகளுடன் ஒரு முழு குடும்பமாக அங்கு இருப்பது. என்னை பொறுத்த வரையில் தனியாகவும் குடும்பமாகவும் அங்கு இருக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதில் அதிக சுவாரசியம்/அனுபவங்கள் குடும்பத்துடன் இருந்த போது தான்(நம்பிட்டேன்...என்று வீட்டு அம்மணி சொல்வது கேட்கிறது).
சரி அதற்குள் போகும் முன் இந்திய பெண்களுக்கு அமெரிக்கா அதிகம் பிடிப்பதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம். மேலோட்டமாக சொல்லப்போனால் அங்கு அவர்களுக்கு வீட்டில்/மற்றும் வெளியிலும் கிடைக்கும் சுதந்திரம் தான் அமெரிக்க வாழ்க்கை பிடித்து போக முக்கிய காரணம். அதை தவிர எனக்கு தெரிந்து சில குறிப்பிட்ட காரணங்களை தான் கீழே குறிப்பிட்டுளேன்.
# உடைகள்: சென்னையை தாண்டி ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வெளியில் நடந்தால் அதை பொதுஜனம் எப்படி பார்ப்பார்கள் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அங்கு அவர்களுக்கு பிடித்தமான உடைகளை (இந்திய பெண்களை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் கவுரவமான உடைகளை தான் அணிவர்) அணிந்து கொள்ளலாம். யாரும் கேள்வி கேட்க போவதில்லை. சில ஊர்களில் அங்கிருக்கும் குளிருக்கும் வெயிலுக்கும் ஜீன்ஸ் மற்றும் ஸ்கர்ட்ஸ் அவசியமும் கூட. அதே போல் அவர்களுக்கான உடைகளும் சற்று சல்லிசு தான். இங்கு ஒரு பட்டுபுடவை வாங்கும் காசுக்கு அங்கு ஒரு டசன் உடைகளை வாங்கி விடலாம். நமக்கும் காசு மிச்சம் தானே!
# பெர்சனல் டைம்: பெண்களுக்கு அங்கு நல்ல பெர்சனல் டைம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் இருப்பதாலும், வீட்டை பெருக்க, சுத்தம் செய்ய என்று பெரிதாக ஒன்றும் இல்லாததால் (அமெரிக்காவில் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் தான் வீட்டை (vacuum cleaning) சுத்தம் செய்வார்கள் ஹி.. ஹி... ஹி...) அவர்களுக்கென்று நிறைய நேரம் கிடைக்கும். இதற்க்கு இன்னமொரு முக்கிய காரணம், பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் பெரும்பாலும் அவர்களுக்கு வீட்டு பாடங்கள் குறைவாகவே இருக்கும் அல்லது இருக்கவே இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை அவர்களே தான் செய்து கொள்ள வேண்டும். அம்மாக்கள் துணை தேவை படாது.
#குக்கிங்: அடுத்ததாக சமையல். இது ஒரு பொருட்டே இல்லை அமெரிக்காவில். இதை விட வேறு என்ன வேண்டும் அவர்களுக்கு? ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள்/பழங்களை ஒரு தடவை வாங்கி வந்தால் போதும். தண்ணீரில் கழுவ கூட தேவை இல்லை. அப்படியே நறுக்கி போட்டு சமைத்து விடலாம். பத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளும் அதிக கஷ்டமில்லை. டிஷ் வாஷர் இருக்கையிலே. ஒரு கட்டத்தில் சாண்ட் விச், பீட்சா, நூடுல்ஸ், பாஸ்டா என அவ்வப்போது சாப்பிட பழக்கி கொள்வதால் தினமும் மூன்று வேளையும் சமைக்க வேண்டும் என்ற கொடுமை அங்கு அவர்களுக்கு கிடையாது.
#நட்பு: நம்மூரிலேயே அவர்களது நட்பு வட்டாரம் பெரிதாக தான் இருக்கும். அங்கு கேட்க வேண்டுமா? எங்கள் கம்பெனியில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் என்னுடன் பணியாற்றினாலும் எல்லோரையும் எனக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு துணைவியார் இருந்தால் அவர்கள் அனைவரும் நண்பி(பர்)களாக எல்லோரையும் தெரிந்து வைத்து இருப்பார்கள். நாம் வீட்டுக்கு வந்து அலுவலகத்தில் நடந்த கதையை சொல்லி முடிக்கும் முன்பே இது தான் எங்களுக்கு தெரியுமே. ரேஷ்மா சொன்னாள், ரேகா சொன்னாள் என்று சொல்லி நமக்கு பல்பு கொடுத்து விடுவார்கள்.
