Thursday, July 4, 2013

சாதி வெறி பற்றி பேசலாமா?

இன்றைய டாப் 30 தமிழ்மண பதிவுகளில் முதல் 20 இடத்தை பிடித்தது திவ்யா(காதல்)  - இளவரசன்(மரணம்) பற்றியது தான். பல பதிவுகளும் ஜாதி வெறியை எதிர்த்து தான் (சந்தோஷ படவேண்டிய விஷயம் தான்) என்றாலும், இந்த விவகாரத்தை பற்றி எழுதி எழுதி /பேசி பேசி அதுவே ஒரு எதிர்மறையான பயனை ஏற்படுத்தி விடுமோ? சாதி வெறியர்களுக்கு இன்னும் சாதி வெறியை ஊட்டி விடுமோ என நான் அஞ்சுகிறேன். மனதில் தோன்றியது. பகிர்கிறேன்.


share on:facebook

2 comments:

காமக்கிழத்தன் said...

தங்களின் ‘அச்சம்’ நியாயமானதே.
என்னுடைய கருத்தும் இதுதான்.

இறைகற்பனைஇலான் said...

இந்த சாதிகள் இருந்துவிட்டுப்போனால்தான் என்ன? என்று சிலர் எண்ணிச் சும்மா இருந்தது உண்டு.ஆனால் சாதி சும்மா இருக்காது.தான் தான் பெரியவன் என்ற குரோத எண்ணம்தான் சாதி..முதலில் தன் பொருளாதாரம் தழைக்க தன் அக்காள் ,அத்தை, மாமன் பிள்ளைகளுடன் சேர்ந்து தக்கவைக்கவே பயன்பட்டது. பின் தன் இயலாமையால் தூர உறவுகளுடன் கூடி காசு பார்த்தது. அதுவும் முடியாதபோது நெருக்கமான தனக்குத்தெரிந்த சாதியாளனின் காசுக்காக கைகோர்த்தது. இப்போது தலைவிரி கோலமாக தலைவர்களின் பதவிமூலமான பணத்தாசைக்கு அரசியலில் ஓட்டுப் பொறுக்க அலையாய் அலைகிறது. தன் தவறை மறைக்க தலைமையை ,காப்பாற்ற எந்தக் காரியமும் செய்ய தீயாய் அலைகிறது.தடுக்காவிட்டால் வன்னியர் சாதி குற்றவாளிக்கூண்டில் நிற்கும்.பார்ப்பனீயம் நமட்டுச்சிறிப்பு சிரிக்கும்.

Post a Comment