சமீபத்தில் சென்னை பள்ளி ஒன்றில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றிய இருதய மருத்துவ நிபுணர் Dr. V. சொக்கலிங்கம் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. மருத்துவராக பனி புரியும் ஒருவர் சுமார் ஒரு மணி நேரம் அங்கு கூடி இருந்த அணைத்து தரப்பினரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அளவு பேசியது எனக்கு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இனி அவர் பேசியதிலிருந்து...
எப்போதும் நாம் கவலை இன்றி இருக்க வேண்டும். கவலைபடுவதால் ஒன்றும் நடந்து விட போவதில்லை. நீங்கள் ஈஸ் (ease) ஆகா இருந்தால் உங்களுக்கு disease வராது.
என்னைப் பொறுத்தவரை நான் ஜாதி, மதம், மொழி ஆகியவற்றை மனிதர்களிடம் பார்ப்பதில்லை. நான் மனிதர்களை பிரித்துப் பார்ப்பது அவர்களின் ரத்த வகையை வைத்துதான். எல்லோரும் விரும்பும் ரத்த வகை O+. அப்போதுதான் நீங்கள் எல்லோருக்கும் உங்கள் ரத்தத்தை தானம் செய்யலாம். நான் உங்களுக்கு எல்லாம் சொல்ல விரும்புவது என்னவென்றால் நீங்கள் எந்த ரத்த வகையை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பீ பாசிடிவ் (B+) ஆக மாறுங்கள்.
இதை நான் சொல்லக்கேட்டு நீங்கள் எல்லோரும் கை தட்டுகிறீர்கள். எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் கைதட்டுவதால் உங்களை சந்தோசமாக மட்டுமில்லாமல் நல்ல ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறீர்கள். ஆம், நீங்கள் கைதட்டும் போது அதுவும் வேகமாக நல்ல சத்தம் வருமளவிற்கு கை தட்டும் போது அக்குபங்க்ச்சர் வேலை செய்கிறது. அதனால் உங்கள் இரு கைகள் வேகமாக அடித்துக் கொள்ளும் போது ஏற்படும் அதிர்வுகள் உங்கள் உடலில் சென்று உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. (மீண்டும் கூடத்தில் பலத்த கரவொலி) இப்ப நீங்க கை தட்டுவது எனக்காகவா அல்லது உங்க ஆரோக்கியத்துக்காகவா? (மீண்டும் கூடத்தில் பலத்த கரவொலி) .
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். உண்மையான பழமொழி அதுவல்ல. கல்லாமை, இல்லாமை, பொல்லாமை போன்றவைகளை நமக்குள் புக விட கூடாது என்பதைத்தான் அந்த காலத்தில் கூறி இருக்கின்றார்கள். அதை தான் நாம் தவறாக எடுத்துக்கொண்டோம். ஆமைக்கு நான்கு கால்கள் ஒரு தலை உள்ளது. அதற்கு ஆபத்து வரும்போது இவைகளை தன் ஓட்டினுள் இழுத்துக்கொள்ளும். அப்படி இழுத்துக் கொண்டபின் அதன் மேல் இந்த உலகமே விழுந்தாலும் அதற்கு ஒண்ணும் ஆகாது. அதே போல் நீங்களும் மேலே கூறிய தீமைகளையும் நீங்கள் இல்லாமல் ஆக்கிக்கொண்டால் உங்களை இந்த உலகில் யாரும் எதுவும் செய்ய முடியாது.
மனம், உணவு, உடற்பயிற்சி. இந்த மூன்றும் மிகவும் முக்கியம். இதை நீங்கள் சரியாக பழகிக்கொண்டால் நீங்கள் குறைந்தது 125 வருடங்கள் இந்த உலகில் வாழலாம். உங்கள் உயிர் குறைந்தது 100 வருடங்கள் வாழ தகுதி கொண்டது. என்னுடைய அலுவலகம் 8 வது மாடியில் இருக்கிறது. நான் எப்போதும் மாடிப்படிகளை தான் உபயோகிப்பேன். லிப்ட்டை உபயோகப்படுத்த மாட்டேன். ஒரு முறை புதிதாக வேலைக்கு சேர்ந்த லிப்ட் ஆபரேடர் என்னை பார்த்து, "சார், ஏன் சார் நீங்க லிப்ட்ல வரமாட்டீங்கிறீங்க? இதுல வந்தா சீக்கிரம் நீங்க மேல (மாடிக்கு) போகலாம் சார்" என்றார். நானும் சரி என்று கூறினேன். ஆமாம் லிப்ட்ல போனா சீக்கிரம் மேல (இறந்து) போகலாம் என்று (பலத்த சிரிப்பு).
