Tuesday, November 20, 2012

இந்த பதிவு(ம்) பிரச்சினை ஆகுமோ?

//'Which is the largest democracy in the world' ?

அவளே பதிலையும் சத்தம் போட்டு படித்தாள்.

India.//

வடிவேலு ஒரு படத்தில், ஒரே நாளில் கோடீஸ்வரனாவது எப்படி' என எல்லோரிடமும் நூறு ருபாய் வாங்கிக்கொண்டு கடைசியாக ஒரு ஐடியா தந்து எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்வார்.




அது போல இது நம்ம ஐடியா. அதுக்காக அடிக்கிறதா இருந்தாலும் அடிச்சுடுங்க. ஆனா, பதிவ 'லைக்' பண்ணி கமென்ட் மட்டும் போட்டுடாதீங்க. அப்புறம் அது உங்களுக்கு பிரச்சனையானால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. ஆமா சொல்லிப் புட்டேன்.

நீங்கள் கைதாகாமல் தப்பிக்க வேண்டுமானால், இப்படி தான் உங்கள் பதிவு இனி இருக்க வேண்டும். 

எல்லோரும் வாழ்க. அரசு வாழ்க, அரசியல் வாதிகள் வாழ்க. நாடு வாழ்க. பதிவுலகம் வாழ்க. பதிவர்கள் வாழ்க. கடைசியாக போலீஸ் வாழ்க.

இப்படி ஒரு பதிவு போட்டால் நீங்கள் கைதாக வாய்ப்பே இல்லை. எப்புடீ...?

இன்று காலை என் மகள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தது ஏதோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

'Which is the largest democracy in the world' ?

அவளே பதிலையும் சத்தம் போட்டு படித்தாள்.

India.

மீண்டும் சொல்லுகிறேன். இந்த பதிவை யாரும் லைக் பண்ணி கமெண்ட் போட்டு அது உங்களுக்கு பிரச்சனையானால் அதற்க்கு நான் பொறுப்பு இல்லை. ஆமா சொல்லிப் புட்டேன்.

share on:facebook

4 comments:

ப.கந்தசாமி said...

//மீண்டும் சொல்லுகிறேன். இந்த பதிவை யாரும் லைக் பண்ணி கமெண்ட் போட்டு அது உங்களுக்கு பிரச்சனையானால் அதற்க்கு நான் பொறுப்பு இல்லை.//

ஜெயில் களி நல்லா இருக்குமுங்க. வாங்க, நானும் உங்க கூட வார்றேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஜெயிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சி... வாங்க போகலாம்... (அங்கு முழு நேரம் மின்சாரம் இருக்குமில்லே...?)

வெளங்காதவன்™ said...

LOL

அன்பு துரை said...

//* எல்லோரும் வாழ்க. அரசு வாழ்க, அரசியல் வாதிகள் வாழ்க. நாடு வாழ்க. பதிவுலகம் வாழ்க. பதிவர்கள் வாழ்க. கடைசியாக போலீஸ் வாழ்க. *//

அதென்ன கடைசியாக போலிஸ் வாழ்க..!!? காவல்துறைனா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போய்டுச்சா..!!!???

இதற்காகவே நீங்கள் தனிப் பிரிவால் கண்காணிக்கப்படலாம்..!!! எச்சரிக்கை..!!

Post a Comment