அன்பார்ந்த பதிவர்களே. ஏதோ அழையா விருந்தாளியா என்னைய நினைச்சுக்காதீங்க. முகம் காட்டுவதில்லை என்றாலும், சில முதிய (அதாங்க சீனியர்) பதிவர்களிடம் அடிக்கடி தொடர்பில் உள்ளவன் தான் நான். இந்த முறை ஒரு சீனியர் பதிவரிடம் இருந்து விழாவிற்கு வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பும் வந்தது (உண்மையிலேயே பெருமையா இருந்ததுங்கறேன்). ஆனால் அவருக்கே தெரியும் நான் தற்சமயம் தமிழகத்தில் இல்லை என்பது. சரி விசயத்திற்கு வருவோம்.
எத்தனையோ மாநாடுகள் நடக்கின்றன. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதுண்டு. ஆனால் அதை எத்தனை பேர் பின் பற்றுவார்கள் அல்லது அது சம்பந்தமாக அதன் பின் முயற்சி எடுப்பார்கள் என யாருக்கும் தெரியாது. பதிவுலகம் அப்படியில்லை. இந்த பதிவுலக விழாவும் அப்படி ஒன்றும் 'ஷோ'வுக்காக நடத்தப் படவில்லை. அநேகமானவர்கள், தங்களின் அனேக பதிவுகளில் சமூகத்தை பற்றி பேசியிருக்கிறார்கள் எழுதி இருகிறார்கள். அப்படியானால் இம்மாநாட்டில் இடம் பெறப்போகும் தீர்மானங்கள் நிச்சயம் நன்மை பயப்பதாக இருக்கும்.
விழா குழுவினர் என்ன தீர்மானங்கள் வைத்திருக்கிறார்கள் என எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை மிகவும் எளிதான அதே நேரம் அந்த தீர்மானத்தை நாமே நிறைவேற்ற முடியும் என்ற வகையில் அது நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்றால் இச் சிறுவன் கூறும் சில தீர்மானங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.
1. சாலைகளில் செல்லும் போது எதிரிலோ பின்னாலோ 'ஆம்புலன்ஸ்' வண்டி வந்தால் அடுத்தவர்க்கு முன் உதாரணமாக முடிந்த அளவு நம் வண்டியை சாலை ஓரம் ஓரம் கட்டி வழி விடுவோம் என இந்நாளில் அனைத்து பதிவர்களும் உறுதி எடுப்போம்.
அந்த ஒரு நொடி ஒரு உயிரை காப்பாற்ற உதவுமே! அதில் உள்ளவர்கள் நம் உறவாக கூட இருக்கலாமே.
2. நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது அவசியம் 'சீட்' பெல்ட் அனிந்து செல்வோம். பெரும்பாலான வாகன விபத்துகளில் சீட் பெல்ட் அணியாததினாலேயே பெரும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. சீட் பெல்ட் அணிவதால் நாம் உள்ளேயே மாட்டிக்கொண்டு நசுங்கி விடுவோம் என்பது அறியாமை. Most of the death happens because of being thrown out / been hit internally என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
3. வாங்கனத்தை ஓடும் போது செல் போன் பேச மாட்டேன் என உறுதி எடுத்துக் கொள்வோம். செல் போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டியதால் ஏற்படும் விபத்துகள் உங்களை மட்டும் அல்லாமல் ஒன்றும் அறியா மற்றவர்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ணும் என்பதை நான் கூற வேண்டியதில்லை. சமீபத்து எடுத்துக்காட்டு சென்னை அண்ணா மேம்பாலத்தில் நடந்த விபத்து.
4. இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அவசியம் தலை கவசம் அணிந்து ஒட்ட வேண்டும். இரு சக்கர வாகன விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடி படுவதாலேயே உயிரழப்பு ஏற்படுகிறது. தலைக்கு வந்தது ஹெல்மெட்டோடு போச்சு என்று புதிய பழமொழி உருவாக்குவோமே!
5. அப்புறம் இது ரொம்ப ஈசிங்க. காசு பணம் செலவு இல்லைங்க. அதிலும் சென்னையை பொறுத்தவரை இதை கடைபிடிக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியமுங்க. 'குப்பையை குப்பை தொட்டியில் போடுவோம்'. இதை மக்களுக்கு விளங்க வைக்க அரசாங்கம் அவ்வளவு செலவு செய்யுதுங்க. சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லும். வீட்ட தினமும் பெருக்கி சுத்தமாக வைத்திருக்கும் நாம் வெளியில் வந்தவுடன் பேப்பரை கசக்கி ரோட்டில் தூக்கி போடுவோம். நாடு சுத்தமா இருந்தாதான் வீடும் சுத்தமா இருக்கும்முங்க.
6. வேணாங்க, இதுவே கொஞ்சம் அதிகமோன்னு இப்ப எனக்கு தோணுது. அது மட்டும் இல்லாமல், பிற பதிவர்களுக்கும் கொஞ்சம் இடம் வைப்போமே. ஆறிலிருந்து பத்தோ இல்ல அறுபதோ, நீங்க ஏதும் சொல்லனும்னு நினைச்சா அப்படியே சேத்து விடுங்க....
பதிவர் திருவிழா சிறப்பாக நடக்க இந்த சிறியவனின் வாழ்த்துக்கள். ஏதும் அதிக பிரசிங்கித்தனமா எழுதி இருந்தா மன்னிச்சுடுங்க....
share on:facebook
5 comments:
நல்ல கருத்துக்கள் நண்பரே...
விழா சிறக்க வாழ்த்துக்கள்...
கருத்துக்கு நன்றி
நன்றி தனபாலன்.
வருகைக்கு நன்றி பித்தன் ஐயா.
Very good idea
குடியை கெடுக்கும் "குடியை" ஒழித்திட,
குடியை ஆதரித்து ஜாலிக்காக கூட பதிவு எழுதவோ பேசவோ வேண்டாம் என ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் போடலாம்...
குடி போதையற்ற பதிவர்கள் & வாசகர்கள்... ஏராளமாக வந்திருந்து,
அரங்கம் நிறைந்து,
சென்னை பதிவர் மாநாடு... சீரும் சிறப்பாக நல்ல நோக்கத்தில் மக்கள் நலன் நாடும் பல ஆரோக்கியமான விஷயங்களுடன்,
குடி/சரக்கு பற்றிய வீண் வெட்டி அரட்டை இல்லாமல் இனிதே நடைபெறவேண்டும்.
Post a Comment