நான் 41 வருடங்களாக டாக்டராக தொழில் செய்து வருகிறேன். இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் இந்த தொழில் புரிவீர்கள் என சிலர் கேட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் கடைசி வரை மருத்துவம் பார்ப்பேன். யாரும் வயதாகிவிட்டதே என்று சும்மா இருக்காதீர்கள். உங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டே இருங்கள். நான் வேலை செய்துகொண்டிருக்கும்போதே இறக்க வேண்டும் என்பதே என் ஆசை.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் நடங்கள். வேகமாக நடங்கள். காய்கறிகளை தோல் உரிக்காமல் சாப்பிடுங்கள். அதில்தான் எல்லா சத்துக்களும் இருக்கிறது. நம் வீட்டில் தாய்மார்கள் காய்கறிகளில் உள்ள எல்லா தோலையும் எடுத்துவிட்டு தான் சமைக்கிறார்கள். அந்த தோல்களை எல்லாம் மாடுகளுக்கு போடுகிறார்கள். அதை சாப்பிட்டுவிட்டுத்தான் மாடுகள் புஷ்டியாக இருக்கிறது. இதை நான் ஒரு முறை சொன்னபோது ஒருவர் எழுந்து சார் பலா பழத்தை எப்படி தோலுடன் சாப்பிட முடியும் என கேட்டார். சாப்பிடமுடிந்த காயையையோ பலத்தையோ தோலுடன் சாப்பிடுங்கள் என கூறினேன்.
எல்லோரும் சந்தோசமாக இருங்கள். நேற்று என்பது உடைந்த மண் பானை போன்றது. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நாளை என்பது மதில் மேல் பூனை போன்றது. அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாது. ஆதலால் இன்றைய பொழுதை நல்ல விதமாக செலவழித்து நிம்மதியாக வாழுங்கள்.
நீங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ வேண்டுமானால் மூன்று பேரிடம் செல்லக்கூடாது. போலீஸ்காரர், வக்கீல் மூன்றாவதாக டாக்டர். இவர்களிடம் போவதால் உங்கள் உடல் நலமும் கெடும் (அலைந்து அலைந்து) கையில் இருக்கும் காசும் கரையும்.
என்னடா இவரே ஒரு டாக்டரா இருந்து கொண்டு டாக்டரிடம் போகாதேன்னு சொல்றாரேன்னு நினைக்காதீங்க. என்னுடைய அனுபவத்தை வைத்து ஆங்கிலத்தில் "MIND YOUR HEART" என்றும் தமிழில் "இதயம் காக்க" என்றும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அதை வாங்கி படியுங்கள். படித்து முடித்தபின் என்னிடம் வர மாட்டீர்கள்.
டிஸ்கி: Dr. V. சொக்கலிங்கம் அவர்களின் முழு பேச்சின் ஒலி நாடா என்னிடம் இல்லை. என் மனதில் பதிந்ததை அப்படியே இங்கு பதிந்துள்ளேன். தவறுகள் இருப்பின் அனைவரும் மன்னிக்கவும். நன்றி டாக்டர் சார்.
share on:facebook
13 comments:
நல்ல பதிவு..
"இதயம்" கலந்த நன்றி கோவிந்த் ...நேற்று என்பது உடைந்த பானை....நாளை என்பது மதில்மேல் பூனை....இன்று என்பது கையில் உள்ள வீணை....!
அருமையான பகிர்வுக்கு, நன்றி.
நல்ல பகிர்வு. நன்றி
நீங்கள் ஈஸ் (ease) ஆகா இருந்தால் உங்களுக்கு disease வராது. ............. correct!
நேற்று என்பது உடைந்த மண் பானை போன்றது. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நாளை என்பது மதில் மேல் பூனை போன்றது. அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாது. ஆதலால் இன்றைய பொழுதை நல்ல விதமாக செலவழித்து நிம்மதியாக வாழுங்கள். ............ good advice!
வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா. தொடர்ந்து வாருங்கள்.
//இன்று என்பது கையில் உள்ள வீணை....!//
நன்றி ஸ்ரீராம். டாக்டரும் இதை தான் சொன்னார் ஆனா நான் அதை மறந்துட்டேன். அதனால எழுத விட்டுட்டேன். சாரி.
வருகைக்கு நன்றி சைவகொத்துப்பரோட்டா , மோகன் குமார் & சித்ரா.
Good one again.
I have heard of him as a famous doctor. He has proved that he is also a great orator.
The one on tortoise is good one. I guess lot of our stuff has changed over the years.
//உங்கள் இரு கைகள் வேகமாக அடித்துக் கொள்ளும் போது ஏற்படும் அதிர்வுகள் உங்கள் உடலில் சென்று உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. (மீண்டும் கூடத்தில் பலத்த கரவொலி) இப்ப நீங்க கை தட்டுவது எனக்காகவா அல்லது உங்க ஆரோக்கியத்துக்காகவா? (மீண்டும் கூடத்தில் பலத்த கரவொலி) . // நல்ல நகைச்சுவை! ரசித்துப் படித்தேன்.
good article. I happened to read it today only.
"Yesterday is a History,
Tomorrow is a mystery but
Today is a 'gift' (hence called 'present')"
I see his recorded prgram from Kalinjar TV today.My freind have that record. Very nice program.. very good program but I culdn't find anywhere that copy in webside . Just find your article... Nice article
வலை சரத்தில் இன்று உங்களின் இந்த பதிவு குறித்து எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_19.html
Post a Comment