#டிரைவிங் த்ரில்: அடுத்ததாக டிரைவிங் சான்ஸ். நம்மூரில் சைக்கிள் ஓட்ட திண்டாடுவான் கூட அமெரிக்காவில் ஒரே வாரத்தில் கார் ஒட்டி விடுவான். அந்த அளவுக்கு டிரைவிங் அங்கு பழகுவதற்கும் ஓட்டுவதற்கும் ஈசி. அந்த வகையில் கார் ஓட்ட கற்றுக் கொண்டால் போதும். பெண்களுக்கு அங்கு டிரைவிங் செய்வது ரொம்ப பிடிக்கும். இந்தியா போனால் மீண்டும் கார் ஓட்ட முடியுமோ முடியாதோ என்ற எண்ணத்தில் எப்போதும், நான் தான் காரை ஓட்டுவேன் என்று விடாபிடியாக நம்மிடம் காரை பிடுங்கி ஓட்டும் போது அவர்களுக்கு கிடைக்கும் சந்தோசம் ஒரு பட்டு புடவை வாங்கி கொடுத்தால் கூட கிடைக்காது என்றே எண்ணத் தோன்றும்.
#தனி குடித்தனம்(No offensive!): இது எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் பொதுவாக விரும்பும் தனி குடித்தனம். அதாவது மாமனார், மாமியார், நாத்தனார் என்ற எந்த பிச்சு பிடுங்கல் இல்லாமல் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று எந்த பிரச்னையும் இல்லாமல்(!) வாழலாம் என்ற சூழ்நிலை.
#தன்னம்பிக்கை: எனக்கு தெரிந்து நண்பர்கள் வீட்டிலும் சரி, என் வீட்டிலும் சரி, முதல் தடவை அமெரிக்கா சென்ற போது அவர்களிடம் இருந்த பயம், தன்னம்பிக்கை இன்மை, கூச்ச சுபாவம் எல்லாம் அடுத்த முறை காணமல் போய் விட்டது. இது அவர்களே ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம்.
இப்போ சொல்லுங்கள் அமெரிக்க வாழ்க்கை பெண்களுக்கு அதிகம் பிடிக்குமா பிடிக்காதா என்று? ஆமாம், ஆண்களை பற்றி கூறவேயில்லை என்பவர்கள் அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டுகிறேன்...
இதை கூட நீங்கள் விரும்பி படிக்கலாம்...
இந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்...
ஊர் உலகமெல்லாம் சண்டை போடும் அமெரிக்காவில் வீட்டில் சண்டை போட முடியாது.
share on:facebook
7 comments:
நல்ல அவதானிப்பு! அநேகமா நீங்க சொன்னது அனைத்தும் உண்மையே:-)
இந்தியாவைப்போல் வேலைக்கு உதவியாளர்கள் வைத்துக் கொண்டு அவர்களிட மாரடிப்பது இங்கில்லை.
அணிந்திருக்கும் நகைகளை அப்படியே மேஜைமேல் கழட்டி வைத்துவிட்டாலும் பிரச்சனை இல்லை. யார் வந்து எடுக்கப்போறாங்க? வேலையாட்களைக் குற்றம் சொல்லவில்லை. அநாவசியமாக அவர்களை டெம்ப்ட் செய்வானேன்?
அமெரிக்காவைப் பற்றிய மிகச் சரியான பதிவு!
Very intersting. But this article should have come in Veeduthirumbal :)
இங்கு இருப்பது சுதந்திரம்... அங்கு விடுதலை...
பிறந்த இடத்திற்கு சிறிது நேரம் / நாட்கள் சென்றாலும் அந்த சந்தோசமே தனி என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்...
நல்ல அலசல் தான்...
அடுத்த பதிவையும் படிக்க ஆவல்...:)
This is your point of view but not true. You are not able to understand lot of things from women's point of view.
நிச்சயம் பிடிக்கும், ஆனால் தமக்கான வரன்முறைகளை தாமே போட்டுக் கொள்ளவும் கற்க வேண்டும், இந்தியாவில் வரன்முறைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன, அங்கு அவ்வாறில்லை நல்லது கெட்டது நம் கையிலே தான். புரிந்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியே !
Post a Comment